மொத்த இந்தியாவும் ஆடிப்போகும் அறிவிப்பு.. ChatGPT வழியாக மளிகை சாமான் ஆர்டர்.. அப்படியே UPI பேமண்ட்!
ரேஸர்பே (Razorpay) நிறுவனமானது விரைவில் பயனர்கள் சாட்ஜிபிடி வழியாக மளிகைப் பொருட்கள் மற்றும் பிற தயாரிப்புகளை வாங்க அனுமதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்கீழ் ரேஸர்பே-வின் பேமண்ட் ஸ்டாக்கை (Payment stack) பயன்படுத்தி ஒரே கிளிக்கில் பிக்பாஸ்கட் (BigBasket) போன்ற தளங்களில் பயனர்கள் ஆர்டர் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓப்பன்ஏஐ நிறுவனம் அதன் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடியில் ஒரு புதிய செக்அவுட் அம்சத்தை சேர்த்த சில வாரங்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த செக்கவுட் அம்சமானது வாடிக்கையாளர்கள் சாட் விண்டோவை விட்டு வெளியேறாமல் தயாரிப்புகளை வாங்க அனுமதிக்கிறது.

இதற்காக ரேஸர்பே நிறுவனம் ஆனது ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்துடன் மட்டுமின்றி என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்துடன் (National Payments Corporation of India) கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக ரேஸர்பே ஆனது ஓப்பன்ஏஐ-யின் சாட்ஜிபிடி மற்றும் என்பிசிஐ உதவியுடன் இந்தியாவில் ஏஐ-இஎனேபிள்டு கொள்முதல்களை அறிமுகப்படுத்தும்.
இந்த புதிய செயல்பாடு தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது. முகவர் கட்டணங்கள் ஆனது பயனர்கள் பொருட்களை வாங்கும்போதோ அல்லது ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போதோ பரிவர்த்தனைகளை முடிக்க அனுமதிக்கும் என்று ரேஸர்பே கூறுகிறது. அதே ப்ரவுஸர் டேப்-ஐ விட்டு வெளியேறாமல், ஏஐ சாட்பாட்களின் உதவியுடன் அவர்கள் அவ்வாறு செய்யலாம்.
சாட்பாட்களில் முகவர் கட்டணங்கள் ஆனது ரேஸர்பேயின் வங்கி கூட்டாளர்களான ஆக்சிஸ் வங்கி மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியால் இயக்கப்படும். மேலும், தடையற்ற பரிவர்த்தனைகளுக்கான யுபிஐ சர்க்கிள் (UPI Circle) மற்றும் யுபிஐ ரிசர்வ் பே (UPI Reserve Pay) போன்ற ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) அம்சங்களின் மேல் இந்த முயற்சி கட்டமைக்கப்படும் என்றும் ரேஸர்பே நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, சாட்ஜிபிடி மூலம் வாங்குபவர்களை ஷாப்பிங் செய்ய அனுமதிக்கும் முதல் வணிகர்களில் ஒன்றாக பிக் பாஸ்கட் நிறுவனத்தையும் ரேஸர்பே நிறுவனம் இணைத்துள்ளது. பிக் பாஸ்கட்டில் இருந்து ஒரு குறிப்பிட்ட உணவின் பொருட்களை ஆர்டர் செய்ய பயனர்கள் ஏஐ சாட்பாட்டை கேட்க முடியும், மேலும் சாட்ஜிபிடி ஆனது விரைவாக வர்த்தக நிறுவனத்தின் பட்டியலை சரிபார்த்த பிறகு உங்களுக்கு பல விருப்பங்களைக் காண்பிக்கும்.
மக்கள் தங்கள் ஆர்டரை உறுதிசெய்த பிறகு பணம் செலுத்தலாம். பின்னர் அவர்கள் தங்கள் ஆர்டரை நிகழ்நேரத்தில் கண்காணிக்கலாம். முன்னரே குறிப்பிட்டபடி, சாட்ஜிபிடி-யின் தயாரிப்பாளர் ஆன ஓப்பன்ஏஐ ஆனது மிகவும் சமீபத்தில் தான் இன்ஸ்டன்ட் செக்கவுட் (Instant Checkout) மூலம் அதன் சாட்பாட்டிற்கு ஏஐ முகவர் ஷாப்பிங் செயல்பாட்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்து இருந்தது
தற்போது, இது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது மற்றும் சாட்ஜிபிடி பிளஸ் (ChatGPT Plus), சாட்ஜிபிடி ப்ரோ (ChatGPT Pro) மற்றும் இலவச சாட்ஜிபிடி பயனர்கள் ஆகிய அனைவருமே இந்த அம்சத்தை அணுகலாம். இப்போதைக்கு, இந்நிறுவனம் இட்சி (Etsy) வணிகர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் க்ளோஸியர் (Glossier), ஸ்கிம்ஸ் (Skims) மற்றும் ஸ்பான்க்ஸ் (Spanx) போன்ற ஷாப்பிபை (Shopify) விற்பனையாளர்களையும் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








