தொலைபேசி கட்டணங்களை உயர்த்தும் ரிலையன்ஸ்

Posted By: Karthikeyan
தொலைபேசி கட்டணங்களை உயர்த்தும் ரிலையன்ஸ்

இந்தியாவில் தொலை பேசி கட்டணங்கள் உயர்ந்ததைத் தொடர்ந்து ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனமும் தொலைபேசி கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. அதாவது ப்ரீ பெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 25 சதவீதம் அளவி்ற்கு கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.

அதன் படி இனி ரிலையன்சின் அடிப்படை தொலைபேசிக் கட்டணம் வினாடிக்கு 1.2 பைசாவிலிருந்து வினாடிக்கு 1.5 பைசா அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கட்டண உயர்வை பீகார், குஜாரத், இமாசல பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2 வாரங்களுக்கு முன்பே அமல்படுத்தி இருக்கிறது.

அடுத்த 30 நாள்களுக்குள் இந்த புதிய கட்டண விகிதம் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்துப்படும் என்று ரிலையன்ஸ் கம்யூனிகேசன் அறிவித்திருக்கிறது.

தற்போது உள்ள கட்டணத்தினால் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்திற்கு மிகவும் குறைவான லாபமே கிடைக்கிறது என்றும், புதிய கட்டணத்தின் மூலம் தமது நிறுவனம் ஓரளவு லாபம் ஈட்ட முடியும் என்று அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் குர்தீப் சிங் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டண உயர்வு ஒரு கசப்பான செய்தியாகத்தான் இருக்கும்.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்