Home
News

இனி பேங்க் பக்கமே போக வேணாம்.. Google Pay, PhonePe வழியாக கடன் கொடுக்க RBI அனுமதி.. யாருக்கு? எவ்வளவு?

ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது யுபிஐ (UPI) சேவை வழியாக கடன் கொடுக்கும் புதிய வசதிக்கு அனுமதி அளித்துள்ளது. சிறு நிதி வங்கிகளுக்கு (Small Finance Banks - SFBs) யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) மூலம் முன் அனுமதி பெற்ற கடன்களை (Pre-sanctioned credit lines) வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ-யின் இந்த முடிவு சிறு தொழில்கள் (Small businesses), குறு தொழில்முனைவோர்கள் (Micro entrepreneurs) மற்றும் கிராமப்புற (Rural) மற்றும் "பாதி வளர்ந்த" நகர்ப்புறங்களில் (Semi-urban areas) உள்ள தனிநபர்கள் உட்பட, பின்தங்கிய பிரிவினருக்கு (Underserved segments) பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Pay, PhonePe வழியாக கடன் கொடுக்க RBI அனுமதி!

இப்போது வரை, இந்த அம்சம் (அதாவது யுபிஐ வழியிலான கடன் அளிக்கும் அம்சம்) சிறு நிதி வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் பேமெண்ட் வங்கிகள் ஆகியவற்றை தவிர்த்து வந்தது. ஆனால் சிறு நிதி வங்கிகள் ஆனது - கடைசி மைல்கல்லில் உள்ள வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டுள்ளதால், ஹை-டெக் மற்றும் லோ-காஸ்ட் பேங்கிங் மாடல்களுக்கு பெயர் பெற்றவைகளாக உள்ளதால், தற்போது இந்த வசதி சிறு நிதி வங்கிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

யுபிஐ வழியிலான முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்கள் எவ்வாறு செயல்படும்? யுபிஐ வழியிலான முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்கள் ஆனது வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ இயங்குதளம் மூலம் நேரடியாக முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்புகளை அணுக உதவுகிறது. கிரெடிட் லைன்கள், ஓவர் டிராஃப்ட்கள் மற்றும் சில்லறை கடன்களை யுபிஐ உடன் ஒருங்கிணைப்பதன் மூலம், நிதி பரிவர்த்தனைகளை எளிதாக நடக்கும் மற்றும் நிதிகளுக்கான உடனடி அணுகலும் கிடைக்கும்.

ஆர்பிஐ-யின் கூற்றுப்படி, இந்த தடையற்ற கடன் வழிமுறையானது 3 நன்மைகளுக்கு வழிவகுக்கும்:
01. பின்தங்கிய மக்களுக்கான உடனடி நிதி தேவைகளை நிவர்த்தி செய்யும்.
02. சிறு தொழில்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஆதரவு அளிக்கும்.
03. பணமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இதன்கீழ் எவ்வளவு கடன் கிடைக்கும்? இந்த சேவையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. அந்த வழிகாட்டுதல்களில் அதிபட்சமாக எவ்வளவு கடன்கள் வரை வாங்கலாம் என்கிற விவரங்கள் / வரம்புகள் பகிரப்படலாம். மேலும் அந்த வழிகாட்டுதல்கள், இது நாடு முழுவதும் கடன் அணுகலை விரிவுபடுத்துவதில், சிறு நிதி வங்கிகள் முக்கிய பங்கு வகிப்பதை உறுதிசெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பாக இந்திய ரிசர்வ் வங்கியானது யுபிஐ லைட் சேவையில் மேலும் 2 முக்கியமான மாற்றங்களை அமலுக்கு கொண்டு வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது சிங்கிள் யுபிஐ லைட் ஆஃப்லைன் பரிவர்த்தனைக்கான (Single UPI Lite offline transaction) அதிகபட்ச வரம்பு ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், யுபிஐ லைட் வாலட்டின் மொத்த வரம்பு (UPI Lite Wallet Total Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த 2 மாற்றங்களும் உடனடியாக அமலுக்கு வந்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக யுபிஐ லைட்டின் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பை ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆகவும், யுபிஐ லைட் வாலட் வரம்பும் (UPI Lite Wallet Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டு இருந்தது.

மேலும் யுபிஐ லைட் சேவையில் ஆட்டோ டாப்-அப் அம்சமும் (Auto top-up feature) அறிமுகம் செய்யப்பட்டது. இது யுபிஐ லைட் பேலன்ஸ் (UPI Lite Balance) ஆனது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு கீழே சென்றால், தானாகவே அதை டாப்-அப் செய்ய அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். இதேபோல யுபிஐ 123பே (UPI 123Pay) சேவையிலும் கூட முக்கிய மாற்றம் ஒன்று அமல்படுத்தப்பட்டது.

யுபிஐ 123பே சேவைக்கான பரிவர்த்தனை வரம்பானது ரூ.5,000 இல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த மாற்றத்தின் கீழ், தற்போது இந்தியாவில் உள்ள 400 மில்லியன் ஃபீச்சர் போன் பயனர்கள், தங்களுடைய மொபைல் போன்களில் உள்ள யுபிஐ 123பே ஆப் வழியாக ரூ.10,000 வரை பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI Allow Small Finance Banks to Offer Pre Sanctioned Credit Lines through UPI For Who How Much
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X