ரேஷன் கார்டு பயனர்கள் 'இதை' உடனே அப்டேட் செய்ய வேண்டும்..இல்லையென்றால் 'இந்த' திட்டத்தில் சேர முடியாது..

|

ரேஷன் கார்டு பயனர்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டு வைத்துள்ள பொது மக்கள் அனைவரும் இந்த தகவல் முழுமையாகப் படித்துப் பின்வரும் செயல்முறையைப் பின்பற்றிப் பயன்பெறும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும், அவர்களின் ரேஷன் கார்டு தகவலை உடனே அப்டேட் செய்யும் படி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெற வேண்டில், உடனடியாக அவர்களின் ரேஷன் கார்டு தகவலைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அப்டேட் செய்யும்படி அறிவுரைக்கப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம்

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம்

'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ் உங்களைச் சேர்த்துக்கொள்ள, பொதுமக்கள் முதலில் அவர்களின் ரேஷன் கார்டு தகவலை அவர்களின் உரிய ஆதார் கார்டு விவரத்துடன் இணைக்க வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்துடன் உங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்குக் கடைசி நாள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30 2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலக்கெடு நிறைவடையும் முன் உங்கள் ரேஷன் கார்டு தகவலை இணைத்துவிடுங்கள்.

ரேஷன் கார்டுடன் ஒவ்வொரு தனிநபரின் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டுமா?

ரேஷன் கார்டுடன் ஒவ்வொரு தனிநபரின் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டுமா?

மத்திய அரசு தொடங்கியுள்ள இந்த 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள பல கோடிக் கணக்கான மக்கள் பயன் பெற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ரேஷன் கார்டு அரசால் வழங்கப்படும் ஒரு முக்கிய ஆவணமாகும். பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் மக்களிடம் சரியாகப் போய் சேர வேண்டும் என்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தெளிவாக இருக்கின்றன.

மனித இரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் குப்பைகளா? ஆராய்ச்சியாளர்கள் கவலை.. ஏன் தெரியுமா?மனித இரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் குப்பைகளா? ஆராய்ச்சியாளர்கள் கவலை.. ஏன் தெரியுமா?

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் நன்மை என்ன தெரியுமா?

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் நன்மை என்ன தெரியுமா?

இதற்கு ரேஷன் கார்டுடன் ஒவ்வொரு தனிநபரின் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது. இந்த திட்டத்தின் மூலம், பொதுமக்கள் நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கடையிலும் ரேஷன் பொருட்களைப் பெற முடியும்.

நீடிக்கப்பட்ட இறுதி காலக்கெடு இது தான்

நீடிக்கப்பட்ட இறுதி காலக்கெடு இது தான்

முன்னதாக ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்தது. தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் பொது விநியோகத் துறை அறிவித்துள்ளது. நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை உங்களுடைய ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்றால், வரும் ஜூன் 30, 2022க்குள் அதை செய்து முடிக்க வேண்டியது கட்டாயம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் PAN உடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி சரி பார்ப்பது? இணைக்கவில்லை என்றால் என்னவாகும்?உங்கள் PAN உடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி சரி பார்ப்பது? இணைக்கவில்லை என்றால் என்னவாகும்?

ரேஷன் அட்டையை ஆதார் உடன் இணைக்க என்ன ஆவணங்கள் தேவை?

ரேஷன் அட்டையை ஆதார் உடன் இணைக்க என்ன ஆவணங்கள் தேவை?

இந்த அப்டேட்டை சரியாக செய்து முடிக்க, தேவையான ஆவணங்கள் ஒரிஜினல் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ் போன்ற முக்கிய ஆவணங்களை நீங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆன்லைனில் இந்த ஆவணங்களைக் கொண்டு ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கச் சுலபமான செயல்முறையையும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, எப்படி உங்களின் ரேஷன் அட்டையை ஆதார் உடன் இணைப்பது என்று இப்போது தெரிந்துகொள்ளலாம்.

ரேஷன் அட்டையை எப்படி ஆதார் தகவலுடன் ஆன்லைனில் அப்டேட் செய்வது?

ரேஷன் அட்டையை எப்படி ஆதார் தகவலுடன் ஆன்லைனில் அப்டேட் செய்வது?

  • இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் 'start now' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்பு அதில், முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்கள் கேட்கப்படும்.
  • அதைச் சரியாக நிரப்ப வேண்டும். பின்பு 'ration card benefit' என்ற ஆப்ஷனை கிளிக்
  • இனிமேல் டிரைவிங் லைசென்ஸை கையோடு எடுத்து செல்ல அவசியமில்லையா? இதைச் செய்தால் போதும் மக்களே..இனிமேல் டிரைவிங் லைசென்ஸை கையோடு எடுத்து செல்ல அவசியமில்லையா? இதைச் செய்தால் போதும் மக்களே..

    ஆதார் அட்டை எண் மற்றும் OTP எண்களைச் சரியாக நிரப்புக

    ஆதார் அட்டை எண் மற்றும் OTP எண்களைச் சரியாக நிரப்புக

    • அதில் உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
    • இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
    • சரியான OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள். இப்போது உங்கள் ரேஷன் அட்டை விவரத்துடன், ஆதார் விபரம் இணைக்கப்படும்.
    • ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு

      ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு

      புலம்பெயர்ந்த பயனாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 'ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு இடையேயான ரேஷன் அட்டை போர்டபிளிடி சேவையையும் அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டை வைத்திருந்தால் அட்டைக்காரர்கள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

      IPL ரசிகர்களுக்காக Jio சத்தமில்லாமல் அறிமுகம் செய்த புதிய ரூ.555 திட்டம்.. 55 நாளுக்கு கவலையில்லை..IPL ரசிகர்களுக்காக Jio சத்தமில்லாமல் அறிமுகம் செய்த புதிய ரூ.555 திட்டம்.. 55 நாளுக்கு கவலையில்லை..

      உடனடியாக இதை செய்யுங்கள்

      உடனடியாக இதை செய்யுங்கள்

      குறிப்பாக ரேஷன் அட்டையுடன், ஆதார் இணைக்கப்படாவிட்டால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். சிலர் இந்த அறிவிப்பைத் தவறுதலாகப் புரிந்துகொண்டுள்ளனர் என்பதே உண்மை. ரேஷன் அட்டையுடன், ஆதார் இணைக்கப்படாவிட்டால் கூட பயனர்கள் எப்பொழுதும் போல தொடர்ந்து அவர்களின் சொந்த ஊர் ரேஷன் கடைகளில் இருந்து உணவு தானியங்களை வாங்கிக்கொள்ளலாம் என்று உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

      இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது உதவும்

      இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது உதவும்

      ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைத்தால் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து இடங்களின் ரேஷன் அங்காடியிலிருந்து உங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்கி பயன்பெற முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எதோ ஒரு காரணத்திற்காக நீங்கள் வெளி மாநிலத்தில் சென்று வேலை செய்ய நிர்ப்பந்தம் உருவானால், நீங்கள் அங்கு சென்று தனியாக ரேஷன் பொருட்களுக்காக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களின் பழைய ரேஷன் அட்டையை காண்பித்து நீங்கள் எங்கு சென்றாலும் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்பெறலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Ration Card Users Alert Link Your Aadhaar Details Before June 30 2022 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X