Positive Pay என்றால் என்ன? இதனால் என்ன பலன்.!

|

இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் மக்களுகக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் சில இந்த புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த தேவையில்லாத செயல்களை செய்துள்ளனர். அதாவது வங்கி அதிகாரிகள் பேசுவதாக கூறி ஒடிபி எண் மூலம் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்துள்ளனர். குறிப்பாக செய்திதாள்களில் இதுபோன்ற மோசடி தொடர்பான செய்திகளை படிக்கிறோம்.

போலி காசோலைகளை தயாரிப்பதும்

அதேபோல போலி காசோலைகளை தயாரிப்பதும், மற்றவர்களின் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க மோசடி வேலைகளில் ஈடுபடுவதும் மிகவும் பொதுவான ஒரு விஷயமாகி விட்டது. இதுபோன்ற மோசடி செய்பவர்கள் பலர் சேமித்துவைத்த பணத்தை நோடியில் திருடிவிடுகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

பணம்

இந்நிலையில் காசோலைகள் மூலம் பணம் செலுத்துவதை மிக மகி பாதுகாப்பானதாக்க 50,000 ரூபாய்க்கு மேல் உள்ள அனைத்து காசோலைகளுக்கும் Positive Pay என்ற ஒரு செயல்முறையை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதாவதுஅளவு மற்றும் மதிப்பின் அடிப்படையின் முறையே 20சதவிகிதம் மற்றும் 80 சதவகித காசோலைகள் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையின் கீழ் வரும்.

Google Pay பயனர்கள் உஷார்! ஒரு லட்ச ரூபாய் ஆன்லைன் மோசடி- இதை மட்டும் செய்யாதீங்க!Google Pay பயனர்கள் உஷார்! ஒரு லட்ச ரூபாய் ஆன்லைன் மோசடி- இதை மட்டும் செய்யாதீங்க!

பணவியல் கொள்ளை குழுவின்

ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்ளை குழுவின் மறு ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவித்த பின்பு ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் அவர்கள் காசோலை செலுத்துதல்களை மிகவும் பாதுகாப்பானதாக மற்ற 50,000ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட காசோலைகளுக்கும் Positive Pay வழிமுறை செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

கூறவேண்டும் என்றால் Positive Pay

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் Positive Pay மோசடியை கண்டறியும் ஒரு வகை அம்சமாகும். இது காசோலை பணமாக மாற்றப்படுவதற்கு முன்னர் அதாவது encash செய்யப்படுவதற்கு முன்னர், அது தொடர்பான அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்படும். அதாவது காசோலையை வழங்கிய நபர் வங்கியின் மொபைல் செயலியில் வழங்கப்பட்ட காசோலை தொடர்பா அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார். அந்த தரவுகளில் எதாவது பொருத்தம் இல்லை என்றால் காசோலை வழங்கும் நபரை வங்கி தொடர்பு கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கி

இது வழிமுறையை ஐசிஐசிஐ வங்கி பயன்படுத்துகிறது. அதாவது ஐசிஐசிஐ வங்கி இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின்படி காசோலையை பயனாளிக்கு வழங்குவதற்கு முன்பு, வங்கியின் மொபைல் செயலியில் நீங்கள் காசோலை எண், தேதி, பணம் செலுத்துபவரின் விபரம் உள்ளிட்ட தகவல்களுடன் காசோலையின் முன் மற்றும் பின் பக்கத்தின் புகைப்படங்களையும் பகிர வேண்டும். இதற்கு பின்பு பணம் செல்லுதுபவர் காசோலையை டெபாசிட் செய்யும் போது ​​ ​​Positive Pay மூலம், காசோலை மற்றும் வழங்கியவர் கொடுத்த தகவல் தொடர்பான விபரங்கள் சரி பார்க்கப்படும்.

 அளித்த நபர் வழங்கியுள்ள

குறிப்பாக காசோலை அளித்த நபர் வழங்கியுள்ள விபரங்களுக்கும் காசோலையின் விவரங்களும் ஒத்துப்போனால் மட்டுமே பயனாளிக்கு அந்த தொகை வழங்கப்படும். ஒருவேளை விவரங்கள் பொருந்தவில்லை என்றால் காசோலை வழங்கிய நபர் தொடர்பு கொள்ளப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
RBI to introduce more security features for cheques via Positive Pay mechanism | Here's how it will work: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X