Home
News

15 நாட்கள் தான்: குடும்ப அட்டை விண்ணப்பிக்கும் மக்களுக்கு நற்செய்தி.! முழு விவரம்.!

ஆதார், பான் அட்டையை போலவே மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றுதான் ரேஷன்‌ கார்டு (குடும்ப அட்டை). இதன் மூலம் மக்கள் மலிவு விலையில் பொருட்களையும் வாங்க முடியும். இந்நிலையில் புதிய குடும்ப அட்டை வேண்டி யார் விண்ணப்பித்தாலும், தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களிலே குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேரவையில் தெரிவித்துள்ளார்.

 சமீபத்தில் சட்டப்பேரவையில் கேள்வி

அதாவது சமீபத்தில் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குடும்ப அட்டைகள்பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் எத்தனை, வழங்கிய கார்டுகள் எத்தனை என்று கேள்வி எழுப்பினார்.

 பதிலளித்து பேசிய அமைச்சர்

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதிவியேற்ற 2021 மே மாதம் 7-ம் தேதி முதல் கடந்த மார்ச் 14-ம் தேதி வரை பத்து மாதங்களில் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கப்பட்ட 15,74,543 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடைய 10,92,064விண்ணப்பதாரர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கும்

மேலும் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் சக்கரபாணி பேரவையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியாய விலை கடைக்கு சென்று

அதேபோல் நியாய விலை கடைக்கு சென்று பொருட்களை வாங்க முடியாத மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென பிராக்ஸி முறைமூலம் பொருட்கள் வழங்கப்படும். அதாவது மாவட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் ஆகியோரிடமிருந்து இதற்கான ஆங்கீகார சான்று வழங்கப்படுகிறது. இதை பூர்த்தி செய்து விண்ணப்பிப்பவர்களின் குடும்பத்திலுள்ள 5 வயதுக்கு மேற்பட்டோர் யார் வேண்டுமானாலும் நியாய விலைகடையில் இருந்து பொருட்களை வாங்க முடியும்.

ஒரு தனி நபர் தனியாக சமைத்து தனியாக

மேலும் ஒரு தனி நபர் தனியாக சமைத்து தனியாக வாழ்ந்து வருவாரெனில் அவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி அந்த நபருக்கு 5 கிலோ அரிசி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அனைவருக்கும் உணவுத் திட்டத்தை அரசு அமல்படுத்தி வருகிறது. எனவே தனியாக வசிக்கும் நபருக்கும், 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பாமாயில்,ஒரு கிலோ துவரம் பரப்பு, அரை கிரோ சர்க்கரை ஆகிய பொருள்கள்வழங்கப்படுகின்றன.

முதியோர் உதவி தொகை

அதேபோல் முதியோர் உதவி தொகை வாங்குபவர்களுக்கும் 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும், அவர்களின் குடும்ப அட்டை ரத்தாகாதுஎன்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Ration card will be issued within 15 days of application: minister sakkarapani: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X