Home
News

புது ரூ.25,000 ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு RBI ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. என்ன வருது?

ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கொண்டுவரும் புதிய விதிகளால் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து ரூ.50,000 பணத்தை இழந்த கஸ்டமர்கள் ரூ.25,000 வரையில் இழப்பீடு பெற்று கொள்ள முடியும். இந்த விதிகள் எப்போது அமலுக்கு வருகின்றன?

பேங்க் அக்கவுண்ட் வழியாக பணத்தை பரிமாற்றம் செய்வதில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (Digital Transactions) தவிர்க்க முடியாததாக மாறிவிட்டன. கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) உள்ளிட்ட யுபிஐ ஆப்கள் முதல் மொபைல் பேங்கிங் (Mobile Banking), நெட் பேங்கிங் (Net Banking) வரையில் நடக்கின்றன.

புது ரூ.25,000 ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு RBI!

அதே நேரத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் போலியான நபர்களிடம் பணத்தை இழப்பதும் வாடிக்கையாகிவிட்டன. இதனால், ரூ.50,000 வரையில் பணத்தை இழக்கும்போது அதில் இருந்து அதிகபட்சம் ரூ.25,000 வரையில் இழப்பீடு விதிகளை (Rs 25000 Compensation Rules) பெறும்படி இந்திய ரிசர்வ் வங்கி கொண்டுவர இருக்கிறது.

பேங்க் கஸ்டமர்களின் அனுமதியின்றி பணம் எடுக்கப்படும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை தவிர, உண்மையான நபர்கள் அல்லது வணிகங்கள் போல் நடித்து கஸ்டமர்களிடம் இருந்து ஏமாற்றி பணத்தை அனுப்ப வைக்கும் நிகழ்வுகளுக்கு மட்டும் இந்த விதிகள் பொருந்தும். இது கஸ்டமர்களையே தூண்டி பணத்தை அனுப்ப வைக்கும் நிகழ்வுகளாக இருக்கிறது.

அதேபோல ஏதாவது காரணத்தை சொல்லி அழுத்தம் கொடுத்து பணம் செலுத்த ஒப்புக்கொள்ள வைத்தல், பேங்க் விவரங்களை முறையற்ற முறையில் பெற்ற, அவற்றைப் பயன்படுத்திப் பரிவர்த்தனைகளை முடிக்கும் நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும். இப்படியான நிகழ்வுகளில் ரூ.50,000 வரையில் பணத்தை இழந்தால், இழப்பீடு பெற்று கொள்ள முடியும்.

இது சம்பந்தப்பட்ட பேங்குகளிடம் இருந்து கஸ்டமர்களுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. இதை வணிக வங்கிகள் - பொறுப்பான வணிக நடத்தை (மூன்றாவது திருத்த) வழிகாட்டுதல்கள், 2026 படி இந்திய ரிசரவ் வங்கி அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. அதன்படி ரூ.50,000 வரையிலான இழப்பை சந்திக்கும் கஸ்டமர்கள், அது குறித்து கட்டாயம் புகார் அளிக்க வேண்டும்.

இப்படி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பேங்குகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையின் அடிப்படையில், இழப்பு தொகையில் இருந்து 85 சதவீதத்தையோ அல்லது ரூ.25,000 பணத்தையோ இழப்பீடாக வழங்கப்படவேண்டும். அதாவது, கஸ்டமர்கள் ரூ.20,000 இழந்தால், அவர்களுக்கு ரூ. 17,000 (இழப்பில் 85 சதவீதம்) கிடைக்கலாம்.

அதுவே ரூ. 40,000 பணத்தை இருந்தால், இழப்பீட்டுத் தொகை ரூ.25,000 ஆக இருக்கும். இது ரூ.50,000 பணத்துக்கும் பொருந்தும். ஆகவே, அதிகபட்சம் ரூ.50,000 பணத்தை இழந்தால் மட்டுமே இந்த விதிகள் பொருந்தும். அதே நேரத்தில் அதிகபட்சமாக ரூ.25,000 பணத்தை மட்டுமே பேங்குகளிடம் இருந்து கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும்.

பணத்தை இழந்த பிறகு கஸ்டமர்கள் புகார் கொடுக்க வேண்டும். இந்த புகார்களை விசாரிக்கும் பேங்குகள், அதன் முடிவுகளை 30 நாட்களுக்குள் கஸ்டமர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கஸ்டமர்கள் இழப்பீட்டு கோரிக்கையை சமர்ப்பித்து, அந்த கோரிக்கை உண்மையானது என கண்டறியப்பட்டவுடன், பேங்குகள் 5 நாட்களுக்குள் இழப்பீட்டை வழங்க வேண்டும்.

இந்த புதிய விதிகள் ஜூலை 1 ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும். இருப்பினும், 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால், அப்போதுதான் இழப்பீடு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த தேதியில் இருந்து உடனடியாக பணம் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும்.

பேங்க் கஸ்டமர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும்போது, தெரியாத நபர்கள் கேட்கும், ஓடிபி நம்பர்கள் (OTP Numbers), கேஒய்டி விவரங்கள் (KYC Details) மற்றும் பின் நம்பர்கள் (PIN Numbers) ஆகியவற்றை கட்டாயம் பகிர கூடாது. உடனடியாக அனுப்பும்படி அழுத்தம் கொடுத்தால், அதை செய்துவிட கூடாது. பேங்குகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
RBI Rs 25000 Compensation Rules For Bank Account Digital Payment Come into Force From January 1 2027
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X