புதிய ரிலையன்ஸ் ஆப் வெளிநாடுகளுக்கு மலிவு விலையில் பேசலாம்.!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் புதிய ஆப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

By Meganathan
|

சர்வதேச அழைப்பு சேவையான ரிலையன்ஸ் குளோபல் கால் இந்தியாவில் RGC India எனும் புதிய ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாகச் சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதில் எவ்வித குறியீடோ அல்லது பின் நம்பர் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அறிமுகச் சலுகை

அறிமுகச் சலுகை

புதிய ஆப்பிற்கு ரூ.100 சந்தா செலுத்தும் பயனர்களுக்கு அறிமுகச் சலுகையாக ரூ.200 மதிப்புள்ள டாக்டைம் வழங்கப்படுகிறது. பயனர்கள் நிமிடத்திற்கு ரூ.1.14 என்ற கட்டணத்தில் சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

பதிவு

பதிவு

RGC சேவையைப் பெற பயனர்கள் இணையத்தளம் அல்லது ஸ்மார்ட்போன் மூலம் நேரடியாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பிளே ஸ்டோர்களில் இருந்து ஆப் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உதாரணம்

உதாரணம்

புதிய ஆப் சர்வதேச அழைப்பு வழிமுறைகளில் மிகப்பெரிய முன்னுதாரணமாக இருக்கும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் குர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

சேவை

சேவை

ரிலையன்ஸ் குளோபல் கால் சர்வீஸ் சேவை அனைத்து மொபைல் போன் மற்றும் லேண்ட்-லைன் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதில் ரிலையன்ஸ், ஏர்டெல், வோடபோன், ஐடியா, டாடா, ஏர்செல் மற்றும் எம்டிஎஸ் நிறுவனங்களின் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களும் அடங்குவர்.

அழைப்பு

அழைப்பு

RGC இந்தியா ஆப் மூலம் பயனர்கள் அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், கனடா, ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் 200 இதர சர்வதேச இடங்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என ரிலையன்ஸ் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
RCom releases low cost ISD app in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X