Home
News

ரூ.15,000 லிமிட்.. RBI போட்ட புது ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. இனிமேல் ஆட்டோ டெபிட்டாக போகும் பணம்!

இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (ஆர்பிஐ) ஆட்டோ-டெபிட் விதிகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக ரூ.15,000 வரை உள்ள பரிவர்த்தனைகளுக்கு புதிய லிமிட் அமல்படுத்தப்பட்டிருப்பது பயனர்களுக்கு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.

டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகள் வழியாக ஆட்டோ டெபிட் பேமெண்ட்கள் (Auto Debit Payments) செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆட்டோ பேமெண்ட்களை செய்ய ஈ-மேன்டேட் (e-mandate) கட்டாயமாக இருக்கிறது. அதாவது, பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை ஆட்டோவாக டெபிட் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

ரூ.15,000 லிமிட்.. RBI போட்ட புது ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட் இருக்கா?

இதை பேங்க் கஸ்டமர்கள் மட்டுமே வழங்க முடியும். அதாவது, டிரேடிங் ஆப்களில் எஸ்ஐபி செலுத்துவது, நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ போன்ற ஓடிடி ஆப்களுக்கு சந்தா செலுத்துவது, கிரெடிட் கார்டு பில், ஈபி பில், இன்சூரன்ஸ் பிரீமியம் போன்றவை குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறுகிறது. ஆகவே, ஒவ்வொரு முறை இந்த தேதி வந்தவுடன் கஸ்டமர்கள் பணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.

இதில் ஓடிடி தவிர மற்ற சில பேமெண்ட்களில் குறிப்பிட்ட தேதி தவறினால் அபாராதம் இருக்கும். இதை தடுக்கவே ஆட்டோ டெபிட் பேமெண்ட்கள் கொண்டுவரப்பட்டன. ஒரு முறை ஈ-மேன்டெட் செய்தால் போதும், குறிப்பிட்ட தேதியில் பணம் ஆட்டோவாக டெபிட் செய்யப்பட்டுவிடும். இந்த டெபிட் லிமிட்டை இப்போது ஆர்பிஐ உயர்த்தி இருக்கிறது.

ஆகவே, இப்போது ரூ.15,000 வரையில் ஆட்டோ டெபிட் வழியாக பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஒரு முறை மட்டுமே ஈ-மேன்டேட் செய்தால் போதும், மாதந்தோறும் பணம் ஆட்டோவாக டெபிட் செய்யப்படும். ஓடிபி கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், ரூ.15,000 மேல் ஆட்டோ டெபிட்டில் பணம் எடுக்கப்பட்டால் ஓடிபி தேவைப்படலாம்.

ப்ரீ-டெபிட் நோட்டிபிகேஷன் (Pre-debit Notification): பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து மாதந்தோறும் பணம் டெபிட் செய்யப்படுவதால், அந்த பணத்தை எடுப்பதற்கு முன்னதாகவே கஸ்டமர்களுக்கு நோட்டிபிகேஷன் கொடுக்கப்படும். எஸ்எம்எஸ் அல்லது ஈமெயில் வழியாக இந்த நேட்டிபிகேஷன் கொடுக்கப்படும். இதனால், குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பது சுலபமாக இருக்கும்.

அதாவது, நோட்டிபிகேஷன் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்படுவதால், பேங்க் அக்கவுண்ட்டில் செலுத்த வேண்டிய தொகையை சரியாக இருக்கிறாத என்பதை பார்க்க முடியும். கம்மியாக இருந்தால் வேறு அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை கிரெடிட் செய்து வைத்து கொள்ளலாம். இதனால், ஆட்டோ டெபிட் பேமெண்ட்கள் கேன்சல் செய்யப்படாமல் இருக்கும். இதே போல பணத்தை எடுத்த பிறகும் நோட்டிபிகேஷன் கொடுக்கப்படும்.

இன்சூரன்ஸ் பிரீமியம், கிரெடிட் கார்டு பில் (Insurance Premium, Credit Card Bill): இந்த ஆட்டோ டெபிட்டில் இன்சூரன்ஸ் பிரீமியம், கிரெடிட் கார்டு பில் ஆகியவை பரிவர்த்தனைகள் ரூ.15,000 லிமிட்டுக்குமே மேலே செல்லும். ஆனால், இது தவிர்க்க முடியாத பரிவர்த்தனைகளாக இருப்பதால், இதற்கு விலக்கு இக்கிறது. இந்த இன்சூரன்ஸ், கிரெடிட் கார்டு பில்களுக்கு மட்டும் ரூ.1 லட்சம் வரையில் லிமிட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மற்ற ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகளுக்கு ரூ.15,000 லிமிட் பொருந்தும். யுபிஐ ஆப்களில் ஆட்டோ பே மேன்டேட்கள் செய்யப்படுகின்றன. இதில் மாதந்தோறும் டெபிட் செய்யப்படும் தொகையின் விவரங்கள் இருக்கும். அதேபோல ஆட்டோ டெபிட்டில் எத்தனை மேன்டேட்கள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆகவே, இதில் கேன்சல் ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும்.

இதில் தேவையில்லாத ஆட்டோ டெபிட் மேன்டேட்களை கஸ்டமர்கள் கேன்சல் செய்து கொள்ளலாம். இல்லையென்றால், பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து அனுமதி இல்லாமலேயே பணம் டெபிட் செய்யப்பட்டுவிடும். இருப்பினும், எஸ்எம்எஸ் அல்லது இமெயில் வழியாக நோட்டிபிகேஷன்கள் கொடுக்கப்படும். இதை பார்த்தும், தேவையில்லாத பேமெண்ட்டை கேன்சல் செய்யலாம்.

பார்க்காத பட்சத்தில் பேமெண்ட் டெபிட் செய்யப்பட்டுவிடும். அதை திரும்பப்பெறவது சிரமாக இருக்கும். ஆகவே, ஆட்டோ பே மேன்டெட்களை செய்யும்போது, தேவையில்லாத மேன்டேட்களை கேன்சல் செய்து வைத்து கொள்ளுங்கள். மாதத்துக்கு ஒரு முறை ஆட்டோ டெபிட் மேன்டேட்களை சரிபார்த்து கொள்ளுங்கள். ரூ.15,000 வரையில் ஓடிபி இல்லாமல், ஆட்டோ டெபிட் இனி நடக்கும்.

Best Mobiles in India

English summary
RBI Auto Debit Rule Payments Limit Increases To Rs 15000 Per Transaction Full Details Inside
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X