Home
News

ஆர்.காம் அதிரடி : 1 ஆண்டுக்கு செல்லுபடியாகும் 1ஜிபி / நாள் 4ஜி டேட்டா வாய்ப்பு.!

இந்த வாய்ப்பின் கீழ் ஆர்.காம் 4ஜி ஹாட்ஸ்பாட் மற்றும் ப்ரீபெய்ட் தரவை ரூ.5,199/-க்கு பெறலாம். இந்த சலுகை ஒரு ஆண்டு செல்லுபடியாகும்.

By Muthuraj

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாய்ப்பானது அதன் ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கானது அல்ல டாங்கிள் பயனர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.காம் அதிரடி : 1 ஆண்டுக்கு செல்லுபடியாகும் 1ஜிபி / நாள் 4ஜி டேட்டா!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அதன் இ-காமர்ஸ் போர்ட்டில் புதிய சலுகை ஒன்றை பட்டியலிட்டுள்ளது (rcom-eshop.com). இதன்கீழ் ரிலையன்ஸ் 4ஜி வை-பாட் மற்றும் ரிலையன்ஸ் 4ஜி சிம் சார்ந்த புதிய காம்போ சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

மொத்தம் ரூ.5,199/-க்கு

மொத்தம் ரூ.5,199/-க்கு

இதன் கீழ் ஆர்காம் 4ஜி ஹாட்ஸ்பாட் மற்றும் 365 நாட்களுக்கு 1 ஜிபி அளவிலான தரவுத் தொகுப்பை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த வாய்ப்பின் கீழ் ஆர்.காம் 4ஜி ஹாட்ஸ்பாட் மற்றும் ப்ரீபெய்ட் தரவை ரூ.5,199/-க்கு பெறலாம். இந்த சலுகை ஒரு ஆண்டு செல்லுபடியாகும்.

80 கிராம் எடை

80 கிராம் எடை

4ஜி டாங்கிள் பற்றிய விவரங்களைப் பற்றி பேசுகையில், இது சீன தயாரிப்பாளர் ஆன இசெட்டிஇ (ZTE) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. 80 கிராம் எடை கொண்டுள்ள இது க்வால்காம் எம்டிஎம்9307 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது

மைக்ரோ யூஎஸ்பி போர்ட், சிம் ஸ்லாட்

மைக்ரோ யூஎஸ்பி போர்ட், சிம் ஸ்லாட்

இதனைக்கொண்டு ஒரு நேரத்தில் 31 சாதனங்களை இணைக்க முடியும். பிளாஸ்டிக்கால் உருவாக்கம் பெற்றுள்ள இந்த சாதனத்தில் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட், சிம் ஸ்லாட், 32 ஜிபி மைக்ரோ அட்டை வரை ஏற்றுக்கொள்ளும் மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் உள்ளது.

2300எம்ஏஎச் பேட்டரி

2300எம்ஏஎச் பேட்டரி

ரிலையன்ஸ் 4ஜி வை-பாட் ஆனது பேண்ட் 3, பேண்ட் 5, மற்றும் பேண்ட் 40 ஆகியவற்றின் கீழ் எல்டிஇ இணைப்பை வழங்குகிறது. மேலும் இந்த ஹாட்ஸ்பாட் சாதனம் 2300எம்ஏஎச் பேட்டரி சக்தியைக் கொண்டுள்ளது, இது ஏழு மணிநேரம் வரை பேட்டரியை வழங்கும்.

சிறப்பான 4ஜி ஹாட்ஸ்பாட்

சிறப்பான 4ஜி ஹாட்ஸ்பாட்

துரதிருஷ்டவசமாக, இந்த சாதனம் வெறும் ஒரு கருப்பு வண்ண விருப்பத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஒரு ஆண்டு உற்பத்தியாளர் உத்தரவாதத்துடன் வரும் இந்த வாய்ப்பு தான் தற்போதைக்கு சந்தையில் கிடைக்கும் சிறப்பான 4ஜி ஹாட்ஸ்பாட் வாய்ப்பாக இருக்கிறது.

கவர்ச்சிகரமான கட்டண திட்டங்களுடன்

கவர்ச்சிகரமான கட்டண திட்டங்களுடன்

ரிலையன்ஸ் ஜியோவின் கட்டணத் திட்டங்களில் சமீபத்தில் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. புதிய சலுகையின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ தற்போது, அதன் ஜியோஃபை சாதனத்தை ரூ.1,999/-க்கு புதிய பயனர்களுக்கு, சில கவர்ச்சிகரமான கட்டண திட்டங்களுடன் வழங்கிவருகிறது.

ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு

ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு

ஜியோ கட்டண திருத்தங்களை பொறுத்தமட்டில் ரூ.309/-க்கு ஆறு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 1ஜிபி என மொத்தம் 168ஜிபியும், ரூ.509/-க்கு நான்கு மாதங்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவும், ரூ.999/-க்கு ஒரு மாதத்திற்கு பதிலாக இரண்டு மாதங்களுக்கு 120 ஜிபி தரவும் கிடைக்கிறது. இருப்பினும், இந்த திட்டங்கள் எல்லாம் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு மட்டுமே இருக்கின்றன. மறுபக்கம் ஆர்.காம் வை-பாட் சலுகை ஒரு ஆண்டு கால செல்லுபடி காலம் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
RCom is Offering 4G Wi-Pod and 1GB Data Per Day for 365 Days at Just Rs. 5,199. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X