Home
News

WhatsApp யூஸ் பண்றீங்களா? RBI கொடுத்த எச்சரிக்கை.. இந்த நம்பரை நினைவில் வைங்க.. இல்லாட்டி சிக்கல் ஆகிடும்..

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India - RBI) இந்தியாவில் உள்ள கோடி கணக்கான வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் பேங்க் இப்போது இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் (WhatsApp message) மூலம் புதிய எச்சரிக்கை தகவலை பரப்பி வருகிறது. உங்களுக்கு இப்போது வரை இந்த எச்சரிக்கை செய்தி வரவில்லை என்றால், இந்த பதிவை படித்து விபரங்களை அறிந்துகொள்ளுங்கள் மக்களே.

ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி அமைப்பு, இப்போது வாட்ஸ்அப் பயனர்களுக்காக (WhatsApp users) மட்டும் ஒரு பிரத்தியேக எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சைபர் குற்றங்கள் (cyber crimes) மற்றும் சைபர் (cyber fraud) மோசடிகள் பெருகி வரும் சூழ்நிலையில், மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தும் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.

WhatsApp யூஸ் பண்றீங்களா? RBI கொடுத்த எச்சரிக்கை.. சிக்கல் ஆகிடும்..

WhatsApp யூஸ் பண்றீங்களா? RBI கொடுத்த எச்சரிக்கையை கவனியுங்க:

மத்திய அரசுடன் சேர்ந்து, அனைத்து மாநில அரசுகளும் சைபர் மோசடி வழக்குகளைத் தடுக்க தங்கள் திறனுக்கு ஏற்ப அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு (Government initiatives to stop cyber-crimes) வருகின்றன. என்ன தான் அரசாங்கம் இத்தகைய மோசடிகளை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டாலும், நாம் விழிப்புடன் இருக்கும் வரை சைபர் மோசடி வழக்குகள் குறையாது என்பதே உண்மையாக இருக்கிறது. சைபர் குற்றவாளிகள் இப்போது புது-புது வழியில் மக்களை ஏமாற்ற துவங்கியுள்ளனர்.

இதில் இப்போது பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவது டிஜிட்டல் அரெஸ்ட் (digital arrest) போன்ற மோசடிகளுக்கு தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப் பயனர்களை குறித்து வைத்து தான் அழைப்புகளை மேற்கொள்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் அழைப்பு (WhatsApp calling) மூலம் வீடியோ அழைப்புகளை (WhatsApp video calling) மேற்கொண்டு, பொதுமக்களிடம் காவல்துறை அதிகாரிகள் போல பாவித்து, மோசடி கும்பல் இப்போது மக்களை ஏமாற்றி வருகிறது.

வாட்ஸ்அப் மூலம் பெருகும் சைபர் மோசடிகள் மற்றும் குற்றங்கள்.. உஷார் மக்களே:

இதனால், இந்திய ரிசர்வ் வங்கி இப்போது வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி புதிய எச்சரிக்கை செய்தியை (RBI warns WhatsApp users to stay safe from cyber fraud) வெளியிட்டுள்ளது. ஒருவேளை உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஏதேனும் அடையாளம் தெரியாத நபர் அல்லது உங்களுக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால் கவனமாக இருக்கும் படி RBI எச்சரித்துள்ளது.

குறிப்பாக வாட்ஸ்அப் வீடியோ காலில் உங்களுக்கு தெரியாத நபர் தோன்றினால் கூடுதல் கவனமாக இருக்கும்படி RBI எச்சரித்துள்ளது. இத்தகைய அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு, காவல்துறை அதிகாரி அல்லது சைபர் கிரைம் அதிகாரி அல்லது ஏதேனும் அரசாங்க துறை அதிகாரி போல் உங்களிடம் பேசும் நபர்களின் பேச்சை அப்படியே நம்ப வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (Reserve bank) எச்சரித்துள்ளது.

இந்த நம்பரை நினைவில் வைங்க.. இல்லாட்டி சிக்கல் ஆகிடும்.. எச்சரிக்கும் RBI:

சந்தேகத்திற்குரிய நபர்கள் அல்லது எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்புகள் வந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்ற அறிவுரையை RBI வழங்கியுள்ளது. மோசடி அழைப்புகள், டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற அழைப்புகள் ஏதேனும் உங்கள் வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொண்டால், அந்த அழைப்பு தொடர்பான தகவல்களை நீங்கள் உடனே 1930 என்ற உதவி எண்ணிற்கு (cyber crime helpline number) அழைப்பு மேற்கொண்டு புகார் அளிக்கும்படி RBI அறிவுரை வழங்கியுள்ளது. மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி RBI எச்சரித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI warns WhatsApp Users to stay safe from cyber fraud for help dial this helpline number immediately
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X