Home
News

அப்படி போடு.. இனி போலி கடன் செயலிகள் இருக்காது.. முடிவு கட்டிய ரிசர்வ் வங்கி.. எப்படி தெரியுமா?

தற்போது இந்தியாவில் லோன் ஆப்களின் (Loan Apps) எண்ணிக்கை நாளுக்கு நாள் அத்திகித்துக்கொண்டே போகிறது. சில மணி நேரங்களில் இந்த லோன் ஆப்கள் மூலம் கடன வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் லோன் தரும் ஆப்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது சில போலி கடன் ஆப்கள் மக்களுக்குக் கடன் வழங்கிய பின்னர் அதனைத் திருப்பி செலுத்தக் கால தாமதமானால் மிரட்டல் விடுத்து முறைகேடாக நடந்துகொள்வது மட்டுமின்றி எளிய மக்களிடம் அதிக வட்டி வசூலித்தும் பிரச்சனையில் சிக்க வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி போடு.. இனி போலி கடன் செயலிகள் இருக்காது.. முடிவு கட்டிய RBI..

இதுபோன்ற பல பிரச்சனைகள் இந்த போலி செயலிகளில் இருப்பதால், மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் (RBI) போலி கடன் செயலிகளின் செயல்பாட்டை முடக்கத் தீவிரமான முயற்சியில் இறங்கியது.

அதாவது தற்போது டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களைச் சரிபார்த்து, அந்த நிறுவனத்தைப் பற்றி பொது பதிவேட்டை (public register)பராமரிக்க டிஜிட்டல் இந்திய டிரஸ்ட் ஏஜென்சி (Digital India Trust Agency - DIGITA) எனும் புதிய நிறுவனத்தை உருவாக்கும் யோசனையில் ரிசர்வ் வங்கி உள்ளது.

குறிப்பாக டிஜிட்டல் இந்திய டிரஸ்ட் ஏஜென்சி ஆனது டிஜிட்டல் துறையில் நடக்கும் நிதி குற்றங்களைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் டிஜிட்டல் இந்திய டிரஸ்ட் ஏஜென்சி(DIGITA) Verified சான்று இல்லாத கடன் செயலிகள் அங்கீகரிக்கப்படாதவை என்று கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி போடு.. இனி போலி கடன் செயலிகள் இருக்காது.. முடிவு கட்டிய RBI..

வரும் நாட்களில் இந்த DIGITA நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்தால், டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களை ஆய்வு செய்து அவை சரியான முறையில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்குகிறதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் டிஜிட்டல் கடன் வழங்கும் துறையில் பல மோசடி நடவடிக்கைகள் மற்றும் முறைகேடான செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் DIGITA மூலம் மேற்கொள்ளப்படும் சரிபார்ப்பு செயல்முறை டிஜிட்டல் கடன் வழங்கும் துறையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி போடு.. இனி போலி கடன் செயலிகள் இருக்காது.. முடிவு கட்டிய RBI..

அதேபோல் ரிசர்வ் வங்கி தடை செய்யப்பட்ட 442 டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகளின் பட்டியலைத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது. மேலும் கூகுள் நிறுவனத்தின் வெள்ளை பட்டியலில் (whitelist)கூட இந்த செயலிகளை இணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதன் மூலம் போலி ஆப்கள் மக்களை ஏமாற்றுவதை முற்றிலும் தடுக்கப்படும்.

அதேபோல் செப்டம்பர் 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரையில் சுமார் 2200 டிஜிட்டல் கடன் தரும் ஆப்ஸ்களை கூகுள் தனது ஆப்ஸ் ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளது. சில போலி கடன் ஆப்கள் காண்டாக்ட் லிஸ்ட் (Contact Lists), எஸ்எம்எஸ் மெசேஜ்கள் (SMS Messages), போட்டோக்கள் (Photoes) மற்றும் ப்ரவுஸர் ஹிஸ்டரி (Browser History) உட்பட பலதரப்பட்ட தகவல்களைத் திருடியுள்ளது. எனவே தான் கூகுள் நிறுவனம் இந்த போலி ஆப்ஸ்களை நீக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI to launch Digital India Trust Agency to curb fake loan apps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X