இனி ஏஎடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: RBI அறிவிப்பு: மக்கள் வரவேற்பு
தற்சமயம் வெளிவந்த அறிவிப்பு என்னவென்றால், இனிமேல் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லையென்றால்,வங்கிகளுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்புக்கு பல்வேறு மக்கள் வரவேற்பு தெரிவித்த வண்ணம் உள்ளது.

ரிசர்வ் வங்கி
குறிப்பாக மக்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கச் செல்லும் போது ஏடிஎம்-ல் பணம் வரவில்லை என்றால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுகிறீர்கள். பின்பு 100 ரூபாய் நோட்டுகள் கிடைப்பது கூட கடினமாக தான் இருக்கிறமு. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது அது என்னவென்றால் அதிக நேரத்திற்கு பணம் இல்லமால்
வைத்திருக்கக் கூடாது என்று உத்திரவிட்டுள்ளது.

3மணி நேரத்திற்கும் மேலாக பணமில்லாமல் இருந்தால் ..
மேலும் ஏஎடிம் இயந்திரங்களில் 3மணி நேரத்திற்கும் மேலாக பணமில்லாமல் இருந்தால் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்பு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் ஏடிஎம் இயந்திரங்களில் பல நாட்கள் பணம் இல்லாமல் இருக்கிறது என்று அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

அபராதம்
இப்போதும் கூட மக்கள் ஒரு சிறிய தொகையை எடுக்கக்கூட வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று எடுக்க வேண்டடிய நிலை உள்ளது. இப்போது தெரிவிக்கப்பட்ட அறிவிப்பில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஏடிஎம்-ல் பணம் கிடைக்காவிட்டால் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஏற்ப வித்தியாசமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்சார்கள்
ஏஎடிம்களில் உள்ள சென்சார்கள் மூலம் வங்கிகள் நிகழ்நேர அடிப்படையில் இயந்திரத்திர் எவ்வளவு பணம் இருக்கின்றன என்று தகவல்கள் பெருகின்றன, இதன்மூலம் ஏடிஎம்மில் எவ்வளவு பணம் உள்ளது. அது முடிந்துபோக சராசரியாக எவ்வளவு நேரம் என்பதையும் வங்கிகளுக்கு தெரியும். எனவே இதன் அடிப்படையில் ஏஎடிம் இயந்திரங்களில் வங்கி பணம் நிரப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications