ஆர்.காம் அறிவித்துள்ள புதிய ரூ.33/- பேக்; என்னென்ன நன்மைகள்.?

|

ஆர்.காம் நிறுவனம் அறிவித்துள்ள இந்த திட்டமானது, எந்த நெட்வர்க் உடனான 1 மணிநேர அழைப்பு நன்மையுடன் (ரீசார்ஜ் செய்யும் தினம் உட்பட) சேர்த்து 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை வழங்குகிறது.ரூ.33/- விலை மதிப்பிலான இந்த திட்டம், இரண்டு நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ஆர்.காம் அறிவித்துள்ள புதிய ரூ.33/- பேக்; என்னென்ன நன்மைகள்.?

குஜராத் வட்டாரத்தில் உள்ள தனது சந்தாதாரர்களுக்கு செல்லுபடியாகாது என்று நிறுவனம் அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

2ஜி ஸ்பெக்ட்ரம் முடிவடைகிறது

2ஜி ஸ்பெக்ட்ரம் முடிவடைகிறது

2ஜி சேவையில் இருந்து 4ஜி தொழில்நுட்பத்திற்கு மாறுமாறு குஜராத் சந்தாதாரர்களை ஆர்.காம் நிறுவனம் சமீபத்தில் கேட்டுக்கொண்டது. இந்நிறுவனத்தின் 2ஜி ஸ்பெக்ட்ரம் இந்த மாதத்திற்கு பின்னர் முடிவடைகிறது.

ஆர்.காம் சேவைகளைப் பயன்படுத்த முடியாது

ஆர்.காம் சேவைகளைப் பயன்படுத்த முடியாது

இதுசார்ந்த எஸ்எம்எஸ் ஒன்றையும் அனைத்து சந்தாதாரர்களுக்கும் நிறுவனம் அனுப்பி வருகிறது. 4ஜி சேவைக்கு மாறவில்லை எனில், இந்த மாதத்திற்கு பிறகு அவர்கள் ஆர்.காம் சேவைகளைப் பயன்படுத்த முடியாது. இந்த நிலைப்பாட்டை மனதிற்கொண்டு தான் குஜராத் சந்தாதாரர்களுக்கு இந்த திட்டத்தை ஆர்.காம் வழங்கவில்லை.

ரூ.147 திட்டமானது

ரூ.147 திட்டமானது

இந்த புதிய ரூ.33/- திட்டத்தை தவிர, ஆர்.காம் ரூ.147, ரூ.193/- மற்றும் பல திட்டங்களையும் வழங்கி வருகிறது. ரூ.147 திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 3ஜி தர கொடுக்கிறது.

3ஜி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே

3ஜி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே

சிறந்த பகுதியாக இந்த திட்டம் ஆர்.காம் செயல்படும் கிட்டத்தட்ட அனைத்து வட்டாரங்களில் செல்லுபடியாகும். மேலும், திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி இது ஆர்.காம் 3ஜி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

365 நாட்களுக்கு

365 நாட்களுக்கு

ஆர்.காம் அதன் 2ஜி தரவு திட்டங்களிலும் கவனம் செலுத்துகிறது. எடுத்துக்காட்டிற்கு, அதன் 2ஜி சிறப்பு திட்டங்களான ரூ.25/-க்கு நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 2ஜி டேட்டாவையும், ரூ.765/-க்கு 365 நாட்களுக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் திட்டங்களையும் கூறலாம்.

Best Mobiles in India

English summary
RCom Comes Up With a New Plan Offering 1GB 4G Data and 1 Hour of Voice Calling for 2 Days at Rs. 33. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X