புதிய உத்தரவு-ரேசன் பொருள் வாங்குவதில் இருந்த சிக்கல் நீக்கம்:இனி கைரேகை இல்லாவிட்டாலும், இது இருந்தால் போதும்

|

ரேசன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு என குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் கருவி மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் கார்ட்களில் பெயர் உள்ள ஒருவர் கடைக்கு சென்று கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வாங்கப்படும். ஆனால் சில சமயங்களில் ஏற்படும் பயோமெட்ரிக் இயந்திர கோளாறு காரணமாக பொருட்கள் விநியோம் செய்வதில் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதை சரிசெய்யும் பொருட்டு மாற்று ஏற்பாடு அரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரேசன் கடைகளில் கை ரேகை பதிவு இயந்திரங்கள்

ரேசன் கடைகளில் கை ரேகை பதிவு இயந்திரங்கள்

ரேசன் கடைகளில் கை ரேகை பதிவு இயந்திரங்கள் வேலை செய்யாதபட்சத்தில் க்யூஆர் ஸ்கேன் செய்து பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் ராஜாராஜன் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் இணைய இணைப்பு, தொலைத்தொடர்பு இணைப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில நேரங்களில் கை ரேகை சரிபார்க்கும் இயந்திரம் செயல்படுத்த இயலாத நிலை இருக்கிறது. அந்த சமயத்தில் பொருட்கள் விநியோகம் செய்வதில் சிக்கல் இருக்கிறது.

வெவ்வேறு வழிமுறை பரிவர்த்தனைகளுக்கான ஏற்பாடுகள்

வெவ்வேறு வழிமுறை பரிவர்த்தனைகளுக்கான ஏற்பாடுகள்

இந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வெவ்வேறு வழிமுறை பரிவர்த்தனைகளுக்கான ஏற்பாடுகள் விற்பனை முனைய இயந்திரங்களில் செய்து தரப்பட்டுள்ளன. அதன்மூலம் பொருட்கள் விநியோகம் செய்யலாம். இனி ரேசன் கார்ட் பயனர்கள் எந்த சூழலிலும் பணம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இனி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் சேவை மையத்தை தொடர்பு கொண்டு டிக்கெட் எண் பெற்று சரி செய்ய வேண்டும். கோளாறு சரிசெய்யும் வரை பொருட்கள் விநியோம் செய்வதற்கு சில வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

க்யூஆர் கோர்ட் ஸ்கேன் செய்து பொருட்கள் விநியோகம்

க்யூஆர் கோர்ட் ஸ்கேன் செய்து பொருட்கள் விநியோகம்

அனைத்து ஸ்மார்ட் கார்ட்களிலும் க்யூஆர் கோர்ட் ஸ்கேன் செய்து ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்து பொருட்கள் விநியோகத்தை வழங்கலாம். இயந்திரத்தில் உள்ள கோளாறு சரி செய்யப்பட்டதும் முறையாக விரல் ரேகை பதிவை ஸ்கேன் செய்து பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும். ரேசன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் பயனர்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. .

புதிய ரேஷன் அட்டையை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

புதிய ரேஷன் அட்டையை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கும் நபரின் பெயர் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இடம் பெற்றிருக்கக் கூடாது.

ஒருவேளை உங்களின் பெயர்கள் மற்ற ரேஷன் அட்டையில் உறுப்பினராக இருந்தால், முதலில் அதிலிருந்து உங்கள் பெயரை நீக்கம் செய்த பின்னரே நீங்கள் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த இணையதளத்தை கிளிக் செய்யுங்கள்

இந்த இணையதளத்தை கிளிக் செய்யுங்கள்

https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தை ஓபன் செய்து லாகின் செய்துகொள்ளுங்கள்.

பின்பு, அதில் காணப்படும் மின்னணு அட்டை சேவை என்ற விருப்பத்தின் கீழ் உள்ள புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்யுங்கள்.

புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்து, Name of family head என்ற இடத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உங்களின் பெயரை உள்ளிடுங்கள்.

பதிவேற்றம் செய்ய வேண்டிய புகைப்படம் இந்த அளவில் தான் இருக்க வேண்டும்

பின்னர் முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், பின்கோடு எண், மொபைல் எண், இமெயில் ஐடி போன்றவற்றை சரியாக உள்ளிடுங்கள்.

குடும்பத் தலைவருக்கான புகைப்படத்தை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த புகைப்படம் 5 எம்பி அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

அட்டை தேர்வு என்ற இடத்தில் என்ன வகையான அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்யவும்.

ஆதார் விபரங்களை அப்லோட் செய்வது எப்படி?

ஆதார் விபரங்களை அப்லோட் செய்வது எப்படி?

இறுதியாக ஸ்கேன் செய்து ஆதார் விபரங்களை அப்லோட் செய்து சேவ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

அதற்குப் பின்னர் உங்களின் கேஸ் சிலிண்டர் இணைப்பு பற்றிய விவரங்களைப் பதிவிட வேண்டும். உங்களது கேஸ் இணைப்பு பதிவு செய்யப்பட்ட நபரின் பெயரை உள்ளிட்ட வேண்டும்.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் யாரும் உங்கள் வீட்டில் இருந்தால், அவர்களுக்கான பிறப்பு சான்றிதழை நீங்கள்சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர், ஒரு முறை நீங்கள் உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை செக் செய்து சேவ் கிளிக் செய்யுங்கள்.

பின்னர் உங்களது மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது என்ற நோட்டிபிகேஷன் காண்பிக்கப்படும்.
திரையில் காண்பிக்கப்படும் குறிப்பு எண்ணை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது.

Best Mobiles in India

English summary
Ration Shops Finger print New Rules: Items can be distribute with QR code scan also

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X