Home
News

ஆர்பிஐ புது ரூல்ஸ்.. பேங்க் டெபாசிட்.. ஏடிஎம் மட்டுமில்ல.. சிடிஎம்-க்கு வருது.. என்னென்ன மாறுது?

2024-25ஆம் நிதியாண்டில் பிரதமர் மோடி தலைமயிலான மத்திய அரசு, பல்வேறு புது விதிகளை அமல்படுத்த தொடங்கிவிட்டது. இப்போது, பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் புதிய கேஷ் டெபாசிட் விதிகளை ஆர்பிஐ (RBI) முன்மொழிந்துள்ளது. இந்த விதிகள் குறித்த விவரம் இதோ.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் மத்திய அரசு, புதுப்புது விதிகளை கொண்டுவருகிறது. ஏற்கனவே, வருமான வரி விதிப்பு, பென்ஷன் பணம், பிஎஃப் பேலன்ஸ், கிரெடிட் கார்டு, இன்சூரன்ஸ் சந்தா என்று நேரடியாக சாமானிய மக்கள் முதல் வரி செலுத்தும் மக்கள் வரையில் மாற்றங்களை ஏற்படுத்தும் விதிகளை அமல்படுத்திவிட்டது.

RBI ரூல்ஸ்.. பேங்க் கேஷ் டெபாசிட்.. UPI ஆப் போதும்.. ATM மட்டுமில்ல!

இப்போது, அடுத்த விதிகளுக்கு தயராகி இருக்கிறது. 2024-25ஆம் நிதியாண்டின் முதலாவது, நிதிக் கொள்கைக் கூட்டத்தில் (Monetary Policy Committee) ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (Reserve Bank of India) ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேங்க் கேஷ் டெபாசிட் குறித்த முக்கிய கொள்கை முடிவுகளை அறிவித்தார். ஏடிஎம் (ATM) மெஷின்களில் டெபிட் கார்டு இல்லாமல், யுபிஐ ஆப் (UPI) மூலம் பணத்தை எடுக்கும் நடைமுறையானது, ஏற்கனவே அமலில் இருக்கிறது.

இதேபோல கேஷ் டெபாசிட் மெஷின்களில் (Cash Deposit Machines) பேங்க் கஸ்டமர்கள் டெபிட் கார்டு இல்லாமலேயே யுபிஐ ஆப்பை மட்டுமே பயன்படுத்தி பணத்தை செலுத்துவதற்கான கொள்கை முடிவு இந்த கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் பேங்க் ஆப்கள் (Bank Apps) அல்லது கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe) போன்ற மூன்றாம் தர ஆப்கள் மூலம் பணத்தை நேரடியாக டெபாசிட் செய்து கொள்ள முடியும்.

ஆகவே, கேஷ் டெபாசிட் மெஷின்களில் பணத்தை செலுத்த செல்லும்போது, டெபிட் கார்டு எடுத்து செல்வது, பின் நம்பர், அக்கவுண்ட் நம்பர், மொபைல் நம்பர் கொடுப்பது போன்ற எந்தவொரு தேவையும் இனி இருக்காது. ஆகவே, இந்த நடைமுறை எளிதாகவும், விரைவாகவும் பேங்க் கஸ்டமர்களிடையே வந்துவிட அதிக வாய்ப்புள்ளது.

RBI ரூல்ஸ்.. பேங்க் கேஷ் டெபாசிட்.. UPI ஆப் போதும்.. ATM மட்டுமில்ல!

எப்படி பணம் செலுத்த முடியும்? இந்த யுபிஐ கேஷ் டெபாசிட் (UPI Cash Deposit) நடைமுறையானது, ஏடிஎம் மெஷினில் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் நடைமுறையை போலவே இருக்கலாம். அதாவது, யுபிஐ மூலம் ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுக்கும் சேவையை வழங்கும் பேங்குகள், தங்களது ஏடிஎம்களில் யுபிஐ திரும்பப்பெறுதல் (UPI Withdrawal) ஆப்ஷனை வழங்குகின்றன.

இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்து எவ்வளவு பணத்தை எடுத்த விரும்புகிறீர்களே அதை கொடுத்தால் சிங்கிள்-யூஸ் டைனாமிக் கியூஆர் கோட் (Single-use Dynamic QR Code) தோன்றும். இந்த கியூஆர் கோடை உங்களது யுபிஐ ஆப் மூலம் ஸ்கேன் செய்தால், நீங்கள் உள்ளீடு செய்த தொகையை எடுக்க அனுமதி கோரி யுபிஐ பின் கேட்கப்படும்.

இதை கொடுத்து விட்டால், ஏடிஎம்மில் இருந்து பணம் பெற்று கொள்ளலாம். இதேபோல கியூஆர் கோட் நடைமுறையை பின்பற்றி கேஷ் டெபாசிட் மெஷின்களிலும் பணத்தை செலுத்தும் விதிகள் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், இதை மட்டுமே கேஷ் டெபாசிட் மெஷின்களில் எளிதாக கொண்டுவரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

RBI ரூல்ஸ்.. பேங்க் கேஷ் டெபாசிட்.. UPI ஆப் போதும்.. ATM மட்டுமில்ல!

இந்த யுபிஐ கேஷ் டெபாசிட் நடைமுறையானது, பேங்க் கஸ்டமர்களின் வசதியை மேம்படுத்தும் மற்றும் பேங்குகள் பணத்தை கையாளுவதில் இருக்கும் செயல்முறையை எளிதாக்கும் என்று ஆர்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா விரைவில் வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அடுத்த சில மாதங்களுக்குள் இந்த கேஷ் டெபாசிட் நடைமுறைகள் அமலுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பல்வேறு முடிவுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆகவே, தேர்தலுக்கு பின் படிப்படியாக புதிய நடைமுறைகளுக்கு மக்களை மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
RBI New Rules For Cash Deposit in Banks Via UPI At Cash Deposit Machines Customers Can Deposit Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X