Home
News

அப்படி போடு.. UPI செயலியில் கொண்டுவரப்படும் புதிய வசதி.. ரிசர்வ் வங்கி அனுமதி.. உற்சாகத்தில் பயனர்கள்..

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களின் மூலமாக யுபிஐ பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யுபிஐ பயனர்களின் வசதியை மேம்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதாவது யுபிஐ வசதியில் ப்ரீ அப்ரூவ்ட் லோன் எடுக்கும் வசதியைக் கொண்டு வர ஆர்பிஐ அனுமதித்துள்ளது. மேலும் இதுதொடர்பான தகவலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

அப்படி போடு.. UPI செயலியில் கொண்டுவரப்படும் புதிய வசதி..

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் டீ குடிப்பது தொடங்கி வீட்டு வாடகைக்கு, மின்சார பில் கட்டுவது வரை பல விஷயங்களுக்கு மக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையைப் பின்பற்றுகிறார்கள்.

இந்நிலையில் நாட்டில் யுபிஐ மற்றும் நுகர்வோர் கடன் சந்தையை மேலும் விரிவு செய்யும் நோக்கில் Pre-sanctioned Credit Lines/Loans எனும் கடனை பயனர்கள் பெற ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதாவது இதன் மூலம் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கடன் பெற்று யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

குறிப்பாக வங்கிகள் இந்த புதிய முறையின் கீழ் கடன் வழங்க ஆர்பிஐ அனுமதி வழங்கியுள்ளதாகச் செப்டம்பர் 4-ம் தேதி வெளியான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பயனர்களுக்கு இந்த கடன் சார்ந்த விதிமுறை மற்றும் நிபந்தனைகளைக் கடன் வழங்கும் நிறுவனங்கள் தெரிவிக்கலாம் என்று ஆர்பிஐ (RBI) தெரிவித்துள்ளது.

அதேபோல் இதற்கான முன் அனுமதியைப் பயனர்களிடமிருந்து யுபிஐ அமைப்புகள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது. மேலும் யுபிஐ-இல் வரும் இந்த புதிய வசதி கிரெடிட் கார்டு பயன்பாடு போன்று தான் இருக்கும் எனத் தெரிகிறது. ஆனாலும் அவசரக் காலங்களில் யுபிஐ சேவையில் வரும் இந்த புதிய வசதி கண்டிப்பாகப் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் இந்த யுபிஐ சேவைகளில் நாம் தவறுதலாக வேறு ஒருவருக்குப் பணம் அனுப்பிவிட்டால் அதை திரும்பப் பெறுவது தற்போது எளிதாகவிட்டது. குறிப்பாக எளிமையான வழிமுறைகள் மூலம் இந்த யுபிஐ செயலிகளில் பணத்தைத் திரும்ப பெற முடியும். மேலும் இப்போது இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பணத்தை திரும்ப பெறுவது எப்படி? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, நீங்கள் தவறான பரிவர்த்தனை மேற்கொண்டால், உடனே நீங்கள் பரிவர்த்தனை மேற்கொண்ட யுபிஐ செயலியில் புகார் கொடுக்கலாம். பின்பு தவறான பரிவர்த்தனையின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து, நீங்கள் பணத்தை மாற்றிய கூகுள் பே, பேடிஎம், போன்பே அல்லது யுபிஐ ஆப்ஸின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் ஹெல்ப்லைனில் மெசேஜாக அனுப்ப வேண்டும்.

அப்படி போடு.. UPI செயலியில் கொண்டுவரப்படும் புதிய வசதி..

அதன்பின்பு கூட உங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், ஆர்பிஐ அமைப்பின் NPCI portal இணையப் பக்கத்தில் புகார் அளிக்கலாம். குறிப்பாக NPCI வலைத்தளமான npci.org.in தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு What we do tab என்ற பக்கத்திற்குச் சென்று, பின்னர் UPIஐத் தேர்வு செய்து Dispute Redressal Mechanism என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அந்த பக்கத்தில் இருக்கும் புகார் பெட்டியில் நீங்கள் மேற்கொண்ட தவறான பரிவத்தனைக் குறித்த விவரங்களைப் பதிவிடவும்.

புகார் பெட்டியில், யுபிஐ பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி, மாற்றப்பட்ட தொகை,பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். இதைச் செய்தால் அடுத்த 24-48 மணி நேரத்தில் பணம் திரும்ப வரும். பின்பு இதை செய்தும் பணம் வரவில்லை என்றால் நேரடியாக ஆர்பிஐ பக்கத்தில் உள்ள புகார் தளத்தில் புகார் கொடுத்து பணத்தை திரும்பப் பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI has given permission to operate pre-approved credit lines through UPI: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X