Home
News

பேங்க் அக்கவுண்ட் புது ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. ATM சார்ஜ்.. UPI, IMPS லிமிட்.. இனிமேல் என்னென்ன மாறுது?

ஆர்பிஐ (RBI) ஆனது ஜீரோ பேலன்ஸ் மற்றும் ஜீரோ கட்டணத்துடன் கிடைக்கும் பேங்க் அக்கவுண்ட்டில் புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதில் ஏடிஎம் கட்டணம், யுபிஐ, ஐஎம்பிஎஸ், நெப்ட் மட்டுமல்லாமல், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட விதிகளும் வருகின்றன. பேங்க் கஸ்டமர்கள் இந்த விதிகளை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விதிகள் ஆனது பிஎஸ்பிடி (BSBD) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்டில் (Basic Savings Bank Deposit Account) அமலுக்கு வருகின்றன. இந்த அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மினிமம் பேலன்ஸ் (Minimum Balance) கிடையாது. ஏடிஎம் கட்டணம் (ATM Charges) கிடையாது. ஆனால், ஒருவருக்கு ஒரு அக்கவுண்ட் மட்டுமே ஓப்பன் செய்ய முடியும்.

பேங்க் அக்கவுண்ட் புது ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. ATM சார்ஜ்.. மாறது?

இதனால், பிஎஸ்பிடி அக்கவுண்ட்டை ஓப்பன் செய்ய தகுதிகளை வரையறுக்க பேங்குகள் முடிவெடுத்தன. ஆனால், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆனது தகுதிகளை வரையறுக்க மறுத்துவிட்டது. இந்த அக்கவுண்ட்களுக்கான புதிய விதிகளையும் கொண்டுவந்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த விதிகளின்படி பிஎஸ்பிடி அக்கவுண்ட்களில் சேவைகள் கொடுக்கப்பட இருக்கிறது.

1. பிஎஸ்பிடி அக்கவுண்ட்களில் அதிக கேஷ் டெபாசிட்களுக்கு அனுமதி கொடுக்கப்படும். மின்னணு வழிகள் அல்லது செக் கலெக்சன் மூலம் பணத்தை பெறலாம் மற்றும் ஒவ்வொரு மாதமும் லிமிட் இல்லாமல் டெபாசிட்களை செய்து கொள்ளலாம். ரொக்கமாக பணத்தை டெபாசிட் செய்தாலும், டிஜிட்டல் பேமெண்ட்களாக (Digital Payments)டெபாசிட் செய்தாலும் இது பொருந்துகிறது.

2. பிஎஸ்பிடி கஸ்டமர்களுக்கு வருடாந்திர கட்டணம் இல்லாமல் ஏடிஎம் அல்லது ஏடிஎம்-கம்-டெபிட் கார்டு சேவை கொடுக்கப்படும். வருடத்திற்கு குறைந்தது 25 லீப்களை கொண்ட செக் புக் (Cheque book) கொடுக்கப்படும். இலவசமக இன்டர்நெட் பேங்கிங் (Internet Banking), மொபைல் பேங்கிங் (Mobile Banking) சேவைகளை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இலவச பாஸ்புக் அல்லது மாதாந்திர ஸ்டேட்மெண்ட்டை எந்த கட்டணமும் இல்லாமல் பெற்று கொள்ளலாம். ஆகவே, பிஎஸ்பிடி கஸ்டமர்கள் லிமிட் இல்லாமல் சேவைகள் கொடுக்கப்படும். மாதத்துக்கு 4 முறை இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம். இது ரொக்கமாக பணத்தை எடுக்கும்போது மட்டுமே பொருந்தும். ஆனால், டிஜிட்டல் பேமெண்ட்களுக்கு கிடையாது.

3. பிஓஎஸ் (PoS) பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல், நெப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) பரிவர்த்தனைகளில் லிமிட் இல்லாமல் பணத்தை எடுத்து கொள்ளலாம். அதேபோல யுபிஐ (UPI) மற்றும் ஐஎம்பிஎஸ் (IMPS) பரிவர்த்தனைகளுக்கும் பணம் எடுக்கும் வரம்பு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. இந்த விதிகளின்படி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சேவைகள் கொடுக்கப்படுகின்றன.

மேலும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆனது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மற்றொரு விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இது டிஜிட்டல் பேமெண்ட்களை செய்யும் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் அமலுக்கு செய்யப்பட இருக்கிறது. அதாவது, டிஜிட்டல் பேமெண்ட்களில் ஓடிபி (OTP) பயன்படுத்தப்படுகிறது. இதில் கூடுதலாக ஆதன்டிகேஷன் கொண்டுவரப்பட இருக்கிறது.

இந்த 2 பேக்டர் ஆதன்டிகேஷன் (2 Factor Authentication) விதிகள் ஓடிபி மட்டுமே கொடுத்து முடிக்க வேண்டிய பரிவர்த்தனைகளில் கூடுதலாக மற்றொரு ஆதன்டிகேஷனை கேட்கும். இது பாஸ்வேர்ட் (Password), பின்நம்பர் (PIN Number) அல்லது பிங்கர்பிரிண்ட் (Fingerprint) போன்று இருக்கும். இது கஸ்டமர்கள் ஏற்கனவே பயன்படுத்திய ஆதன்டிகேஷனாக இருக்கும். இந்த விதிகளும் வருகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI New Rules For Basic Savings Bank Deposit Account Mobile Banking Free ATM Charges From 1 April
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X