ஒன்றாக இணையும் ஆர்.காம் & ஏர்செல் : நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா.?

Written By:

அணில் அம்பானியின் தலைமையின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஏர்செல் உடன் ஒன்றாக இணையப்போகும் தகவலை அறிவித்துள்ளார். அவர் அறிவித்த தகவலின் கீழ் கூட்டணி அமைக்கும் ஆர் காம் மற்றும் ஏர்செல் நிறுவனம் ஏர்காம் என்ற பெயரினை பெறவுள்ளது அணில் அம்பானி மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்றாக இணையும் ஆர்.காம் & ஏர்செல் : நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா.?

ஆர்.காம் நிறுவனத்தின் (ரெண்டர்ஸ்) கடனளிப்பாளர்கள் ஒரு மூலோபாய மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புக் கொண்டதுடன், இது 7 மாதத்திற்கு ரூபாய் 45,000 கோடிக்கு சேவை கடனை பெறவுள்ளது.

இது, "ரூ .25,000 கோடி கடன் அல்லது 60 சதவிகிதம் வயர்லெஸ் மற்றும் டவர்ஸ் வணிகத்தின் மூலோபாய பரிவர்த்தனைகளை அமல்படுத்தும் என்ற மேம்பட்ட கட்டத்தை ரெண்டர்ஸ் கவனத்தில் கொள்கிறார்கள். மீதமுள்ள ரூ.20,000 கோடி கடனுக்கான நீண்டகால சேவைக்கான திட்டத்தை முன்வைக்கும் என்று ஆர்காம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இந்த ஆண்டின் மொத்த இழப்பின் மதிப்பீடு என ரூ.1,285 கோடியை குறிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் நிகர இலாபத்துடன் (600 கோடி) ஒப்பிடுகையில் அதிகம். அதற்கு இந்த ஆண்டு நிறுவனம் சந்தித்த இலவச சலுகைகள், மோசடி விலைகள் மற்றும் தொலைத் தொடர்பு துறையில் மிக உயர்ந்த போட்டி காரணமாய் திகழ்கிறது.

ஒன்றாக இணையும் ஆர்.காம் & ஏர்செல் : நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா.?

கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த தொலைத் தொடர்பு துறை வருவாயில் கீழ்நோக்கிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வருவாயில் அரசு பங்கில் குறைப்பு, இயக்க வரம்பில் கூர்மையான வீழ்ச்சி, ஒரு பெருந்தொழில் துறையில் இருந்து அதிகரித்த வட்டி செலவுகள் கடன் சுமை, மற்றும் அதிக தேய்மானம் மற்றும் கடனளிப்பு விகிதங்கள், உயர் ஸ்பெக்ட்ரம் கொள்முதல் செலவுகளின் விளைவாக இது நிகழ்ந்துள்ளது.

கடந்த இரண்டு காலாண்டுகளில் இலாபம் மற்றும் / அல்லது நிகர இழப்புகளில் செங்குத்தான சரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் சில நிறுவனங்கள் தங்கள் முழு நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டன" என வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more about:
English summary
RCom- Aircel merged entity will be called Aircom : RCom. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot