ரே டாம்லின்சன் ஈமெயிலை கண்டுபிடித்த 'கதை' : மிகப்பெரிய பொய்.!

ரே டாம்லின்சன் 1971ஆம் ஆண்டும் ஆர்பாநெட் திட்டத்தின் ஒரு பகுதியாக ஈமெயிலை கண்டுபிடித்தவர் என உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.

|

ரே தாம்சனின் இறப்பு, ஈமெயிலை கண்டுபிடித்தவர் என்ற புகழ்பெற்று தந்தாலும், வரலாற்றில் சிவ அய்யாத்துரைக்கான இடத்திற்கு சர்ச்சையை மீண்டும் கிளறிவிட்டுள்ளது. எப்படி ஈமெயிலை கண்டறிந்தார் என விளக்குகிறார் சிவா.

ரே டாம்லின்சன் 1971ஆம் ஆண்டும் ஆர்பாநெட் திட்டத்தின் ஒரு பகுதியாக ஈமெயிலை கண்டுபிடித்தவர் என உலகம் முழுவதும் அறியப்படுகிறார். அதேநேரம், 1978ல் 14வயது சிறுவன் சிவ அய்யாத்துரை நியூஜெர்சியில் உள்ள மருத்துவ மற்றும் பல்மருத்துவ பல்கலைகழகத்தில் மின்னஞ்சல் அமைப்பிற்கான தனது பணியை துவங்குகிறார். இவரது பணி அலுவலகத்திற்கு உள்ளே காகிதங்கள் மூலம் அனுப்பப்படும் தந்திகளை மின்னணு முறையில் மாற்றுவது ஆகும். இந்த 'ஈமெயில்' என்னும் மென்பொருளுக்கு 1981 ல் காப்புரிமை பெற்றார்.

ரே டாம்லின்சன் ஈமெயிலை கண்டுபிடித்த 'கதை' : மிகப்பெரிய பொய்.!

சிவ அய்யாத்துரையின் கருத்து என்னவென்றால், ரே டாம்லின்சன் எழுத்து வடிவிலான குறுஞ்செய்திகளை(டெக்ஸ்ட் மெசேஜ்) அனுப்பும் அடிப்படை அமைப்பை தான் உருவாக்கினார். ஆனால் நான், தற்போது பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் வடிவத்தை கட்டமைத்தேன். எனவே இதற்கு தான் ஈமெயிலை கண்டறிந்தவர் என்ற பெயர் வழங்கவேண்டும் என்கிறார்.

பொய்யை பரப்பிய ரேதியான்

பொய்யை பரப்பிய ரேதியான்

"தங்களின் அன்பிற்குரியவரை இழந்து வாடும் ரே டாம்லின்சன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் ரே டாம்லின்சன் ஈமெயிலை கண்டுபிடிக்கவில்லை. அவரின் 'கதை' நவீன தொழில்நுட்ப உலகின் மிகப்பெரிய பிரச்சார பொய், இதை பிரச்சாரம் செய்தவர் பி.ஆர் மெசின் டிபென்ஸ் கான்ட்ரேக்டர் ரேதியான். குறைந்தபட்ச ஆய்வின் மூலமே இதை கண்டறிந்துவிடலாம். அவரின் சமகாலத்தினர் இதை தெளிவுபடுத்தி, தவறான உரிமை கோரல் என தெரிவித்துள்ளனர்.

வாஷிங்க்டன் போஸ்ட்

வாஷிங்க்டன் போஸ்ட்

ஒரு வழியாக 1978ல் நான் ஈமெயிலை கண்டறிந்த உண்மைகள் பிப்ரவரி16,2012ல் வெளிவந்தது. அதை ஸ்மித்சோனியான்,ரேதியான் மற்றும் மற்ற துறை வல்லுநர்கள் ஒப்புக்கொண்ட பிறகு ,இனவெறி கட்டவிழத்துவிடப்பட்டது. ஆனாலும் ரே டாம்லின்சனின் பொய்கள் வெளிப்படுத்தப்பட்டன. மிகவும் வலுவான அவர்கள், வாஷிங்க்டன் போஸ்ட், ஹப்பிங் டான் போஸ்ட் போன்ற எந்த நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிக்கையாளருக்கும் அழுத்தம் கொடுத்து,எலெக்ட்ரானிக் டெக்ஸ்ட் மெசேஜ் உடன் ஈமெயிலை தொடர்ப்புபடுத்தி மக்களை குழப்பும் வகையில் மாற்றங்களை செய்ய நோக்கமாக இருந்தனர்.

