பேங்க் அக்கவுண்ட் அப்டேட்.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இதுல மட்டும் கவனமா இருங்க!
பேங்க் அக்கவுண்ட் (Bank Account) வைத்திருக்கும் ஒவ்வொரு நபருக்கும் முக்கியமானதொரு அறிவிப்பை ஆர்பிஐ (RBI) வெளியிட்டுள்ளது. உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் கேஒய்சி அப்டேட் (KYC Update) செய்யாமல் இருக்கும்பட்சத்தில், உங்களுக்கு வரும் அலெர்ட்டின்போது என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி இருக்கிறது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொட்டிக் கடைக்கு சென்றால் கூட கூகுள் பே இருக்கா? போன்பே இருக்கா? என்று கேட்கும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. இதனால், அதுதொடர்பான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.

அந்த வரிசையில், கேஒய்சி அப்டேட் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம், பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்யும்போதே கேஒய்சி அப்டேட் செய்யப்படும். ஆனால், இப்போது, ஆன்லைனிலும் செய்து கொள்ள முடிவதால், அந்தந்த பேங்க் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கேஒய்சி அப்டேட் செய்யுமாறு, அறிவுறுத்தி வருகிறது.
இந்த கேஒய்சி விவரங்களில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற்றிருப்பதால், அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதுதொடர்பாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (Reserve Bank of India) சில பாதுாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. சமீப நாட்களாக கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என்று எஸ்எம்எஸ், கால் மற்றும் இமெயில் பேங்க் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அலர்ட் அனுப்பப்படுகிறது.
இதை செய்யவில்லை என்றால், உங்களது பேங்க் அக்கவுண்ட் முடக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்படுவதால், வாடிக்கையாளர்களும் அதில் கேஒய்சி விவரங்களை கொடுக்க முற்படுகின்றனர். இதை தவிர்க்க வேண்டும் என்று அதில் ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது. சில அடையாளம் தெரியாத கும்பல்கள், பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களிடம், இதுபோன்ற போலியான கேஒய்சி அலர்ட்டை அனுப்பி பணத்தை பறிக்க திட்டமிடுகின்றன.

இதுபோன்று உங்களுக்கு கேஒய்சி அலர்ட் வரும்பட்சத்தில் ஆர்பிஐயின் பாதுாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள். அவை பின்வருமாறு, அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் எண்களிடம் இருந்து எஸ்எம்எஸ், கால் மற்றும் இமெயில் மூலமாக கேஒய்சி அலர்ட் வந்தால் பேங்க் வாடிக்கையாளர்கள் யாரும் தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிரக்கூடாது.
அதேபோல புதிய ஆப்களை பதிவிறக்கும் செய்யுமாறும், உங்களது லாகின் விவரங்களை மாற்றும்மாறும் வரும் லிங்குகளை ஒப்பன் செய்யக்கூடாது. குறிப்பாக, கேஒய்சி அப்டேட் செய்யவில்லை என்றால், உங்களது அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டும் அல்லது க்ளோஸ் செய்யப்படும் என்று கூறினால், அதை நம்பி ஏமாந்து விடக்கூடாது
இதுபோன்ற வரும் எஸ்எம்எஸ், கால், இமெயில் குறித்து www.cybercrime.gov.in வெப்சைட் அல்லது 1930 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. ஆகவே, கேஒய்சி அப்டேட்டில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்பது இப்போது தெரிந்திருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு சில டிப்ஸ்களும் இருக்கின்றன.
கேஒய்சி அப்டேட் செய்யுமாறு, கஸ்டமர் கேரில் இருந்து கால் வந்தால், அந்த நம்பரானது, உங்களது வங்கியின் உடையதா என்பதை முதலில் சரிபாருங்கள். ஒருவேளை தெரியவில்லை என்றால், நீங்களே வங்கியின் கஸ்டமர் கேரை அழைத்து சந்தேகத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். அதேபோல எஸ்எம்எஸ், இமெயில் வந்தாலும், அதுகுறித்து வங்கியை தொடர்புகொண்டு விளக்கம் கேட்பது மிகவும் நல்லது.


Click it and Unblock the Notifications








