Home
News

RBI அதிரடி.. இனி யாரும் ஏமாற்ற முடியாது.. இந்த 2 நம்பர் மட்டும் தான் உண்மை.. மோசடியில் சிக்காதீங்க மக்களே!

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), இந்தியாவில் உள்ள மக்கள் மற்றும் இந்திய வங்கிகள் (banks of India) கவனிக்க வேண்டிய ஒரு புதிய அதிரடி உத்தரவை (new rule order) தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. இனி இந்திய வங்கிகள் அவர்களின் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள இரண்டு குறிப்பிட்ட துவக்க எண்ணிலிருந்து மட்டுமே அழைப்புகளை (starting number series) மேற்கொள்ள வேண்டும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. பெருகிவரும் மோசடி (fraud) மற்றும் ஸ்பேம் கால் (spam calls) மோசடிகளில் இருந்து மக்களை பாதுகாக்க இத்தகைய நடவிகையை எடுத்துள்ளதாக RBI தெரிவித்துள்ளது.

RBI மூலம் அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் இரண்டு துவக்க மொபைல் எண்களை பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் ஆன்லைன் மோசடி, மொபைல் போன் மற்றும் டெலிபோன் மூலம் நடைபெறும் ஸ்பேம் கால் அழைப்பு மோசடி என்று பல விதமான மோசடிகள் இப்போது பெருகிவிட்டது. இத்தகைய மோசடிகளில், மோசடி செய்யும் நபர்கள் அவர்களை வங்கி அதிகாரிகள் (bank authorities) போல் பாவித்து, பொதுமக்களை ஏமாற்றி, பெருந் தொகையை ஆன்லைன் மூலம் திருடி வருகிறார்கள்.

RBI அதிரடி.. இனி யாரும் ஏமாற்ற முடியாது.. இந்த 2 நம்பர் மட்டும் உண்மை

RBI அதிரடி.. இனி யாரும் ஏமாற்ற முடியாது.. இந்த 2 நம்பர் மட்டும் தான் உண்மை:

இந்த சம்பவங்கள் தினசரி இந்தியா முழுக்க நடைபெற்று வருகிறது. இத்தகைய மோசடிகளால் மக்கள் பெரியளவில் பணத்தை இழந்து வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி தற்போது புதிய விதிமுறையை நடைமுறைக்கு (RBI new rules to stop spam calling) கொண்டுவந்துள்ளது. இதன் படி, RBI தற்போது இரண்டு துவக்க எண்கள் கொண்ட சீரிஸ் அழைப்புகளை (RBI approved starting number series) அங்கீகரித்துள்ளது.

இனிமேல் இந்திய வங்கிகள், அவர்களுடைய வாடிக்கையாளர்களை எந்தவொரு காரணத்திற்காக தொடர்புகொள்ள விரும்பினாலும், அந்த வங்கி மேற்கொள்ளும் வாய்ஸ் கால் அழைப்பு எண் 1600 என்ற துவக்க எண்ணுடன் துவங்க வேண்டும் (banking related voice calls should start with 1600 number) என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது, பரிவர்த்தனை தொடர்பான அனைத்து அழைப்புகளுக்கும் வங்கிகள் இனிமேல் 1600 என்ற எண்ணில் இருந்து தொடங்கும் தொலைபேசி எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இனி இந்த இரண்டு துவக்க எண்களுடைய அழைப்புகள் மட்டுமே உண்மை:

வங்கி வாடிக்கையாளரின் ஒரு பரிவர்த்தனை (transaction) அல்லது நிதி விஷயம் தொடர்பான (finance related) எந்தவொரு முறையான அழைப்பும் இனிமேல் '1600' என்ற எண்ணில் இருந்து மட்டுமே உங்கள் போனை தொடர்புகொள்ள போகிறது மக்களே. அதேபோல், தனிநபர் கடன்கள் (personal loan), கிரெடிட் கார்டுகள் (credit card) அல்லது காப்பீடு (insurance) போன்ற சேவைகளை வழங்கும் விளம்பர அழைப்புகள் மற்றும் SMS அறிவிப்புகளை மேற்கொள்ள மற்றொரு துவக்க எண் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய சேவைக்கு இனிமேல் 140 என்ற குறிப்பிட்ட துவக்க எண்ணிலிருந்து மட்டுமே அழைப்புகள் மேற்கொள்ள வேண்டுமென்று RBI அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதை தவிர வேறு ஏதேனும் துவக்க எண்ணுடன் உங்கலுக்கு அழைப்பு வந்தால் அது மோசடி என்பதை உடனே நீங்கள் அறிந்துகொள்ளலாம். இனி 1600 அல்லது 140 என்ற துவக்க எண்களை தொடர்ந்து பின்வரும் எந்தவொரு எண்ணாக இருந்தாலும், அது அதிகாரப்பூர்வ அழைப்பு என்பதை பொதுமக்கள் எளிமையாக அடையாளம் காணலாம்.

மோசடியில் இருந்து பொதுமக்களை காப்பாற்றி பாதுகாக்க நடவடிக்கை:

இது தவிர பிற எண்களில் இருந்து அழைப்புகளை மேற்கொள்ளும் நபர், அவரை வங்கி அதிகாரி (bank officials or authorities) அல்லது RBI அதிகாரி என்று கூறினாலும் கூட பொதுமக்கள் அந்த பொய்களை நம்ப வேண்டாம் என்று RBI அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் இனி போலியான அழைப்புகளை எளிமையாக அடையாளம் காண (identify spam calls easily) இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எடுத்துள்ளது.

இந்த தகவல் பற்றி அறிந்திடாத அணைத்து பொதுமக்களுக்கும் இந்த தகவலை சென்று சேரும்படி பகிர (share) RBI வலியுறுத்தியுள்ளது. உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இந்த புதிய துவக்க எண்கள் பற்றிய விபரங்களை பகிருங்கள். அவர்களை மோசடியில் இருந்து காப்பாற்ற உதவுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI has introduced two dedicated phone number series for banks to call you to avoid SPAM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X