Subscribe to Gizbot

ரூ.151/-ல் அதிரடி : ஆர்காம் நிறுவனத்தின் 'பெஸ்ட் ரீசார்ஜ்' இதுதான்..!

Written By:

ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனம் அனில் அம்பானி தலைமையில் இருப்பினும் கூட வியக்கத்தக்க வண்ணம் இந்திய தொலைத்தொடர்புத் துறையில் அதன் வழக்கமான 2-வது நிலையில் இருந்து 6-வது இடத்திற்கு விழுந்துள்ளது மிகவும் ஆச்சரியமான விடயம் தான். அதற்கு முக்கிய காரணம், அதன் சிடிஎம்ஏ நடவடிக்கைகளை மூடப்பட்ட பின்னர் நிறுவனத்தின் சுமார் 20 மில்லியன் சிஎம்டிஏ சந்தாதாரர்கள் இழக்கப்பட்டன என்பது தான்.

எனினும், அடிப்படையில் பார்த்தால் கடந்த செப்டம்பர் மாதம் முதல், குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான பின்னர் தற்போதைய தொலைத்தொடர்புத் வழங்குநர்களின் மத்தியில் உள்ள போட்டி நிறை காரணமாக ஆர்காம் நிறுவனமும் தன பங்கிற்கு அதிரடி திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி ஈடுகொடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இந்தியவின் சில குறிப்பிட்ட வட்டாரங்களில் ரிலையன்ஸ் ஜியோ சமாளிக்கும் வண்ணம் ஒரு வசதியுள்ள திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ரூ.151/- என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் விலை ஒவ்வொரு வட்டத்தை பொறுத்து வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இலவச உள்வரும் ரோமிங் அழைப்பு

இலவச உள்வரும் ரோமிங் அழைப்பு

ரூ.151/- பேக் ஆனது தேசிய அளவிலான இலவச உள்வரும் ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது மற்றும் ரிலையன்ஸ் ஜியோவும் அதையே தான் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த திட்டம் இலவச வெளிச்செல்லும் ரோமிங் அழைப்புகளை வழங்காது.

வரம்பற்ற அழைப்பு

வரம்பற்ற அழைப்பு

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்-ன் ரூ.151/- திட்டமானது அதன் பயனர்களுக்கு எந்த நெட்வொர்க் உடனான வரம்பற்ற உள்ளூர் அழைப்புகள் அல்லது வெளியூர் அழைப்புகளை வழங்குகிறது. மற்றும் பிணைய குரல் அழைப்புகளுக்கு எந்த கூடுதல் கட்டணமும் கிடையாது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வோல்ட் ஆதரவு தேவை இல்லை

வோல்ட் ஆதரவு தேவை இல்லை

ரிலையன்ஸ் ஜியோ போலில்லாமல்ஆர்காம் இலவச வாய்ஸ் காலிங் நிகழ்த்த எந்தவிதமான வோல்ட் ஆதரவும் தேவை இல்லை. அதை 2ஜி அல்லது 3ஜி அல்லது 4ஜி என எந்த நெட்வொர்க் கொண்டும் நிகழ்த்திக்கொள்ள முடியும்.

300எம்பி 4ஜி தரவு

300எம்பி 4ஜி தரவு

கூடுதலாக, இந்த புதிய ரூ.151/- பேக்கிங் கீழ் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 300எம்பி அளவிலான 4ஜி தரவு கொடுக்கிறது. இந்த அளவிலான டேட்டா, வாட்ஸ்ஆப், பேஸ்புக், சிறிய பயன்பாடுகளை பயன்படுத்திக்கொள்ள போதுமான அளவு இருக்கும்

28 நாட்கள் செல்லுபடியாகும்

28 நாட்கள் செல்லுபடியாகும்

இறுதியில், இந்த பேக் அதன் செயல்படுத்தும் தேதியிலிருந்து 28 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் இருக்கும். காலவரையறை முடிந்த பிறகு, பயனர்கள் எளிதாக அதே பேக்கை ரீசார்ஜ் செய்து அடுத்த 28 நாட்களுக்கு அதே சலுகைகளை அனுபவிக்கலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விலை வேறுபாடுகள்

விலை வேறுபாடுகள்

ஆயினும்கூட, வெவ்வேறு வட்டங்களில் உள்ள பயனர்களுக்கு விலை புள்ளி தொடர்பாக சில வேறுபாடுகள் உள்ளன. திட்டத்தின் விலைகள் மற்றொரு வட்டத்தில் உள்ள குழுவுடன் மாறுபடலாம் என்ற ஒரு குறிப்பை கவனிக்கவும். எடுத்துக்காட்டாக, இதே பேக் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ரூ.149/-க்கு வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஆர்.காம் அதிரடி : லேண்ட்லைனில் ஆண்ட்ராய்டு, 4ஜி, விரைவில் ஹோம் போன்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
RCom Rs. 151 Plan It Might be the Best Recharge Kit Available Right Now. Read more about this in Tamil GizBot

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot