Home
News

பேங்க் பணம் படாதபாடு.. ஏப்.1 முதல் பெரிய மாற்றம்.. RBI கட்டாய விதி அமல்.. டிஜிட்டல் பேமெண்ட்களுக்கு 2 பூட்டு!

இந்தியர்களின் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர இருக்கிறது. 2026 ஏப்ரல் 1 முதல், அனைத்து டிஜிட்டல் பேமெண்ட்களுக்கும் 2எப்ஏ (2FA) கட்டாயமாகிறது. இந்த மாற்றம் ஒட்டுமொத்த பேங்குகள், யுபிஐ பரிவர்த்தனைகளை கொடுக்கும் பேமெண்ட் ஆப்ரேட்டர்களுக்கும் அமல் செய்யப்பட இருக்கிறது.

இப்போதெல்லாம், பேங்கில் இருக்கும் பணத்தை அனுப்புவது, பெரிய விஷயமாக இருக்கவில்லை. பேங்க் அக்கவுண்ட்டுடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால் போதும், ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்கள் வழியாக அனுப்பி கொள்ளலாம். அந்தந்த பேங்குகளும் டிஜிட்டல் பேமெண்ட் ஆப்கள் மூலமாக பணத்தை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கின்றன.

பேங்க் பணம் படாதபாடு.. ஏப்.1 முதல் பெரிய மாற்றம்.. RBI விதி அமல்!

இந்த பரிவர்த்தனைகளில் ஓடிபி (OTP) என்கிற ஒரு-முறை கடவுச்சொல் (One-time password) பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓடிபி மட்டும் கொடுத்தால் போதும், பணத்தை அனுப்பி கொள்ளலாம். ஆனால், 2026 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு ஓடிபி மட்டுமல்லாமல், கூடுதலாக ஒரு ஆதன்டிகேஷன் (Authentication) கட்டாயமாக கொண்டுவரப்படுகிறது. அதாவது, 2எப்ஏ ரூல் (2FA Rule) வருகிறது.

இந்த 2எப்ஏ என்கிற 2 பேக்டர் ஆதன்டிகேஷன் (2 Factor Authentication) என்பது, ஓடிபி மட்டுமே கொடுத்து முடிக்கப்படும் பரிவர்த்தனைகளில் இரண்டாவதாக ஒரு ஆதன்டிகேஷன் கொண்டுவர இருக்கிறது. ஆகவே, ஓடிபி கொடுத்த பிறகு கடவுச்சொல் (Password), கடவுச்சொற்றொடர் (Passphrase) அல்லது பின் நம்பர் (PIN Number) போன்ற மற்றொரு ஆதன்டிகேஷன் கொண்டுவரப்பட இருக்கிறது.

இதில் பேங்க் கஸ்டமர்களிடம் மட்டுமே இருக்கும் ஹார்ட்வேர் டோக்கன்கள் (Hardware Tokens) மற்றும் மொபைல் டிவைஸ் சாப்ட்வேர் டோக்கன்கள் (Software Tokens) கிடைக்கலாம். அதேபோல பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட ஆதார் கார்டில் இருக்கும் ஃபிங்கர்பிரிண்ட் (Fingerprints), முக அங்கீகாரம் (Facial Recognition) பயன்படுத்தபடலாம். இப்படி இரண்டாவதாக ஒரு ஆதன்டிகேஷன் இருக்கும்.

இதை பேங்குகள் மட்டுமல்லாமல், பேமெண்ட் சேவைகளை கொடுக்கும் ஒட்டுமொத்த பேமெண்ட் ஆப்ரேட்டர்கள், பின்டெக் நிறுவனங்களும் கட்டாயமாக அமல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஆனது 2026 ஏப்ரல் 1ஆம் தேதியை நிர்ணயம் செய்துள்ளது. ஆகவே, பணத்தை அனுப்புவது எளிதாக இருக்காது. ஆனால், இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கூடுதல் பாதுகாப்பாக செய்து முடிக்க முடியும்.

இதில் ஓடிபிக்கு அடுத்து இரண்டாவதாக கொடுக்கப்படும், ஆதன்டிகேஷனை இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டு சொல்லவில்லை. பேங்குகள், பேமெண்ட் ஆப்ரேட்டர்கள் மற்றும் பின்டெக் நிறுவனங்களே அதை கஸ்டமர்களுக்கு கொடுக்க வேண்டும். இது பின்நம்பர், ஃபிங்கர்பிரிண்ட் போன்று எளிதாகவே இருக்கும். இது டிஜிட்டல் பேமெண்ட்களை செய்யும் கஸ்டமர்களுக்கு புதிதில்லை.

ஆகவே, இந்த 2 பேக்டர் ஆதன்டிகேஷனை எளிதாக அமல் செய்துவிட முடியும். இது கட்டாயமாக்கப்பட்டு இருப்பதால், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல் செய்யப்பட்டுவிடும். இதற்குள் பேங்குகள், பேமெண்ட் ஆப்ரேட்டர்கள் கஸ்டமர்களுக்கு இரண்டாவது ஆதன்டிகேஷனை கொண்டுவரலாம். இது டிஜிட்டல் பேமெண்ட்களுக்கு பொருந்துகிறது. ஆகவே, யுபிஐ பரிவர்த்தனைக்களுக்கும் அமலுக்கு வருகிறது.

இருப்பினும், ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்கள் வழியாக பணத்தை அனுப்பும், முன் அந்த ஆப்களை ஓப்பன் செய்ய பிங்கர்பிரிண்ட் இருக்கிறது. அதன்பிறகு பணத்தை அனுப்பும்போது பின்நம்பர் கேட்கப்படுகிறது. ஆகவே, இதுவே கிட்டத்தட்ட 2 பேக்டர் ஆதன்டிகேஷன் போலவே இருக்கிறது. ஓடிபி வழியாக நடக்கும் பரிவர்த்தனைகளில் பின்நம்பர் போன்று ஏதுமில்லை.

ஓடிபி நம்பரை கொடுத்தாலே பணப்பரிவர்த்தனை செய்ய முடிகிறது. ஆகவே, இதை கூடுதல் பாதுகாப்பாக செய்யவே 2 பேக்டர் ஆதன்டிகேஷன் வர இருக்கிறது. இது பின்நம்பர், ஃபிங்கர்பிரிண்ட் போன்ற பழக்கமாக ஆதன்டிகேஷனாக இருக்கலாம். ஆகவே, இந்த மாற்றத்தால் குழப்பம் இருக்காது. இருப்பினும், கூடுதலாக ஒரு ஆதன்டிகேஷனை பேங்க் கஸ்டமர்கள் செய்ய வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI New 2FA Rule Digital Payments to Change From April 1 2026 Complete Details Available Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X