அதுதான் விஷயம்: வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சம் அறிமுகம்- மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்த சுவாரஸ்ய தகவல்!

|

வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மற்றும் பேஸ்புக் மூலம் வாட்ஸ்அப் ரியாக்ஷன் குறித்து அறிவித்துள்ளார். பல மாதங்களாக சோதனையில் இருந்த வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சம் தற்போது வெளியாகிறது.

தேவையறிந்து பல்வேறு புது அம்சம்

தேவையறிந்து பல்வேறு புது அம்சம்

பிரபல செய்தியிடல் தளமாக வாட்ஸ்அப் திகழ்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவையறிந்து அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்கிறது. இந்த அம்சமானது பயனர்களை ஒரு இமோஜி மூலம் உடனடியாக எதிர்விணையாற்ற உதவும். ஆரம்பக் கட்டத்தில் லைக், லவ், ஸ்மைல், ஆச்சரியம், சோகம் மற்றும் நன்றி என்று ஆறு இமோஜி இருக்கும் எனவும் வரும் காலத்தில் அனைத்து இமோஜிகளும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இமோஜி முறையில் ரிப்ளை செய்யலாம்

இமோஜி முறையில் ரிப்ளை செய்யலாம்

ஒவ்வொரு மெசேஜ்-க்கும் ரிப்ளை செய்ய அதை மார்க் செய்து ரிப்ளை செய்ய வேண்டும். அது ஒரு மெசேஜ் ஆக அனைவருக்கும் காட்டப்படும். அடுத்தடுத்த தலைப்பை பேசத் தொடங்கினாலும் பழைய மெசேஜ்-க்கு ஒருவர் ரியாக்ட் செய்யும் போது அது மீண்டும் மெசேஜ் ஆக மாறும். இந்த செயலை குறைக்க ஒருவர் ஒரு மெசேஜ்-க்கு இமோஜி முறையில் ரிப்ளை செய்யும் போது அது மெசேஜ்களின் கீழ் எத்தனை இமோஜி ரிப்ளை செய்யப்பட்டிருக்கிறது என இமோஜிகளுடன் காட்டப்படும். இதை கிளிக் செய்து எத்தனை இமோஜிகள் என தனித்தனியாக பார்த்துக் கொள்ளலாம்.

சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க்

சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க்

மெட்டாவுக்கு சொந்தமான பிராண்ட்களின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க்-ன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் வாட்ஸ்அப் பெரிய பயன்பாட்டுடன் இந்த அம்சம் விரைவில் வரும் என டீஸ் செய்யப்பட்டிருந்தது. மார்க் ஜுக்கர்பெர்க் தனது இன்ஸ்டா ஸ்டோரிஸ்-ல் இந்த அம்சத்தை விவரித்து காட்டினார்.

செயல்பாட்டில் ஆறு இமோஜிகள்

செயல்பாட்டில் ஆறு இமோஜிகள்

தற்போது வரை ஆறு இமோஜிகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் நிலையில் எதிர்கால புதுப்பிப்பில் வாட்ஸ்அப் ரியாக்ஷன்ஸ் பயன்பாட்டில் கூடுதல் இமோஜிகள், ஜிஐஎஃப் மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்த அனுமதிக்கலாம். சமீபத்திய அறிக்கையின்படி இந்த அம்சமானது பயனர்கள் ப்ளஸ் பட்டனை கிளிக் செய்யும் முழு இமோஜி விசைப்பலகைகள் அணுகலும் வழங்கப்படும், தற்போது வரை பீட்டா சோதனையாளர்களுக்கு கூட இந்த இமோஜி எதிர்வினை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சம் 2018 ஆம் ஆண்டில் இருந்து சோதனையில் இருக்கிறது. ஆரம்பத்தில் ஸ்டிக்கர், ரியாக்ஷன் உள்ளிட்டவைகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இறுதி வெளிப்பாட்டில் இது இமோஜி எதிர்வினைகளை கொண்டுவரும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வாட்ஸ்அப் லாஸ்ட் சீன்

வாட்ஸ்அப் லாஸ்ட் சீன்

அதேபோல் வாட்ஸ்அப் லாஸ்ட் சீன் என்பது நாம் எப்போது கடைசியாக வாட்ஸ்அப் பயன்பாட்டை அனுகினோம் என்பதை பிறருக்கு காண்பிக்க பயன்படும் அம்சமாகும். இந்த அம்சம் இதுநாள் வரை ஒன்று அனைவருக்கும் காண்பிக்கும்படியாகவும் அல்லது யாருக்கும் காண்பிக்கும்படியாகவும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே காண்பிக்கும் வகையிலும் தேவையில்லாத பயனர்களிடம் இருந்து லாஸ்ட் சீன் அம்சத்தை மறைக்கும் படியாகவும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருக்கிறது.

பீட்டா பயனர்களுக்கு சோதனை

பீட்டா பயனர்களுக்கு சோதனை

இந்த அம்சமானது தற்போது ஐஓஎஸ் 22.9.0.70 பயன்படுத்தும் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வசதி விரைவில் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த வசதியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம். வாட்ஸ்அப் பயன்பாட்டை ஓபன் செய்து செட்டிங்க்ஸ் என்ற தேர்வுக்குள் சென்று பிரைவேசி என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் இந்நாள் வரை Everyone, My Contacts மற்றும் Nobody என்ற விருப்பம் மட்டுமே காண்பிக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் இதில் My Contacts Except என்ற தேர்வு காண்பிக்கப்படும், இதில் யாருக்கெல்லாம் லாஸ்ட் சீன் காட்ட வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கலாம். பிரைவசி என்ற தேர்வுக்குள் இந்த வசதி இருக்கிறது. இதில் கடைசியாக பார்த்தது (லாஸ்ட் சீன்) என்ற விருப்பத்துக்குள் சென்று இந்த வசதியை தேர்ந்தெடுக்கலாம். லாஸ்ட் சீன் பயன்பாடு போன்றே புரொஃபைல் இமேஜ், about மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆகியவற்றையும் குறிப்பிட்ட சிலரை மட்டுமே காணும் வகையில் இந்த அப்டேட் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: Social Media

Best Mobiles in India

English summary
Reaction on Whatsapp Start Rolling Out Today: Mark Zuckerberg Officially Announced

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X