1000 ரூபாயோ 2000 ரூபாயோ.. ஆன்லைன் வழியாக பணம் அனுப்ப புதிய வழி.. RBI போட்ட விதிக்கு கட்டுப்பட்ட 6 வங்கிகள்!
ஆர்பிஐ (RBI) என்கிற இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது ஆன்லைன் வழியிலான நெட் பேங்கிங் தொடர்பான புதிய விதியை அறிவித்து, அதை கடந்த 2025 அக்டோபர் மாத இறுதிக்குள், அதாவது அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் நடைமுறைக்கு கொண்டு வருமாறும் உத்தரவிட்டு இருந்தது.
ஆர்பிஐ சொன்னபடியே சில வங்கிகள் அதை செயல்படுத்தி உள்ளன. இதன் கீழ் வங்கிகள் ஆனது தங்களுடைய நெட் பேங்கிங் வலைத்தள முகவரியை (Net banking website address) ஒரு பிரத்யேக இண்டர்நெட் டொமைனுக்கு (Exclusive internet domain) மாற்ற வேண்டும். அந்த டொமைன் .பேங்க்.இன் (.bank.in) ஆகும்.

இந்த ஆர்பிஐ அறிவுறுத்தல்களுக்கு இணங்க, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India - SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி - Punjab National Bank - PNB) மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) உள்ளிட்ட முன்னணி இந்திய வங்கிகள் தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தள யுஆர்எல்-களை (URL) .பேங்க்.இன் டொமைனுக்கு மாற்றியுள்ளன.
இதோடு ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank), எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) மற்றும் ஆக்சிஸ் வங்கி (Axiz Bank) போன்ற வங்கிகள் சுமூகமான இடப்பெயர்வுகளை உறுதியளித்துள்ளன. அதாவது தற்போதைய சேவைகள் அனைத்தும் செயல்பாட்டில் இருக்கும் பழைய யுஆர்எல்கள் ஆனது புதிய .பேங்க்.இந்த அட்ரெஸ் உடன் தடையின்றி இணைக்கப்படும்.மற்றும்
எந்தெந்த முன்னணி வங்கிகள் தங்கள் நெட் பேங்கிங் வெப்சைட்களை புதிய யுஆர்எல்-களுக்கு மாற்றி உள்ளன?
1. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா: https://sbi.bank.in
2. பஞ்சாப் நேஷனல் வங்கி: https://pnb.bank.in/
3. ஐசிஐசிஐ வங்கி: https://www.icici.bank.in/
4. எச்டிஎஃப்சி வங்கி: https://www.hdfc.bank.in/
5. ஆக்சிஸ் வங்கி: https://www.axis.bank.in/
6. கோடக் மஹிந்திரா வங்கி: https://www.kotak.bank.in/en/home.html
சைபர் பாதுகாப்பை மேம்படுத்துதல், மோசடிகளை குறைத்தல் மற்றும் டிஜிட்டல் வங்கியில் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுற்குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆனது கடத்த ஏப்ரல் 22, 2025 அன்று அறிவிப்பு ஒன்றும் வெளியிட்டு இருந்தது
அந்த அறிவிப்பில், இந்த டொமைனுக்கான பிரத்யேக பதிவாளராக பணியாற்ற, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ், இந்திய தேசிய இணைய பரிமாற்றத்தால் (NIXI) அங்கீகரிக்கப்பட்ட வங்கி தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IDRBT) மூலம் வங்கிகளுக்கான '.பேங்க்.இன்' டொமைனை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆர்பிஐ கூறியிருந்தது.
மேலும் இந்த பதிவு செயல்முறையைத் தொடங்க வங்கிகள் ஆனது [email protected] என்ற முகவரியில் ஐடிஆர்பிடி-ஐ (IDRBT - Institute for Development and Research in Banking Technology) தொடர்பு கொள்ளலாம் என்றும், விண்ணப்ப செயல்முறை மற்றும் புதிய டொமைனுக்கு இடம்பெயர்வு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஐடிஆர்பிடி ஆனது வங்கிகளுக்கு வழிகாட்டும் என்றும் ஆர்பிஐ அறிவித்து இருந்தது.
மேற்கண்ட புதிய டொமைன் என்கிற மாற்றத்துடன் சேர்த்து, கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் பேங்க் அக்கவுண்ட் தொடர்பான 2 முக்கிய மாற்றங்களும் அமலுக்கு வந்தன. இதன் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் (bank account holders) மற்றும் பேங்குகளில் லாக்கர் வசதியை பயன்படுத்துபவர்களுக்கு (Locker users) குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கும்.
இந்த புதிய விதிமுறைகளின் கீழ், அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்ட்களுக்கு நான்கு வேட்பாளர்களை (Nominees) நியமிக்கலாம். அவர்கள் ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ நியமிக்கப்படலாம். இந்த மாற்றம் - அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கும், அவர்களின் வேட்பாளர்களுக்கும் உரிமைகோரல்களை செய்யும் போது செயல்முறையை நெறிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
வங்கி லாக்கர்களை பொறுத்தவரை, அடுத்தடுத்து பரிந்துரைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதன் பொருள் முதல் வேட்பாளர் கிடைக்கவில்லை என்றால், இரண்டாவது வேட்பாளர் முன்னுரிமை பெறுவார், இது ஒரு மென்மையான மற்றும் தெளிவான உரிமைகோரல் செயல்முறையை உறுதி செய்யும்.


Click it and Unblock the Notifications








