Home
News

RBI-யின் புது பேங்க் ரூல்ஸ்.. 5 நாட்கள் டைம்.. அதிகபட்சம் ரூ.25000.. எல்லா பேங்க் அக்கவுண்ட்டுக்கும் செக்!

ஆர்பிஐ (RBI) என்கிற இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது யுபிஐ பேமண்ட், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் ஏடிஎம்களை உள்ளடக்கிய பணபரிவர்தனையில் தொடர்பான புதிய விதிகளை அறிவித்து உள்ளது.

என்ன விதிகள்? ஆர்பிஐ, அதன் பொறுப்பான வணிக நடத்தை கட்டமைப்பின் (Responsible Business Conduct framework) கீழ், 2026 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது திருத்த வழிகாட்டுதல்களை (Third Amendment Directions 2026) வெளியிட்டு உள்ளது. இது மின்னணு வங்கி பரிவர்த்தனைகளில் (Electronic banking transactions) மோசடியை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு வலுவான பாதுகாப்புகளை முன்மொழிகிறது.

RBI-யின் புது பேங்க் ரூல்ஸ்.. எல்லா பேங்க் அக்கவுண்ட்டுக்கும் செக்!

மேலே குறிப்பிட்டது போல, இது முதன்மையாக யுபிஐ பேமண்ட்கள் (UPI payments), இண்டர்நெட் பேங்கிங் (Internet banking), மொபைல் பேங்கிங் (Mobile banking), டெபிட்/கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் (Debit/credit card transactions) மற்றும் ஏடிஎம் பரிவர்த்தனைகள் (ATM transactions) உள்ளிட்ட டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளில் இருந்து வங்கி வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கிறது.

எப்போது முதல் அமல்? ஆர்பிஐ வரைவு வழிகாட்டுதல்கள் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும். அதாவது இது ஜூலை 1 ஆம் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும் என்று அர்த்தம். இந்த புதிய விதிகள் - சிறு நிதி வங்கிகள், கட்டண வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் உள்ளூர் பகுதி வங்கிகளை தவிர்த்து மீதமுள்ள எல்லா வணிக வங்கிகளையும் உள்ளடக்கும்.

5 நாட்களுக்குள் செய்ய வேண்டும்: ஆர்பிஐ-யின் இந்த வரைவு, சிறிய டிஜிட்டல் வங்கி மோசடிகளுக்கு இழப்பீட்டு வழிமுறையையும் முன்மொழிகின்றன. ஒரு தனிப்பட்ட வாடிக்கையாளர், உண்மையான மோசடி மின்னணு பரிவர்த்தனையில் ரூ.50,000 வரை இழந்தால், அவர்கள் நிகர இழப்பில் 85 சதவீதம் அல்லது ரூ.25,000 வரை, எது குறைவாக இருக்கிறதோ, அதை அவர்கள் வாழ்நாளில் ஒருமுறை பெறலாம்.

இதற்கு தகுதி பெற, நடந்த மோசடியை ஐந்து நாட்களுக்குள் வங்கி மற்றும் தேசிய சைபர் குற்ற போர்டல் அல்லது உதவி எண் (1930) இரண்டிற்கும் தெரிவிக்க வேண்டும். சிறிய இழப்புகளுக்கு, பெரும்பாலான இழப்பீடு ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் (வாடிக்கையாளரின் வங்கி மற்றும் பயனாளி வங்கியிலிருந்து சிறிய பங்களிப்புகளுடன்). பணம் பின்னர் மீட்கப்பட்டால், ஆர்பிஐ சுற்றறிக்கையின்படி இழப்பீடு அதற்கேற்ப மீண்டும் கணக்கிடப்படும்.

2 வகை பரிவர்த்தனைகள்: அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கான தெளிவான வரையறைகளையும் ஆர்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஒடிபி (OTP), பின் (PIN), கார்டு விவரங்கள் அல்லது பாஸ்வேர்ட்கள் போன்ற அங்கீகார முறைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும் என்று வரைவு கூறுகிறது.

இருப்பினும், மோசடியின் மூலம் பெறப்பட்ட சான்றுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள், அல்லது வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டாலோ அல்லது முறையான பெறுநர்கள் என்று காட்டி கொண்டு மோசடி செய்பவர்களுக்கு பணம் அனுப்ப கட்டாயப்படுத்தப்பட்டாலோ, அது மோசடியான மின்னணு வங்கி பரிவர்த்தனைகளின் (அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள்) கீழ் வரும்.

2 வகை அலட்சியம்: வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் அலட்சியம் என்றால் என்ன என்பதையும் ஆர்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு வங்கியின் அலட்சியங்கள் என்றால், பாதுகாப்பான அமைப்புகளை பராமரிக்க தவறுவது, பரிவர்த்தனை எச்சரிக்கைகளை அனுப்பாதது அல்லது மோசடியை புகாரளிப்பதற்கான வழிகளை வழங்க தவறுவது ஆகியவைகள் அடங்கும். ஒரு வாடிக்கையாளரின் அலட்சியம் என்றால், பாஸ்வேர்ட்கள் அல்லது ஒடிபி-க்களை பகிர்வது, வங்கி மோசடி எச்சரிக்கைகளை புறக்கணிப்பது அல்லது தீங்கிழைக்கும் ஆப்களை பதிவிறக்குவது ஆகியவைகள் அடங்கும்.

உடனடி புகார்: மின்னணு வங்கி பரிவர்த்தனையின் போது எந்தவொரு மோசடி நடந்தாலும், வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் போர்டல் அல்லது தேசிய சைபர் குற்ற உதவி எண் (1930) மூலம் விரைவில் புகார் அளிக்க வேண்டும் என்றும் வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் ஆர்பிஐ அறிவித்துள்ளது

கடைசியாக ஆர்பிஐ வெளியிடப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களின்படி, மின்னணு வங்கி பரிவர்த்தனைகளில் - இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், கார்டுகள் அல்லது பிற டிஜிட்டல் சேனல்கள் மூலம் செய்யப்படும் பேமண்ட்களும் அடங்கும். இவைகள் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007 இல் மின்னணு நிதி பரிமாற்றத்தின் வரையறையின் கீழ் வருகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI New Rules Digital Banking Fraud Up to Rs 25000 Compensation Complaint Within 5 Days and more
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X