Home
News

UPI பரிவர்த்தனையில் வரும் மிகப்பெரிய மாற்றம்.. இனி இதுதான் லிமிட்.. இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி..

நாடு முழுவதும் யுபிஐ (upi) சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். குறிப்பாக யுபிஐ மூலம் விரைவாகப் பணம் அனுப்பவும், பெறவும் முடியும் என்பதால் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் தற்போது நகரங்கள் முதல் துவங்கி உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் 51-வது நாணயக் கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் யுபிஐ பரிவர்த்தனை குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது UPI 123பே வசதிக்கான பரிவர்த்தனை வரம்பு 5000 ரூபாயில் இருந்து ரூ.10000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

UPI பரிவர்த்தனையில் வரும் மிகப்பெரிய மாற்றம்.. இனி இதுதான் லிமிட்..

மேலும் யுபிஐ லைட் வாலெட்-களில் (UPI Lite Wallet) சேமிக்கப்படும் அதிகபட்ச தொகையை 2000 ரூபாயில் இருந்து ரூ.5000-ஆக உயர்த்தியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. மேலும் ஒரு பரிவர்த்தனைக்கான UPI லைட் வரம்பு 100 ரூபாயில் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது. குறிப்பாக இந்த புதிய பரிவர்த்தனை வரம்பு அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் UPI 123PAY என்பது ஃபீச்சர் போன் மொபைல் பயனர்களுக்கான விரைவான கட்டண முறையாகும். குறிப்பாக இது யுபிஐ கட்டணச் சேவையின் பாதுகாப்பான வழியாகும். அதுவும் ஸ்மார்ட்போன் அல்லது இணையச் சேவை போன்ற வசதிகள் இல்லாமலேயே பயனர்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்த இந்த வசதி அனுமதிக்கிறது. மேலும் இந்தியாவில் அதிக மக்கள் UPI 123PAY வசதியைப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

UPI பரிவர்த்தனையில் வரும் மிகப்பெரிய மாற்றம்.. இனி இதுதான் லிமிட்..

மேலும் சமீபத்தில் கூகுள் பே செயலியிலும் பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டன. அதாவது கூகுள் ஃபார் இந்தியா நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 50 லட்சம் வரையிலான தங்க கடன்களுக்கு கூகுள் பே செயலியில் விண்ணப்பிக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக கூகுள் நிறுவனத்துடன், முத்தூட் ஒப்பந்தம் போட்டுள்ளதாக முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனப் பொது மேலாளர் அபினவ் அய்யர் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி தனிநபர் கடனுக்கான வரம்பு 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தனிநபர் கடன் பெறுவதற்கு அதிக இடங்களில் தங்கமே அடமான பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் இந்தியாவில் ஏழை மற்றும் மிடில் கிளாஸை சேர்ந்த பலரும் தங்கத்தை வைத்தே கடன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சூழ்நிலையில் கூகுள் பே மூலமாக தங்க கடன் பெறும் வசதி வந்துள்ளது. குறிப்பாக முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வாயிலாக இதனை விரிவுபடுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

UPI பரிவர்த்தனையில் வரும் மிகப்பெரிய மாற்றம்.. இனி இதுதான் லிமிட்..

அதேபோல் கூகுள் நிறுவனம் கூகுள் பே செயலியில் UPI Circle என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. யுபிஐ சர்க்கிள் அம்சம் ஆனது ஒரே யுபிஐ அக்கவுண்ட்டில் ஒரு நபரை முதன்மை பயனராகவும், அவர்களின் நம்பகமான குடும்ப உறுப்பினர்களை இரண்டாம் நிலை பயனராகவும் இருக்க அனுமதிக்கிறது. எனவே இதன் மூலம் நீங்கள் இல்லாமலேயே உங்கள் யுபிஐ அக்கவுண்ட்டை பயன்படுத்தி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பணத்தைச் செலுத்த முடியும்.

மேலும் இதில் குறிப்பிட்ட பணப்பரிவர்த்தனை வரம்புகளையும் உங்களால் வைத்துக்கொள்ள முடியும். எனவே இதனால் உங்கள் அம்மா, அப்பா, மனைவி, மகள், மகன் கையில் பணத்தைக் கொடுக்காமல், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் பேமெண்ட் செய்யும் வரம்புகளை நீங்களே கையாள முடியும். அதேபோல் இது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆன்லைனில் பேமெண்ட் மோசடியில் சிக்கக்கொள்ளாமல் தடுக்கவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

photo credit: RBI, indiatoday

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI has increased UPI Lite and UPI 123Pay limits: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X