புது பேங்க் ரூல்ஸ்.. ஜூலை 24 தான் கடைசி.. அதுக்கு அப்புறம் பணம் அனுப்ப, வாங்க.. RBI-ன் புதிய சக்கர வியூகம்!
நீங்கள் எந்த வங்கியில் அக்கவுண்ட் (Bank Account) வைத்து இருந்தாலும் சரி, ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கொண்டுவரும் இந்த மாற்றம் உங்களுக்கும், உங்கள் வங்கிக்கும் பொருந்தும். என்ன மாற்றம்?
தங்கள் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் எந்தவொரு ஏஐ மாடலையும் உடனடியாக நிறுத்துவதற்கான 'கில் ஸ்விட்ச்' (Kill Switch) வசதியை அனைத்து வங்கிகளும் கொண்டிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.

ஏஐ (AI) என்கிற செயற்கை நுண்ணறிவு டூல்கள் பிரபலமடைந்து வரும் வேளையில், அவற்றின் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த அச்சமும் நிலவுகிறது. முக்கியமாக, உணர்திறன் மிக்க நிதி தொடர்பான தரவுகளை கையாளும் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஏஐ மாடல்கள் விஷயத்தில் இந்த அச்சம் அதிகம் காணப்படுகிறது.
இதன் விளைவாகவே - ஆர்பிஐ ஆனது ஏஐ கில் ஸ்விட்சை அமலுக்கு கொண்டு வரவும், ஏஐ-ஐ பயன்படுத்தும் வங்கிகள் மற்றும் பிற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கான விரிவான கட்டமைப்பை முன்மொழிந்து, புதிய வரைவு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. இது கட்டாயமாக்கப்பட்டால், அத்தகைய ஏஐ அமைப்புகளை 'கில் ஸ்விட்ச்' வசதி மூலமாகவோ அல்லது பிற வழிகளிலோ உடனடியாக கட்டுப்படுத்தவோ, இடைநிறுத்தவோ அல்லது செயலிழக்க முடியும்.
அதாவது, ஒரு வங்கி தான் பயன்படுத்தும் அனைத்து ஏஐ அமைப்புகளையும் ஒரு சுவிட்சை இயக்குவது போன்ற எளிமையான முறையில் முடக்கக்கூடிய திறனை கொண்டிருக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் அல்லது தவறான முடிவுகளை தரும் ஏஐ மாடல்கள் உடனடியாக நிறுத்தப்படாமல் தொடர்ந்து இயங்குவதை தவிர்க்க, அத்தகைய அமைப்புகளை கட்டுப்படுத்தவும், இடைநிறுத்தவும் மற்றும் செயலிழக்க செய்யவும் கூடிய வழிமுறைகளை வங்கிகள் உருவாக்க வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
குறிப்பாக நிதி நிறுவனங்களுக்கு இணைய பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்திய 'ஆந்த்ரோபிக்' (Anthropic) நிறுவனத்தின் 'கிளாட் மைத்தோஸ்' (Claude Mythos) ஏஐ மாடல் குறித்த கவலைகள் பெரிய அளவில் எழுந்திருக்கும் சூழலில், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இது மட்டும் அல்ல. செயற்கை நுண்ணறிவு மூலம் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் மனித மேற்பார்வைக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்றும் ஆர்பிஐ வரைவு வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, செயற்கை நுண்ணறிவு பணிகளை செய்ய வேண்டிய நேரங்களில்கூட, எடுக்கப்படும் எந்தவொரு முடிவுகளையும் ஒரு மனிதர் மேற்பார்வையிட வேண்டும்.
இந்த வரைவு கட்டமைப்பு, எளிய ஸ்ப்ரெட்ஷீட் அடிப்படையிலான கால்குலேட்டர்கள் முதல் சிக்கலான அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் வரை, ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து ஏஐ மாடல்களுக்கும் பொருந்தும். ஒரு மாடல் - உள்நாட்டில் உருவாக்கப்பட்டதா அல்லது மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறப்பட்டதா என்பதை பொருட்படுத்தாமல், வங்கி பயன்படுத்தும் எந்தவொரு மாடலின் விளைவுகளுக்கும் அந்த வங்கியே முழு பொறுப்பேற்க வேண்டும்.
இதுபோன்ற ஏஐ மாடல்களை பயன்படுத்துவதற்கு முன்பு, வங்கிகள் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, இடர் அடிப்படையிலான ஒரு படிநிலை கட்டமைப்பையும் முன்மொழிந்துள்ளது. இதன் கீழ், நிறுவனங்கள் ஏஐ மாடல்களை இடர் நிலைக்கேற்ப வகைப்படுத்தி, அதற்கேற்ற மேற்பார்வை, சரிபார்ப்பு மற்றும் கட்டுப்பாடுகளை பயன்படுத்த வேண்டும்.
மதிப்பிடப்பட்ட இடர் ஆனது, வங்கியின் இடர் ஏற்பு வரம்பை மீறினால், அந்த நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள், பயன்பாட்டு கட்டுப்பாடுகள், சரிசெய்தல் அல்லது மாடலை செயலிழக்க செய்தல் உள்ளிட்ட விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், வாரியத்தின் இடர் மேலாண்மை குழுவிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
மேலும் ஒரு மாடலின் இடர் நிலை ஆனது, வருடத்திற்கு ஒரு முறையாவது மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். மேலும், அதிக இடர் கொண்ட மாடல்கள், தொழில்நுட்ப அல்லது இடர் குழுவால் மட்டும் அங்கீகரிக்கப்படுவதற்கு பதிலாக, செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்பு இயக்குநர்கள் குழுவின் இடர் மேலாண்மை குழுவிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
மேலும் ஆர்பிஐ-யின் இந்த வரைவு, தானியக்க சார்புநிலைக்கு எதிராகவும் எச்சரித்கை விடுத்துள்ளது. அதாவது, ஊழியர்கள் தங்கள் சொந்த முடிவெடுக்கும் திறனை பயன்படுத்தாமல், செயற்கை நுண்ணறிவின் வெளியீடுகளை அதிகமாக சார்ந்திருக்கும் அபாயம் உள்ளது. வாடிக்கையாளர்கள் அல்லது வெளி பயனர்களுடன் தொடர்பு கொள்ளும் ஜெனெரட்டிவ் ஏஐ மாடல்களுக்கு, கூடுதல் இணைய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்த வரைவு வழிகாட்டுதல்கள் குறித்த கருத்துக்களை ஜூலை 24 ஆம் தேதிக்குள் வழங்குமாறும் இந்திய ரிசர்வ் வங்கி அழைப்பு விடுத்துள்ளது. ஆக இந்த ஜூலை மாத இறுதிக்குள் ஆர்பிஐ ஆனது வங்கிகளின் நிலைப்பாடு குறித்த ஒரு முடிவுக்கும் வரலாம் மற்றும் அதை தொடர்ந்து ஏஐ கில் ஸ்விட்ச் அறிமுகம் மற்றும் அமல் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications