Home
News

புது விதிகள்.. வங்கியில் நேரடியாக ரூ.2000 டெபிட்.. யுபிஐ பேலன்ஸ் மாற்றம்.. ரிசர்வ் வங்கியின் கொள்கை!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (Reserve Bank of India) நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் யுபிஐ பேலன்ஸ் (UPI Balance) விதிகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் மூலம் யுபிஐ வாடிக்கையாளர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் யுபிஐ பேலன்ஸ் குறையும்பட்சத்தில் ரூ.2000 தானாகவே பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து எடுத்து கொள்ளப்படும். இந்த புதிய மாற்றத்தால் என்ன வரப்போகிறது? ரூ.2000 எதற்காக எடுக்கப்படுகிறது? இதுகுறித்து ஆர்பிஐ (RBI) என்ன சொல்கிறது? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததில் இருந்து, என்னென்ன புதிய மாற்றங்கள் வரப்போகிறதோ என்ற எண்ணத்தில் மக்களின் மனநிலை இருக்கிறது. இதில் நிதி தொடர்பான மாற்றங்கள் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மூலம் வெளியாகும் என்பதால், அதன் நிதிக்கொள்கை கூட்டத்தின் மீது ஒட்டுமொத்த கவனமும் சென்றுள்ளது.

புது விதிகள்.. வங்கியில் நேரடியாக ரூ.2000 டெபிட்.. யுபிஐ பேலன்ஸ் விதி!

இப்போது, இந்த கூட்டத்தில் யுபிஐ பேலன்ஸ் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்யப்படிருக்கிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இதை உறுதி செய்துள்ளார். இந்த மாற்றம் மூலம் யுபிஐ லைட் வாலெட் (UPI Lite Wallet) வாடிக்கையாளர்களின் பேலன்ஸ் குறையும் பட்சத்தில் தானாகவே பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் வாலெட்டுக்கு மாற்றப்படும்.

யுபிஐ லைட் என்றால் என்ன? இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் - என்பிசிஐக்கு (National Payments Corporation of India - NPCI) கீழ் இந்த சேவை வழங்கப்படுகிறது. கூகுள் வாலெட் போல டிஜிட்டல் வாலெட் சேவையை இந்த யுபிஐ லைட் கொடுக்கிறது. அதாவது, குறிப்பிட்டத்த தொகையை வாலெட்டில் வைத்து கொண்டு யுபிஐ பேமெண்ட்களை செய்து கொள்ளலாம்.

இந்த பேமெண்ட்களுக்கு யுபிஐ பின் நம்பர் தேவையில்லை. இதன் மூலம் அனுப்பப்படும் தொகையானது, நேரடியாக பேங்கில் இருந்து எடுக்கப்படாது. வாலெட்டில் இருந்து எடுக்கப்படும். இதனால், சிறிய தொகைகளை பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm) போன்ற ஆப்களில் இந்த சேவை கிடைக்கிறது.

புது விதிகள்.. வங்கியில் நேரடியாக ரூ.2000 டெபிட்.. யுபிஐ பேலன்ஸ் விதி!

இந்த யுபிஐ லைட் வாலெட்டில் அதிகபட்சமாக ரூ.2000 பேலன்ஸ் வைத்து கொள்ளலாம். அதேபோல ரூ.500-க்கும் மேலான பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு அதிபட்சமாக ரூ.4000 தொகையை பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து இந்த வாலெட்டுக்கு மாற்றி கொள்ளலாம். இதற்கு எந்தவித கட்டணமும், கேஒய்சி வெரிபிகேஷனும் கிடையாது.

இந்த யுபிஐ லைட் வாலெட் மூலம் தெரியாத இடங்கள் மற்றும் நபர்களுக்கு அனுப்பப்படும் சிறிய அளவிலான பேமெண்ட்கள் மிகவும் பாதுகாப்பாக மாற்றப்படும். இதனாலேயே இந்த சேவை யுபிஐ வாடிக்கையாளர்களிடையே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த யுபிஐ லைட் வாலெட்டில் ஆர்பிஐ புதிய மாற்றங்களை செய்துள்ளது.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா செய்த புதிய மாற்றம்: இந்த யுபிஐ லைட் சேவையில் முன்பு வாடிக்கையாளர்களே ரூ.2000 பணத்தை தங்களது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து வாலெட்டுக்கு மாற்றி வந்தனர். இது சிறிய அளவிலான தொகையாக இருப்பதால், எளிதில் தீர்ந்துவிடும். ஆகவே, அடிக்கடி பணத்தை பேங்கில் இருந்து வாலெட்டுக்கு மாற்ற வேண்டிய சூழல் இருந்தது.

இப்போது, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா செய்துள்ள மாற்றத்தால், ரூ.2000 பணம் ஆட்டோபிள் (Autofill) செய்துகொள்ளப்படும். இந்த ஆட்டோபிள் ரூ.500ஆக பேலன்ஸ் குறையும்போது செய்யப்பட வேண்டுமா? அல்லது ரூ.1000ஆக பேலன்ஸ் குறையும் போது செய்யப்பட வேண்டுமா? என்பதை யுபிஐ வாடிக்கையாளர்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம். இந்த மாற்றம் விரைவில் அமலுக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI New Rules For UPI Lite Wallet User Balance Will Automatically Reload With Limit of Rs 2000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X