புது ரூல்ஸ்.. டிச.1 முதல் அமல்.. ரூ.30,000 லிமிட்.. பேங்க் அக்கவுண்ட், கிரெடிட் கார்டு.. என்னென்ன மாறுது?
பேங்க் அக்கவுண்ட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு வருகிற டிசம்பர் 1ஆம் (December 1, 2026) தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. குறிப்பாக கிரெடிட் கார்டு (Credit Card) வழியாக எரிபொருள் (Fuel) மற்றும் போக்குவரத்து (Transportation) செலவுகளை அதிகளவில் செய்யும் கஸ்டமர்களுக்கு இது நேரடி மாற்றத்தை கொண்டுவர இருக்கிறது.
இதுபோக ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் ஆர்பிஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. ஆன்லைன் மோசடியால் பணத்தை இழந்தால், அதற்கான இழப்பீட்டை பேங்க் கஸ்டமர்கள் பெறுவதற்கு இந்த விதிகள் வழிவகை செய்து கொடுக்க இருக்கின்றன.

எஸ்பிஐ கார்டு விதிகள்
எஸ்பிஐ கார்டு (SBI) என்று அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (State Bank of India) கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே அமலுக்கு வர இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட வரம்பை தாண்டி அதிக தொகைக்கு பரிவர்த்தனை (Transaction) செய்யும் கஸ்டமர்களுக்கு 1 சதவீதம் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட இருக்கிறது.
போக்குவரத்து (Transportation) சார்ந்த பரிவர்த்தனைகளை பொறுத்தவரையில், வருகிற டிசம்பர் 1ஆம் தேதி முதல் ரூ.30,000-க்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த வரம்பு என்பது ஒட்டுமொத்த மாதாந்திர செலவுக்கு அல்லாமல், ஒவ்வொரு தனிப்பட்ட பரிவர்த்தனைக்கும் (Per Transaction) மட்டுமே கணக்கிடப்படும்.
உதாரணத்திற்கு, போக்குவரத்துக்காக ஒரே பரிவர்த்தனையில் ரூ.35,000 செலுத்தினால், அதற்கு ரூ.350 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். அதுவே ஒரு தனிப்பட்ட பரிவர்த்தனை ரூ.30,000 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் இந்த புதிய விதியின் கீழ் கூடுதல் கட்டணம் கிடையாது. மெர்ச்சன்ட் கேட்டகிரி கோட் (MCC) 4111, 4784 மற்றும் 4131 ஆகியவற்றின் கீழ் மட்டுமே இது பொருந்தும்.
மறுபுறம், எரிபொருள் (Fuel) செலவுகளுக்கான புதிய கட்டண விதிமுறை சற்று வித்தியாசமாக செயல்படுகிறது. ஒரு பில்லிங் சைக்கிளில் (Billing Cycle) கஸ்டமரின் மொத்த எரிபொருள் செலவு ரூ.50,000-ஐ தாண்டினால், ஒட்டுமொத்த எரிபொருள் செலவு தொகைக்கும் 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது ரூ.50,000-க்கு மேல் இருக்கும் தொகைக்கு மேல் முழு தொகைக்கும் கணக்கிடப்படும்.
உதாரணமாக, ஒரு கஸ்டமர் தன்னுடைய பில்லிங் சைக்கிளில் எரிபொருளுக்காக மொத்தம் ரூ.60,000 செலவு செய்தால், முழு தொகையின் அடிப்படையில் ரூ.600 கூடுதல் கட்டணமாக விதிக்கப்படும். மெர்ச்சன்ட் கேட்டகிரி கோட் (MCC) 5172, 5541, 5542 மற்றும் 5983 ஆகியவற்றின் கீழ் கொண்டுவரப்படும் எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு இந்த புதிய கட்டண விதிமுறைகள் பொருந்தும்.
போக்குவரத்து செலவு ஒவ்வொரு பரிவர்த்தனை அடிப்படையிலும், எரிபொருள் செலவு பில்லிங் சைக்கிள் அடிப்படையிலும் கணக்கிடப்படுவதால், அதிக தொகைக்கு எஸ்பிஐ கார்டை பயன்படுத்தும் முன்பு கஸ்டமர்கள் தங்களது செலவு முறைகளை சரிபார்த்து கொள்வது நல்லது. இப்போது, ஆன்லைன் மோசடிக்கான இழப்பீட்டு விதிகளை தெரிந்து கொள்ளலாம்.
ஆர்பிஐ விதிகள்
அடையாளம் தெரியாத நபர்களால் ஏமாற்றப்படுதல், அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் ஏமாற்றப்படுதல் போன்ற ஆன்லைன் மோசடி மற்றும் ஏதாவது ஒரு அவசரநிலையை காரணம் காட்டி, மனரீதியாக அழுத்தம் கொடுத்து பணத்தை பெறும் மோசடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த விதிகளை அமலுக்கு கொண்டுவருகிறது.
ஆகவே, இதுபோன்ற சூழ்நிலைகளில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை பணத்தை இழக்கும் கஸ்டமர்கள், அந்த இழப்பில் இருந்து குறிப்பிட்ட தொகையை பேங்கிடம் இருந்து பெற்று கொள்ள முடியும். மொத்த தொகையில் 85 சதவீத தொகையோ அல்லது அதிகபட்சமாக ரூ.25,000 வரையிலோ இழப்பீடாக சம்பந்தப்பட்ட பேங்குகளிடம் இருந்து பெற்று கொள்ள முடியும்.
அதாவது, ரூ.20,000 பணத்தை இழந்தால், அந்த தொகையின் 85 சதவீதமான ரூ.17,000 இழப்பீடு பெறலாம். அதுவே ரூ.50,000 வரையில் இழந்தால், 85 சதவீத கணக்கீட்டின்படி அதிக தொகை கணக்கில் வந்தாலும் அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே கொடுக்கப்படும். இந்த விதிகள் 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications
