புது ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. ரூ.50,000 மேல் பணம்.. பேங்க் கிட்ட இருந்து ரூ.25,000 வரும்.. என்னென்ன மாறுது?
பேங்க் அக்கவுண்ட் வைத்து இருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் வருகிற 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆர்பிஐ இழப்பீடு விதிகள் (RBI Compensation Rules) அமலுக்கு வருகின்றன. ரூ.50,000 மேல் பரிவர்த்தனை செய்து, பணத்தை இழந்த கஸ்டமர்களுக்கு இந்த விதிகள் பொருந்தும்.
ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது இந்த விதிகளை அமல் செய்ய இருக்கிறது. எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி (HDFC), ஆக்சிஸ் (Axis), ஐஓபி (IOB) போன்ற எந்த பேங்குகளாக இருந்தாலும் இந்த விதிகளுக்கு உட்பட்டு கஸ்டமர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்து, பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து ரூ.50,000 பணத்தை இழந்த கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த விதிகளின்படி ரூ.25,000 வரை இழப்பீடு கொடுக்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளாக இருப்பதால், மொபைல் பேங்கிங் (Mobile Banking), நெட் பேங்கிங் (Net Banking) கணக்கில் எடுக்கப்படும்.
அதேபோல கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பீம் (BHIM) மற்றும் பேடிஎம் (Paytm) உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும். அதாவது, ஒரு பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து தெரிந்த நபருக்கு வழக்கம்போல பணத்தை அனுப்புவது இதில் பொருந்தாது. அதேபோல உங்களுக்கு தெரியாமலேயே பணத்தை எடுத்தாலும் பொருந்தாது.
ஏமாற்றப்பட்டு பணம் அனுப்பி இருந்தால், பொருந்தும். அதாவது, மோசடி செய்பவர்கள், தாங்கள் ஒரு உண்மையான நபர் அல்லது நிறுவனம் என்று நம்ப வைத்து, கஸ்டமர்களை தாங்களாகவே முன்வந்து பணம் அனுப்ப செய்வதால் பொருந்தும். மிரட்டியோ அல்லது அவசரத்தை ஏற்படுத்தியோ, அல்லது கட்டாயத்தின் பேரில் பணம் செலுத்த வைத்தால் பொருந்தும்.
பேங்கிங் விவரங்களை திருடி பணத்தை பெற்றால் பொருந்தும். அதாவது, பாஸ்வேர்டு (Passwords), பின் நம்பர் (PIN Number), ஓடிபி (OTP) உள்ளிட்ட விவரங்கள் திருடப்பட்டு, அதன் மூலம் மோசடி செய்பவர்கள் பணத்தை பரிமாற்றம் செய்து கொண்டால் இந்த ஆர்பிஐ இழப்பீடு விதிகள் பொருந்தும். ஆகவே, குறிப்பிட்ட தொகையை பெற்று கொள்ளலாம்.
இழப்பீடு பெறுவதற்கு, மோசடி நடந்த 5 நாட்களுக்குள் கஸ்டமர்கள் அதுகுறித்து பேங்குக்கு புகார் அளிக்க வேண்டும். புகார் அளித்த பிறகு, தங்கள் தரப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த மோசடி நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க வேண்டியது பேங்கின் பொறுப்பாக இருக்கிறது. உள்நாட்டுப் பரிமாற்றங்களாக இருந்தால் 45 நாட்களுக்குள் இதை விசாரித்து முடிக்க வேண்டும்.
வெளிநாட்டு பரிமாற்றங்களாக இருந்தால் 60 நாட்களுக்குள்ளும் விசாரித்து முடிக்க வேண்டும். இந்த இழப்பீட்டை நேரடியாக பேங்குகள் வழங்குவதால், திருப்பட்ட பணத்தை திரும்ப பெறுவதற்கு முன்னதாகவே இழப்பீடு கிடைக்கும். ஆகவே, இது ரூ.50,000 வரையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, ரூ.50,000 வரையில் பணத்தை இழந்தால், இழப்பீடு பெறலாம்.
இழந்த தொகை ரூ.50,000 ஆக இருந்தால், அதில் ரூ.25,000 வரையில் இழப்பீடு பெறலாம். இதில் 85 சதவீதம் அல்லது ரூ.25,000 இழப்பீடு இருக்கிறது. ரூ.50,000 கீழ் பணத்தை இழக்கும்போது அதில் இருந்து அதிகபட்சமாக 85 சதவீத பணத்தை பெறலாம். ரூ.30,000 அல்லது ரூ.40,000 இருந்தால் 85 சதவீத பணத்தை திரும்பப் பெறலாம்.
இந்த இழப்பீட்டு விதிகள் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆகவே, டிஜிட்டல் பரிவர்த்தனை வழியாக ரூ.50,000 வரையில் பணத்தை இழந்த கஸ்டமர்கள் பேங்க் தரப்பில் இருந்து 85 சதவீதம் அல்லது ரூ.25,000 பணத்தை முன்கூட்டியே பெற்று கொள்ள முடியும். இது பேங்க் கஸ்டமர்களுக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications