புது ரூல்ஸ்.. அக்.1 முதல் அமல்.. ரூ.10,000 கடனோ.. ரூ.25,000 கடனோ.. இனிமே லாக் ஆகிடும்.. என்னென்ன வரப் போகுது?
பேங்க் அக்கவுண்ட் வழியாகவோ, கிரெடிட் கார்டுகள் வழியாகவோ மாதாந்திர தவணை கட்டும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஆர்பிஐ லோன் மொபைல் விதிகள் (RBI Loan Mobile Rules) அமலுக்கு வர இருக்கின்றன.
ரூ.10,000 கடனோ அல்லது ரூ.25,00 கடனோ தவணை கட்டாமல் விட்டால், இந்த விதிகள் பொருந்தும். ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது இந்த லோன் மொபைல் விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இது ஒட்டுமொத்த பேங்குகள், தவணையை மட்டுமே கொடுக்கும் நிதி நிறுவனங்களுக்கு பொருந்தும்.

அதாவது, ஸ்மார்ட்போனை முழு தொகையை கொடுத்து வாங்காமல். மாதாந்திர தவணையை செலுத்தி வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டும் இந்த விதிகள் நேரடியாக அமலுக்கு வர இருக்கின்றன. ஆகவே, எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி (HDFC), ஆக்சிஸ் (Axis), ஐஓபி (IOB) போன்ற எந்தவொரு பேங்குகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும். ஆர்பிஐ அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
ஆக்சிஸ் பிளிப்கார்ட் கிரெடிட் கார்டு போன்ற ஸ்மார்ட்போனுக்கு மாதாந்திர தவணை முறையை கொடுக்கும் கார்டுகளுக்கும் பொருந்தும். இதேபோன்ற முறைகளில் மாதாந்திர தவணை முறையில் ஸ்மார்ட்போனை வாங்கிவிட்டு, தவணை செலுத்தாமல் விட்டால், அந்த ஸ்மார்ட்போனை லாக் செய்யும் அதிகாரத்தை லோன் கொடுத்து நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும்.
இதனாஸ், மாதாந்திர தவணையில் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டாம் என்று நினைக்க வேண்டாம். இப்படி ஸ்மார்ட்போனை லாக் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை பேங்குகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடை பிடிக்க வேண்டும். தவணை செலுத்தாமல் இருந்து, 90 நாட்கள் கழித்த பிறகே ஸ்மார்ட்போனை லாக் செய்யும் அனுமதியை பேங்குகள், நிதி நிறுவனங்கள் பெற இருக்கின்றன.
இந்த 90 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஸ்மார்ட்போனை வாங்கி கஸ்டமர்களுக்கு நோட்டீஸ் வழியாக முன்கூட்டியே தகவல் கொடுக்கப்படும். ஆகவே, மாதாந்திர தவணை கட்ட தவறிய 60 நாட்களுக்கு பிறகு முதல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும். இந்த நோட்டீஸ் பெற்ற 21 நாட்களுக்கு மீண்டும் தவணையை கட்டினால், வழக்கம்போல லோனை தொடரலாம்.
இதை தவறினால் இரண்டாவது நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும். இந்த நோட்டீஸ் வந்தும் கூட 7 நாட்களுக்கு மீண்டும் தவணை தொடர்ந்து, தப்பித்து கொள்ளலாம். இதையும் பொருட்படுத்தாமல், மாதாந்திர தவணையை கட்ட தவறும்பட்சத்தில் மட்டுமே ஸ்மார்ட்போனை லாக் செய்யும் அதிகாரம் பேங்குகள், நிதி நிறுவனங்களுக்கு கிடைக்கும். இதுவும் முழுமையாக லாக் கிடையாது.
இன்டர்நெட் சேவை வழக்கம்போல கொடுக்கப்படும். இன்கம்மிங் கால்கள் வழக்கம் போல வரும். எஸ்ஓஎஸ் (SOS) அனுப்புதல் மற்றும் அரசு அறிவிப்புகள் வருதல் போன்ற முக்கிய சேவைகள் தொடர்ந்து கிடைக்கும். ஸ்மார்ட்போனில் இருக்கும் போட்டோக்கள், டாக்குமெண்ட்கள் போன்ற தனிப்பட்ட விவரங்கள் (Personal Data) எடுக்கப்படாது.
இது தவிர பணம் அனுப்புதல், பெறுதல் உள்ளிட்டவையில் தடை இருக்கலாம். இருப்பினும், மீண்டும் தவணை செலுத்தி உடனடியாக லாக்கில் இருந்து விலக்கு பெற முடியும். இப்படி விலக்கு பெற்றால், உடனடியாக அன்லாக் செய்யப்பட வேண்டும். அதாவது 1 மணி நேரத்துக்குள் செய்யப்பட வேண்டும். தாமதம் ஏற்பட்டால் 1 மணிநேரத்திற்கு ரூ.250 இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், இந்த விதிகளை பின்பற்றாமல், கஸ்டமர்களின் ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டாலும், 1 மணி நேரத்துக்கு ரூ.250 இழப்பீடு பெற்று கொள்ள கஸ்டமர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆகவே, 90 நாட்களுக்கு மேல் தவணை செலுத்தாதபட்சத்தில் மட்டுமே இந்த லாக் விதிகள் அமலுக்கு வரும். இதற்கு பிறகும் உடனடியாக தவணை செலுத்தி அன்லாக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications