Home
News

Google Pay-க்கு அடுத்து இது.. 2025-க்கு மேல முடிஞ்சு.. இனிமே பேங்க் அக்கவுண்ட்.. கிளவுட் சர்வீஸ் ஆர்பிஐ கையில!

இந்திய ரிசர்வ் வங்கி - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) ஆனது பேங்கிங் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளில் மிகப்பெரும் முடிவை எடுத்துள்ளது. இதுவரையில் அதிக காசு கொடுத்து பயன்படுத்திவரும் சேவைகளை மலிவான விலைக்கு வழங்குவது மட்டுமல்லாமல், கூகுள் (Google), அமேசான் (Amazon), மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைக்கவும் இந்திய ரிசர்வ் வங்கியானது, இதில் களமிறங்கி இருக்கிறது. இதனால் என்ன மாறப்போகிறது? எந்த சேவையில் 2025ஆம் ஆண்டு முதல் மாற்றங்கள் வரும்?

இந்தியாவில் பேங்கிங் மற்றும் நிதி சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் கிளவுட் சேவைகள் அமேசான் வெப் சர்வீசஸ் (Amazon Web Services), மைக்ரோசாஃப்ட் அஸூர் (Microsoft Azure), கூகுள் கிளவுட் (Google Cloud) மற்றும் ஐபிஎம் கிளவுட் (IBM Cloud) போன்றவற்றை நம்பியே இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேச அளவில் ஆதிக்கத்தை செலுத்துகின்றன.

Google Pay-க்கு அடுத்து இது.. 2025-க்கு மேல முடிஞ்சு.. இனிமே ஆர்பிஐ!

இதனால், பேங்கிங் மற்றும் நிதி சேவைகளின் முக்கிய டேட்டாக்கள் அந்த நிறுவனங்களின் கைப்பிடியில் இருக்கின்றன. அதேநேரத்தில் இந்த கிளவுட் சேவைக்காக மேற்கண்ட சர்வதேச நிறுவனங்களிடம் அதிகளவில் பணமும் சென்று சேருகின்றன. சொல்லப்போனால், 8.3 பில்லியன் டாலர் மதிப்பில் இந்திய கிளவுட் சர்வீஸ் சேவைகள் இருக்கின்றன.

இந்த சேவைகள் 2028ஆம் ஆண்டுக்குள் 24.2 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று சர்வதேச தரவுக் கழகம் கணித்துள்ளது. ஆகவே, இவ்வளவு பெரும் தொகையை சர்வதேச நிறுவனங்களிடம் ஒப்படைக்க இந்திய ரிசர்வ் வங்கி தயாராக இல்லை என்பதே உண்மையாகும். ஆகவே, லேக்கல் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையை (Local Cloud Storage Service) வழங்க திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் கிளவுட் சேவைகளுக்கான செலவுகளை குறைக்க முடியும். ஆகவே, பேங்க் சேவைகளுக்கான கட்டணங்களில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கி ஃபின்டெக் நிறுவனங்களுடன் கைக்கோர்க்க திட்டமிட்டிருக்கிறது. அடுத்த சில மாதங்களில் சிறிய அளவில் கிளவுட் சர்வீஸை வழங்க இருக்கிறது. சிறிய பேங்க் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

2025ஆம் ஆண்டில் இருந்து முழு வீச்சில் கிளவுட் சேவைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த கிளவுட் சேவைகள் மூலம் கஸ்டமர்களின் டேட்டாக்கள் முதல் பேங்க் மற்றும் நிதி நிறுவனங்களின் டேட்டாக்களும் பாதுகாப்பாக சேமிக்கப்பட இருக்கின்றன. இந்த சேவை வரும் காலங்களில் தவிர்க்க முடியததாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், டிஜிட்டலுக்கு இந்தியா மாறி வருகிறது.

ஆகவே, ஒட்டுமொத்த டேட்டாக்களும் கிளவுட் சேவையை நம்பியே இருக்க அதிக வாய்ப்புள்ளகள் இருக்கின்றன. ஆகவே, கிளவுட் சேவை தொடர்பான நிறுவனங்களின் வளர்ச்சியும், இந்த மார்கெட்டின் பொருளாதார வளர்ச்சியும் மிகப்பெரும் மாற்றத்தை செய்யக்கூடியாத இருக்கிறது. ஆகவே, இதை பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுக்க ஆர்பிஐ விரும்பவில்லை.

இதனாலேயே, இப்போதே இந்தியாவில் இருக்கும் பேங்குகள், நிதி சார்ந்த சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் டேட்டாக்களை உள்நாட்டு பிக்டெக் நிறுவனங்களுடன் இணைந்து கிளவுட்டில் சேமிக்க திட்டமிட்டு இருக்கிறது. இது புதிதாக உருவாகும் நிறுவனங்களை நேரடியாக மாற்றும், ஏற்கனவே பன்னாட்டு நிறுவனங்களின் கிளவுட் சேவையை பயன்படுத்துவதையும் குறைக்கும்.

ஏற்கனவே, கூகுள் பே (Google Pay) போன்ற பன்னாட்டு நிறுவனம் மூலம் நாட்டின் பெரும்பாலான யுபிஐ (UPI) பரிவர்த்தைகள் நடப்பதால், அதை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை ஆர்பிஐ கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இப்போது பெரும்பாலான நிதி நிறுவனங்கள் பயன்படுத்தும் கூகுள் கிளவுட் சேவையையும் ஒட்டுமொத்தமாக மாற்ற திட்டமிட்டிருக்கிறது. இது கூகுள் நிறுவனத்துக்கு மறைமுகமான அடியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI to Launch Local Cloud Storage in 2025 For Banking And Financial Services Firms Rival Google
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X