மைக்ரோஃபோன், லொகேஷன் ட்ராக்கருடன் கலக்கும் எலி: விஞ்ஞானியின் புதிய சாதனை.!

|

இப்போதுள்ள புதிய புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக சில தொழில்நுட்பங்கள் மக்களின் பாதுகாப்புக்கு மிகவும் அதிகம் பயன்படுகிறது என்றே கூறலாம். இந்நிலையில் எலிகளை மீட்டு படையினராக உருமாற்றி அதற்கு பயிற்சி வழங்கி வருகிறார் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் டோனா கீன். மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 எலிகளுக்கு பயிற்சி

எலிகளுக்கு பயிற்சி

அதாவது நிலச்சரிவு, இயற்கை இடர்பாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக எலிகளுக்கு பயிற்சி கொடுத்துவருகிறார் கீன். இதுவரை 7 எலிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஆராய்ச்சியாளர் டோனா கீன்.

100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?

மைக்ரோபோன், லொகேஷன் டிராக்கர்

மைக்ரோபோன், லொகேஷன் டிராக்கர்

குறிப்பாக எலிகளுக்கு backpack கொடுக்கப்பட்டு அதில் மைக்ரோபோன், லொகேஷன் டிராக்கரும் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களைகண்டறிந்தால் பீப் ஒலிக்கு பதிலளிக்கும் வகையில் அந்த எலிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் டோனா கீன்.

அமேசான் அதிரடி: ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!அமேசான் அதிரடி: ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!

 170 எலிகளுக்கு பயிற்சி

170 எலிகளுக்கு பயிற்சி

இதற்கு வேண்டி Hero Rats என்ற பெயரில் NGO அமைப்பான APOPO உடன் இணைந்து மருத்துவர் கீன் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 170 எலிகளுக்கு தரமான பயிற்சி கொடுத்து, அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் துருக்கி நாட்டுக்கு அனுப்பி மீட்பு பணியை மேற்கொள்ளதிட்டமிட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர் கீன் தெரிவித்துள்ளார்.

Moto E32s: இன்று 'முதல்' விற்பனை.. மலிவு விலையில் இப்படி ஒரு பெஸ்ட் போனா? நம்பி வாங்கலாம் போலயே..Moto E32s: இன்று 'முதல்' விற்பனை.. மலிவு விலையில் இப்படி ஒரு பெஸ்ட் போனா? நம்பி வாங்கலாம் போலயே..

ஹீரோ ரேட்ஸ்

ஹீரோ ரேட்ஸ்

இதுவரை நாய்களை மட்டுமே மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதை பார்த்திருப்போம், ஆனால் எலிகளால் சிறுசிறு பொந்துகளிலும் செல்லமுடியும் என்பதைகருத்தில் கொண்டு ஹீரோ ரேட்ஸ் என்ற திட்டத்தில் இறங்கியுள்ளோம் என்று கூறினார் ஆராய்ச்சியாளர். குறிப்பாக எலிகளிடம் உள்ள backpack மூலம்பாதிக்கப்பட்டவர்களிடம்எங்களால் பேச முடியும் என்று தெரிவத்துள்ளார் கீன்.

மிட்ரேஞ்ச் விலை- வந்தது ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி: 64 எம்பி கேமரா, ஃபுல் எச்டி வீடியோ பதிவு, சூப்பர்வூக் சார்ஜ்!மிட்ரேஞ்ச் விலை- வந்தது ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி: 64 எம்பி கேமரா, ஃபுல் எச்டி வீடியோ பதிவு, சூப்பர்வூக் சார்ஜ்!

புதிய தொழில்நுட்பங்கள்

புதிய தொழில்நுட்பங்கள்

குறிப்பாக புதிய தொழில்நுட்பங்கள் இதுபோன்ற பல்வேறு புதிய முயற்சிகளுக்கு அருமையாக கைகொடுக்கும் என்றே கூறலாம். அதேபோல் கூகுள் மேப்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் அதிக வைரலாகி உள்ளது. அதாவது கூகுள் மேப்பில் ரகசிய குகை ஒன்று புலப்படும் வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் அதிக வைரலாகி வருகிறது.

ரூ.99 முதல் ரூ.200 விலைக்குள் பட்ஜெட் பிரண்ட்லி திட்டங்கள்.. பெஸ்ட் மலிவு விலை Airtel திட்டங்கள் இதோ..ரூ.99 முதல் ரூ.200 விலைக்குள் பட்ஜெட் பிரண்ட்லி திட்டங்கள்.. பெஸ்ட் மலிவு விலை Airtel திட்டங்கள் இதோ..

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் 36000ஆண்டுகள் பழமையானகுகைகள் இருக்கும் இடம் தெளிவாக ஜூம் செய்யப்பட்டு காண்பிக்கப்படுகிறது. குறிப்பாக தெற்கு பிரான்சில் அமைந்துள்ள இந்த சாவெட் குகை ஆனது தனித்துவமானஓவியங்களுக்கு மிகவும் பெயர்போனது. மேலும் இந்த குகையில் பழங்கால மனிதர்கள் வரைந்த ஏராளமான ஓவீயங்கள் காணக்கிடைக்கின்றன.

UNESCO அமைப்பு

குகையின் பாறைகளில் இருக்கும் இந்த ஓவியங்கள் உலகின் முதல் கலை அருங்காட்சியமாக இருக்கலாம் என்று கூறுகிறது UNESCO அமைப்பு. குறிப்பாக பிரனான்ஸ் நாட்டின் ஆர்டெச் நதிப் படுகையில் அமைந்துள்ள இந்த குகைகள், 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. அதாவது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த குகை, ஓவியங்கள் கலை வரலாற்றில் முக்கிய அங்கமாக இருக்கிறது. அதேபோல் இந்த இடத்தை UNESCO அமைப்பு உலகின் பாரம்பரிய
இடங்களில் ஒன்றாக கடந்த 2014-ம் ஆண்டு அங்கீகரித்தது. மேலும் இந்த குகைகளின் சுவற்றில் 13 வகையான உயிரினங்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.சமீபத்தில் இந்த வீடியோவை கூகுள் மேப்ஸ் நிறுவனம் வெளியிட இணையத்தில் அதிக வைரலாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Rats trained to wear a backpack with a microphone: do you know why: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X