Home
News

பேடிஎம் பேலன்ஸ்.. மார்ச் 1 முதல் புது ரூல்ஸ்.. ஆர்பிஐ உத்தரவு யாருக்கு.. விளக்கமளித்த பேடிஎம்!

ஆர்பிஐ புது ரூல்ஸ் (RBI New Rules) காரணத்தால் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் ஆப்பை பயன்படுத்த முடியுமா? பேடிஎம் வாலெட் பேலன்ஸ் (Paytm Wallet Balance) என்னவாகும்? பேடிஎம் யூசர்களுக்கு ஏதாவது சிக்கலா? போன்ற பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த குழப்பங்களுக்கு பேடிஎம் நிறுவனமே விளக்கம் அளித்துள்ளது. மக்களிடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. இப்போதெல்லால், பொட்டிக்கடை முதல் சூப்பர் மார்கெட் வரை போன் மூலமே பணப்பரிவர்த்தனை செய்து கொள்ள முடிகிறது. இதனால், அதுதொடர்பான கட்டுபாடுகளும் அதிகரித்து விட்டன.

பேடிஎம் பேலன்ஸ்.. மார்ச் 1 முதல் புது ரூல்ஸ்.. RBI உத்தரவு யாருக்கு?

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையில், பேடிஎம் நிறுவனத்தின் ஆப் மூலம் மாதத்துக்கு 10 கோடிக்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைகளை அதன் யூசர்கள் செய்து வருகின்றனர். அதேபோல 30 கோடிக்கும் அதிகமான பேடிஎம் அக்கவுண்ட்கள் இருக்கின்றன. இந்த நிறுவனம், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (Reserve Bank of India) விதிகளை மீறியதாக ஜனவரி 31ஆம் தேதி அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதில், பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் கஸ்டமர் கணக்குகளில் இருந்து, வாலெட்கள், ஃபாஸ்ட்டேக்குகள், என்சிஎம்சி கார்டுகள் போன்றவற்றில், கிரெடிட் செய்யப்படும் வட்டி, கேஷ்பேக்குகள் மற்றும் ரீஃபண்டுகளை தவிர, மற்ற டெபாசிட்கள், கிரெடிட் பரிவர்த்தனைகள் மற்றும் டாப் அப்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

சேமிப்பு வங்கிக் கணக்குகள், நடப்புக் கணக்குகள், பாஸ்ட்டேக்குகள் மற்றும் நேஷனல் காமன் மொபைலிட்டி கார்டுகள் போன்ற கணக்குகளில் இருந்து அதன் வாடிக்கையாளர்கள் இருப்பு தொகைகளை திரும்பப் பெற்று கொள்ளலாம் அல்லது பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது, பேலன்ஸ் இருக்கும் வரையில் மட்டும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

பேடிஎம் பேலன்ஸ்.. மார்ச் 1 முதல் புது ரூல்ஸ்.. RBI உத்தரவு யாருக்கு?

மேற்கூறிய பரிவர்த்தனைகளை தவிர ஏஇபிஎஸ் (AEPS), ஐஎம்பிஎஸ் (IMPS) பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக் கூடாது. ஒன்97 கம்யூனிகேஷன் லிமிடெட் ( (One97 Communications Ltd) மற்றும் பேடிஎம் பேமெண்ட்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (Paytm Payments Services Ltd) ஆகிவற்றின் நோடல் கணக்குகள் (Nodal Accounts) பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் நிறுத்தப்பட வேண்டும்.

இப்படி பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை ஆர்பிஐ விதித்துள்ளது. இதனால், பேடிஎம் ஆப் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு முடங்கிவிடும். எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்ய முடியாது என்று செய்திகள் வெளியாகி பேடிஎம் யூசர்களை கதிகலங்க செய்துவிட்டது. இதனால், பேடிஎம் நிறுவனமே, அதற்கு முறையான விளக்கம் அளித்து யூசர்களின் குழப்பத்தை தீர்த்துள்ளது.

அதாவது, பேடிஎம் பேமெண்ட் பேங்க் (Paytm Payments Bank) கணக்குகள், பேடிஎம் வாலெட், பேடிஎம் பாஸ்டேக் மற்றும் மொபிலிட்டி கார்டுகள் ஆகியவற்றில் இருக்கும் பேலன்ஸ்களை மட்டும், தற்போதும் அல்லது பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகும் யூசர்கள் பயன்படுத்தலாம். உங்களின் சேமிப்பு கணக்கில் இருந்தோ அல்லது நடப்பு கணக்கில் இருந்தோ பணத்தை பயன்படுத்தவும், பரிவர்த்தனை செய்யவும் எந்த தடையும் கிடையாது.

அதேபோல பேடிஎம் கியூஆர் (Paytm QR), பேடிஎம் சவுண்ட் பாக்ஸ் (Paytm Soundbox), பேடிஎம் கார்டு மெஷின் (Paytm Card Machine) ஆகியவற்றின் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கும் எந்த தடையும் கிடையாது. பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் தவிர்த்துவிட்டு, மற்ற வங்கி பார்ட்னர்களுடன் செயல்பட திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.

ஆகவே, பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவே ஆர்பிஐ கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஆக்சிஸ் போன்ற மற்ற வங்கிகள் மூலம் பேடிஎம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் கிடையாது. அவர்கள் வழக்கமாக யுபிஐ பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். இதுபோன்ற தகவல்களுக்கான கிஸ்பாட் தளத்தை பின்தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI New Rules Paytm Explains To Users From Paytm Wallets to Fund Transfers After February 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X