அது சரி.? கிரிப்டோகரன்சியின் பாதுகாப்பை ஆர்பிஐ உறுதி செய்ய வேண்டுமாம்!

ரிசர்வ் வங்கியின் துறைகளுக்கு இடையேயான ஆய்வுக்குழு, தனது எல்லையை விரிவுப்படுத்தி சைபர்செக்யூரிட்டி, தொழில்நுட்ப தளங்கள், பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளில் தனியார்த்துறை வல்லுநர்களையும் ஈடுபடுத்தலாம்.

|

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் மெய்நிகர் பணத்தை (Virtual currency) அறிமுகப்படுத்துவது குறித்த ஆய்வை குறிப்பிட்டு அசோசெம் அமைப்பு கூறுகையில், கிரிப்டோ கரன்ஸி என்பது மிண்ணணு கருவிகள் மற்றும் தளங்களில் கைமாறிச் செல்லும் என்பதால், அதன் தரவுச்சங்கிலியின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் அதிக கவனம் தேவை என எச்சரித்துள்ளது.

அது சரி.? கிரிப்டோகரன்சியின் பாதுகாப்பை ஆர்பிஐ உறுதி செய்ய வேண்டுமாம்!


மேலும் கூறுகையில், தனியாரால் உலகத்தின் பல பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கிரிப்டோகரன்ஸி பற்றிய ஆய்வை துவங்கும் முன், ரிசர்வ் வங்கியின் துறைகளுக்கு இடையேயான ஆய்வுக்குழு, அனைத்து வித பாதுகாப்பு முறைகளையும் ஆராய வேண்டும் என்கிறது. உலகம் முழுவதுமுள்ள 87மில்லியன் பயனர்களின் பேஸ்புக் தகவல்கள் திருடப்பட்ட பின்பு, தகவல் பாதுகாப்புக்கான தேவை மேலும் அதிகமாகியுள்ளது.

புதிதுபுதிதாக முளைத்து வரும் தொழில்நுட்ப தளங்களில் இருந்து நம்மை நாமே தனிமைப்படுத்திவிட முடியாது. ஒவ்வொரு தனிமனிதரும் மெய்நிகர் பணத்தை உபயோகப்படுத்தும் போது மோசடி, தகவல் கசிவு போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு தேவை என்கிறார் அசோசெம் பொதுச்செயலாளர் டி.எஸ்.ராவத்.

ரிசர்வ் வங்கியின் பொறுப்பு என்னவென்றால்,
தற்போதுள்ள பணத்தை போலவே மெய்நிகர் பணத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று கூறினார். மேலும் கூறுகையில், மெர்நிகர் பண உலகில் அடியெடுத்து வைக்கும் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவானது தைரியமான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றாகும். அனைத்து மத்திய வங்கிகளின் உயர்மட்ட கூட்டு முயற்சியின் மூலம் உலகளாவிய கொள்கைகளை வகுத்து இந்த புதிய பணத்தை சமூகவிரோதிகள், தீவிரவாதிகள், எதிரி நாடுகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றார்.

தனிநபர் உரிமை பற்றிய பிரச்சனைகள் கொழுந்துவிட்டு எரிந்து பல்வேறு விவாதங்களை கிளப்பும் இவ்வேளையில், உச்சநீதிமன்றம் சட்டப்படி அனைத்துக் கோணங்களிலும் இதை ஆராய வேண்டும். அதே நேரம் பயனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் புதிய பணத்தை அறிமுகப்படுத்த ஏதுவாக வரி ஆணையம் போல அனைத்து துறைகளுக்கும் இடையை இணைப்பை ஏற்படுத்தவேண்டும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

அது சரி.? கிரிப்டோகரன்சியின் பாதுகாப்பை ஆர்பிஐ உறுதி செய்ய வேண்டுமாம்!


ரிசர்வ் வங்கியின் துறைகளுக்கு இடையேயான ஆய்வுக்குழு, தனது எல்லையை விரிவுப்படுத்தி சைபர்செக்யூரிட்டி, தொழில்நுட்ப தளங்கள், பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளில் தனியார்த்துறை வல்லுநர்களையும் ஈடுபடுத்தலாம்.

Best Mobiles in India

English summary
RBI must ensure the safety of the data trail that cryptocurrency can leave says Assocham; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X