ரேதியான் பொய்கள்

ரேதியான் பொய்கள்

தற்போது என்ன நடக்கிறது என்றால், டாம்லின்சன் இறப்பை பயன்படுத்தி, இந்த பிரச்சாரம் தொடர்கிறது. ரேதியான் பொய்கள் நன்கு திட்டமிடப்பட்டு, பல மில்லியன் டாலர் பிராண்டை கட்டமைக்கும் முயற்ச்சியுடன்,ரேதியான் ஊழியர் தான் 'ஈமெயிலை கண்டறிந்தவர்' என்ற தவறான எண்ணத்தை விதைக்கின்றனர்.

அவுட்பாக்ஸ்

அவுட்பாக்ஸ்

தாம்லின்சன் மற்றும் ஆர்பாநெட்(இராணுவத்தால் வடிவமைக்கப்பட்ட இணையதளத்தின் முன்னோடி) வடிவமைப்பாளர்கள் கண்டறிந்தது எழுத்துவடிவிலான குறுஞ்செய்திகளின் அடிப்படை வடிவம். ஆனால் நான் உருவாக்கிய ஈமெயில், தற்போது அனைவரும் பயன்படுத்தும் வசதிகளுடன்(இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், போல்டர்கள், இணைப்புகள், மெமோ..) கூடிய இன்டர் ஆபிஸ் மெயில் சிஸ்டம். ஆர்பாநெட்டின் எந்தவொரு பகுதியையும் இந்த ஈமெயிலை உருவாக்க நான் பயன்படுத்தவில்லை.

ஆர்பாநெட்

ஆர்பாநெட்

ரேதியான் மற்றும் ஆர்பாநெட் நிறுவனத்தினர், தாங்கள் தான் ஈமெயிலை கண்டறிந்தவர்கள் என கடுமையாக முயன்று பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் வேண்டுமென்றே ஈமெயிலின் உண்மையான பிறப்பிடத்தை மறைக்கின்றனர். 1986ல் ஆர்பாநெட் வெளியிட்ட ப்ரவுச்சரில் ஈமெயில் , எலக்ட்ரானிக் மெயில் போன்ற வார்த்தைகளே இல்லை. ஆனால் 1978ல் கண்டுபிடித்த என் கண்டுபிடிப்பிற்கு, 1982 ஆகஸ்ட் 30ல் தான், ஈமெயிலை கண்டறிந்தவர் என்ற அதிகாரப்பூர்வ காப்பூரிமையை பெற்றேன்.

முக்கிய பத்திரிக்கைகள்

முக்கிய பத்திரிக்கைகள்

என்னுடைய ஆவணங்கள் ஸ்மித்சோனியான்-ஆல் ஒப்புக்கொண்ட உடனேயே,முக்கிய பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்களால் தீயவனாக சித்தரிக்கப்பட்டேன். இந்த செயல் டாம்லின்சன் ஊழியரால், ரேதியான் கூறி, அத்துறையில் உள்ளவர்களால் செய்யப்பட்டது.

போரில் இருந்து தான் சிறந்த கண்டுபிடிப்புகள்

போரில் இருந்து தான் சிறந்த கண்டுபிடிப்புகள்

தற்போது , தாம்லின்சன் இறப்பின் மூலம் ரேதியான் இறப்பை தவறாக பயன்படுத்தி தொடர்ந்து, இந்த கண்டுபிடிப்பை அவர் தான் கண்டறிந்தார் என்று ஒரு பிராண்டை உருவாக்கிவருகிறார். இதனால் அவரின் போர் இயந்திரம் சைபர் செக்யூரிட்டி சந்தையில் இருப்பதுடன், இனவெறி போன்றவற்றுடன் வெள்ளைக்காரர்கள் மட்டுமே இது போன்ற சிறப்பான கண்டுபிடிப்புகளை உருவாக்கமுடியும், மேலும் இந்த கண்டுபிடிப்புகள் போரில் இருந்து தான் கண்டுபிடிக்கப்படுகின்றன என்ற பெரும் பொய்யை கூறி வருகிறார்.ஆனால் ஈமெயிலை கண்டுபிடித்தவன் இந்த கருப்பு நிற, இந்தியாவில் இருந்து குடியேறிய நான் தான் என உலகம் தெரிந்து கொள்ள இது தான் சரியான நேரம்.

எதுஎப்படியிருந்தாலும், ரேதியானின் பல்வேறு விதமான நடத்தைகளுக்கு மத்தியிலும், அந்த உண்மை எப்போதும் மாறாமல் இருக்கும். ' நியூயார்க்-நியூஜெர்சி-UMDNJல் 1978ம் ஆண்டு ஈமெயில் கண்டுபிடிக்கப்பட்டது'.

Best Mobiles in India

English summary
Ray Tomlinson's 'story' about inventing email is the biggest propaganda lie of modern tech history : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X