Home
News

புது RBI விதிகள்.. EMI கட்டாம விட்டா.. இனி மொபைல் லாக்.. அப்புறம் பேங்குக்கு தான் போகனும்.. என்னென்ன வருது?

ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது பேங்குகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு புதிய விதிகளை கொண்டுவர பரிசீலனை செய்துவருகிறது. இந்த விதிகள் மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஸ்மார்ட்போன் வாங்குவோர் தவணை செலுத்த தவறினால், அவர்களது ஸ்மார்ட்போனை லாக் செய்யும் அதிகாரத்தை கொடுக்கும். இதனால், ஸ்மார்ட்போனை முற்றிலும் பயன்படுத்த முடியாமலும் போகலாம். இந்த புதிய விதிகள் ஏன் கொண்டுவரப்பட திட்டமிடப்படுகிறது. முழு விவரங்கள் இதோ.

இந்தியாவில் ஈஎம்ஐ மூலம் ஸ்மார்ட்போன்களை வாங்குவது என்பது வழக்கமாக மாறிவிட்டது. ரூ.15,000 விலை கொண்ட ஸ்மார்ட்போனாக இருந்தாலும் சரி, ரூ.1,50,000 விலை கொண்ட ஸ்மார்ட்போனாக இருந்தாலும் சரி, ஈஎம்ஐ செலுத்தி வாங்கி கொள்ளலாம். பேங்குகள் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் இதற்காக கஸ்டமர்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறது.

புது RBI விதிகள்.. EMI கட்டாம விட்டா.. இனி மொபைல் லாக்.. அப்புறம்?

இப்படி ஈஎம்ஐ மூலம் வாங்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஈஎம்ஐ செலுத்தினால் எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால், செலுத்த தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பேங்குகள் அல்லது ஃபைனான்ஸ் நிறுவனங்களின் ஏஜென்ட்கள் ஸ்மார்ட்போனை வாங்கியவரை தொடர்பு கொண்டு தவணையை செலுத்துமாறு கோரிக்கை வைப்பார்கள். ஆனால், இது மாறப்போகிறது.

சிறு கடன் நுகர்வோர் கடன்களில் (Small-ticket Consumer Loans) ஸ்மார்ட்போன்கள் வாங்கிவிட்டு, அதற்கான தவணையை செலுத்தாமல் இருந்தல் அதிகரித்து வருதாக தெரிகிறது. இதை கட்டுப்படுத்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆனது புதிய விதிகளை பரிசீலித்துள்ளது. இது, பேங்குகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு ஸ்மார்ட்போனை லாக் செய்யும் அதிகாரத்தை கொடுக்கிறது.

இதனால், கஸ்டமர்களின் தனிப்பட்ட தகவல்கள் அணுகப்படும் என்று நினைக்க வேண்டாம். இந்த புதிய விதிகளின்படி, ஈஎம்ஐ செலுத்தாத காரணத்தால் ஸ்மார்ட்போனை லாக் செய்யும்பட்சத்தில் அதுகுறித்து கடன் வாங்கியவர்களிடம் முதலில் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு ஒப்புதல் பெற வேண்டும். இதை செய்த பிறகே ஸ்மார்ட்போனை லாக் செய்ய முடியும்.

குறிப்பாக ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டால், அதில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை அணுக முடியாது. ஸ்மார்ட்போனை மட்டுமே பயன்படுத்த முடியாமல் போகும். இதுவே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய ஈஎம்ஐ ஸ்மார்ட்போன் லாக் (EMI Smartphone Lock) விதிகளில் இருக்கிறது. இந்த புதிய விதிகள் பரிசீலனையில் மட்டுமே இருக்கிறது.

ஏன் இந்த விதிகள்?
ஈஎம்ஐ ஆப்ஷனில் ஸ்மார்ட்போன்களை வாங்குவோரது எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அதை திருப்பி செலுத்தாமல் இருப்பதும் அதிகரித்துள்ளது. இதனால், கடன் கொடுத்த நிறுவனங்கள் கஸ்டமர்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. அதோடு ஸ்மார்ட்போன்களின் பல்வேறு ஆப்களும் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டது.

இதனால், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு புதிய விதிகளை கொண்டுவர ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா முடிவெடுத்தது. இதில் தனிப்பட்ட விவரங்களை அனுமதியின்றி பயன்படுத்த கூடாது. கஸ்டமர்களின் ஒப்பதல் இல்லாமல் அதை பகிரக்கூடாது போன்ற பல்வேறு விதிகளை கொண்டுவந்தது. இதனால், ஈஎம்ஐ செலுத்தாமல் இருந்தலை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனாலேயே இந்த ஈஎம்ஐ ஸ்மார்ட்போன் லாக் விதிகளை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இது கஸ்டமர்களின் ஒப்புதலுக்கு பிறகே லாக் செய்யப்பட இருப்பாதால், அவர்கள் ஈஎம்ஐ செலுத்தி அதை அன்லாக் செய்து கொள்ளலாம். இதனால், ஈஎம்ஐ செலுத்தல் அதிகரிக்கும். ஆனால், முழு விதிகள் வந்த பிறகே அதை பற்றி தெரியவரும்.

Best Mobiles in India

English summary
RBI New Rules For EMI Smartphones May Let Banks To Lock Your Smartphone With Missed EMI Why This
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X