PhonePe, Paytm யூஸ் பண்ணி பிஸ்னஸ் பண்றீங்களா.. RBI போட்ட புது ரூல்ஸ்!
ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), ரேஸர்பே (Razorpay) மற்றும் கேஷ்ஃப்ரீ (Cashfree) போன்ற பேமண்ட் அக்ரிகேட்டர்கள் (Payment Aggregators - PA) தலையில் இன்னொரு சுமையை தூக்கி வைத்துள்ளது.
ஏற்கனவே யுபிஐ (UPI) சேவையில் குறைவான லாப வரம்புகள் மற்றும் பூஜ்ஜிய வணிக தள்ளுபடி விகிதம் (Zero merchant discount rate) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிஏ-க்கள், புதிய ஆர்பிஐ மாஸ்டர் டைரக்ஷன் ஆன் பேமென்ட் அக்ரிகேட்டர்களின் (RBI Master Direction on Payment Aggregators) கீழ் அனைத்து வணிகர்களிடமும் ரீ-கேஒய்சி (re-KYC) செயல்முறையை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆர்பிஐ-யின் புதிய வழிகாட்டுதல்களின் கீழ், பிஏ-க்கள் டிசம்பர் 2026 க்குள் அனைத்து வணிகர்களின் மறு கேஒய்சி செயல்முறையையும் முடிக்க வேண்டும். வணிகர்கலீம் வணிகத்தை சீர்குலைக்காமல் கேஒய்சி செயல்முறையை மீண்டும் நடத்துவதற்கு மெனுவல் ஆக (கைமுறை ஆக) பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும்
புதிய வணிகருக்கான ஆன்போர்டிங் செயல்முறையில் நீட்டிக்கப்பட்ட கேஒய்சி (Extended KYC) கட்டாயமாகும்.
இதற்கான முழு பொறுப்பும் பிஏ-க்களிடம் உள்ளது. இது ஆன்போர்டிங்கை கடினமாகவும் மெதுவாகவும் ஆக்குகிறது. இதை சரியான முறையில் செய்து முடிக்க பிஏ-க்கள் தங்கள் கேஒய்சி மற்றும் இணக்கக் குழுக்களை அதிகரிப்பதை தவிர வேறு வழி இருக்காது.
மேலும் ஆர்பிஐ-யின் இந்த புதிய வழிகாட்டுதல்கள் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை கண்காணித்தல் மற்றும் FIU-IND (நிதி புலனாய்வுப் பிரிவு-இந்தியா) உடன் அறிக்கைகளை தாக்கல் செய்தல் ஆகியவற்றையும் கட்டாயமாக்குகின்றன. மேலும் பிஏ-க்கள் வழக்கமான சைபர் பாதுகாப்பு தணிக்கைகளை நடத்தி அறிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கியுடன் பகிரவும் வேண்டும்.
ரீ-கேஒய்சி ஒருபக்கம் இருக்க, உண்மையான பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேம்களுக்கான தடை ஆனது நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது பிஏ-க்களுக்கான இரண்டாவது பெரிய தலைவலி ஆகும். ஏனென்றால் ரியல் மணி ஆன்லைன் கேம்களில் யுபிஐ பேமண்ட் தான் ஆதிக்கம் செலுத்துகிறது; மிகவும் சிறிய அளவில் தான் பேங்க் கார்டுகள் மற்றும் வங்கி கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
யுபிஐ சேவையானது பூஜ்ஜிய வணிக தள்ளுபடி விகிதத்தை அதிகரிக்கிறது. அதாவது பிஏ-க்கள் தொடர்புடைய வருவாய் எதுவும் இல்லாமலேயே பெரிய அளவிலான பேமண்ட்களை கையாளுகின்றன. பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப செலவுகள் ஏற்கனவே பலருக்கு இந்த வணிகத்தை சாத்தியமற்றதாக்குகின்றன. இதற்கிடையில் ரியல் மணி கேம்களுக்கும் தடை செய்யப்பட உள்ளது பிஏ-களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம், பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேம்களுக்கான தடை (Ban on Online Money Games) ஆனது அக்டோபர் 1 ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்றும், அதே நாளில் ஆன்லைன் விளையாட்டுகளை மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் (Promotion and Regulation of Online Games Act - PROGA) விதிகள் முறையாக அறிவிக்கப்படும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஐசிஐசிஐ (ICICI) உட்பட சில வங்கிகள் ஆனது யுபிஐ பரிவர்த்தனைகளில், வணிகர்களிடம் இருந்து ஒரு சிறிய கட்டணத்தை அமைதியாக வசூலிக்கத் தொடங்கியுள்ளன. அதாவது பூஜ்ஜிய வணிக தள்ளுபடி விகிதம் ஆனது வெளிப்படையாகவே மீறப்படுகிறது. ஆனால் வங்கிகள் இதை "தொழில்நுட்ப கட்டணம்" என்று முத்திரை குத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகர்களிடம் வசூலிப்பதை தொடர்கிறது. இருப்பினும், இந்த வணிக தள்ளுபடி விகிதம் ஆனது பிஏ-க்களுடன் பகிரப்படவில்லை, இதனால் யுபிஐ சேவை வழியாக அவர்களுக்கு கிட்டத்தட்ட எந்த வருவாயும் இல்லை.


Click it and Unblock the Notifications








