Home
News

2 வங்கியில் அக்கௌன்ட் இருக்கா? அப்போ உடனே இதை கவனியுங்க.. இல்லாட்டி அபராதம் உறுதி.. வீணாய் பணத்தை இலக்காதீங்க

இந்தியாவில் உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு (Bank account) இருந்தாலும் சரி, இந்த பதிவு மிகவும் முக்கியமானது மக்களே. 2 வங்கி அக்கௌன்ட் (2 bank accounts) அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பயன்படுத்தும் பொதுமக்களில் நீங்களும் ஒருவர் என்றால், RBI-ன் இந்த விதிமுறையை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியமானது. வீணாய் அபராதம் செலுத்துவதை (bank account fine amount) தவிர்ப்பதற்கும், உங்கள் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படாமல் (bank account block) இருப்பதற்கும், கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை உடனே செக் செய்யுங்கள். காலம் தாமதிக்காமல் இவற்றை கண்காணிப்பது உங்கலுக்கு சிறந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India - RBI) வங்கி வாடிக்கையாளர்களுக்கென்று சில விதிமுறைகளை (RBI rules for bank account holders) மிகவும் தீவிரமாக கடைபிடித்து வருகிறது. இதை இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த குறிப்பிட்ட சில வங்கி விதிமுறைகளை பொது மக்கள் பின்பற்றாத பொழுது, அவர்களின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படும் நிலை உருவாக்குகிறது.

2 வங்கியில் அக்கௌன்ட் இருக்கா? அப்போ உடனே இதை கவனியுங்க..அபராதம் உறுதி

2 வங்கியில் அக்கௌன்ட் இருக்கா? அப்போ உடனே இதை கவனியுங்க.. இல்லாட்டி அபராதம் உறுதி:

மறுபுறம், பெரிய அபாரதங்களை மக்கள் செலுத்த வேண்டிய சூழ்நிலையும் (fine amount for bank account) உருவாக்குகிறது. இதை தடுக்க உடனே உங்கள் வங்கி கணக்கில் சில விஷயங்களை நீங்கள் கண்காணிக்க வேண்டும் என்று ஆர்பிஐ (RBI) புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. உங்களிடம் ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வங்கி கணக்கு இருக்கிறதென்றால், உங்கள் அக்கௌன்ட் பேலன்சை செக் (bank account balance) செய்ய வேண்டிய நேரம் இது.

உங்களிடம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India - SBI), கனரா வங்கி (Canara Bank), இந்தியன் பேங்க் (Indian Bank), எச்டிஎப்சி வங்கி (HDFC bank) அல்லது எந்தவிதமான வங்கி கணக்கு இருந்தாலும் சரி, உங்கள் சேமிப்பு வங்கி கணக்கில் இருக்கும் பேலன்சை உடனே செக் செய்து பாருங்கள் (check your savings bank account balance immediately).

உங்கள் சேமிப்பு வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இருக்கா? உடனே கவனியுங்க மக்களே:

ஒவ்வொரு வங்கியும், அதன் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட அளவிலான குறைந்த பட்ச இருப்பை பராமரிக்க (Minimum balance limit for savings bank account) வலியுறுத்துகிறது. குறிப்பாக, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்துள்ளவர்கள், அவர்களின் அணைத்து வங்கி கணக்கிலும் எவ்வளவு இருப்பு தொகை (bank account balance check) இருக்கிறதென்று கவனிக்க சொல்லியுள்ளது.

இந்தியாவில் ஒரு நபர் எத்தனை வங்கி கணக்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்பதனால், பலர் பல கணக்குகளை வைத்துள்ளனர். இதில் ஓரிரு கணக்குகளை மட்டுமே அதிகப்படியாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். மற்ற கணக்குகளில் எந்தவித பரிவர்த்தனையும் (transactions) மேற்கொள்ளாமல் அப்படியே சும்மா வைத்துள்ளனர். நீண்ட காலமாக பரிவர்த்தனை மேற்கொள்ளப்படாத கணக்குகளை RBI முடக்கம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கி கணக்கை முடக்கம் செய்ய முடிவு செய்துள்ள RBI:

ஆகையால், உங்களிடம் இத்தகைய வங்கி கணக்குகள் இருந்தால், அவற்றின் மூலம் சில பரிவர்த்தனைகளை மேற்கொள்வது நல்லது. இல்லையென்றால் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படாத கணக்குகள் விரைவில் முடக்கம் செய்யப்படும் (no transaction accounts be blocked soon) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இறுதியாக நீங்கள் மினிமம் பேலன்ஸ் (minimum balance amount) தொகையை மட்டும் உங்கள் வங்கி கணக்கில் மிச்சம் வைத்திருந்தால், அந்த தொகை குறைந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.

காரணம், ATM கார்டு மற்றும் சேவைக்கான கட்டணம் (ATM card and service payment), SMS சேவைக்கான பராமரிப்பு கட்டணம் (Maintenance fee for SMS service) என்று சில பல கட்டணங்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் (debit) செய்யப்பட்டிருக்கும். இதனால், உங்கள் மினிமம் பேலன்ஸ் தொகை வரம்பிற்கு கீழே சென்றிருக்க வாய்ப்புகள் அதிகம் மக்களே.

மினிமம் பேலன்ஸ் பராமரிக்கப்படாத கணக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுக்கொண்டே இருக்குமென்பதனால், உடனே உங்கள் அனைத்து வங்கி கணக்குகளையும் செக் செய்யும்படி RBI வலியுறுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
RBI Rules Implemented Do You Have More Than 2 Bank Accounts Check Your Minimum Balance Now To Avoid Fine Amount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X