Home
News

அம்பானிக்கு ஆப்பு வைக்கும் Ratan Tata.. 15000 கோடியில் டெலிகாம் நிறுவனங்களுக்கு செக் மேட்.. என்ன விஷயம்?

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) அல்லது வோடபோன் ஐடியா (Vodafone Idea), நிறுவனங்கள் அனைத்தும் அதன் ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்டு (Postpaid) திட்டங்களின் விலையை அதிகரித்தன. இதனால் மக்கள் அதிருப்திக்கு ஆளாகினர். கடுப்பான மக்கள் இப்போது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் பக்கம் மாற துவங்கியுள்ளனர். டெலிகாம் துறையில் முன்னணியில் உள்ள முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ஜியோ நிறுவனத்தின் சாம்ராஜ்யத்தை உலுக்கும் வகையில் ரத்தன் டாடாவின் (Ratan Tata) தற்போதைய நடவடிக்கை அமைந்துள்ளது.

இந்தியாவில் பலமான நெட்வொர்க் மற்றும் அதிவேக 5ஜி சேவையை வழங்கும் ஒரே நிறுவனம் நாங்கள் மட்டும் தான் என்று ஆணவமாக ஆட்டம் போட்ட ஜியோ நிறுவனத்தை மக்கள் இப்போது வெறுக்க துவங்கியுள்ளனர். காரணம், ஜியோ நிறுவனம் கண் முடித்தனமாக விலையை அதிகரித்துள்ளது. அடிப்படை திட்டத்தில் இருந்து, வருடாந்திர திட்டம் வரை எல்லா திட்டங்களின் விலையையும் ஜியோ நிறுவனம் தற்போது அதிகரித்துள்ளது.

அம்பானிக்கு ஆப்பு வைக்கும் Ratan Tata.. 15000 கோடியில் செக் மேட்..

அம்பானிக்கு 15000 கோடியில் ஆப்பு வைக்கும் Ratan Tata:

மக்கள் இப்போது 5ஜி வேகத்திற்கு அடிமையாகிவிட்டார்கள், இதனால் பலரும் மற்ற நெட்வொர்க்கிற்கு மாற தயங்கி வருகிறார்கள். இருப்பினும், பல பயனர்கள் கடுமையான விலை அதிகரிப்பை கண்டிக்கும் விதமாக ஜியோ நிறுவனத்தின் நெட்வொர்க்கை புறக்கணித்துவிட்டு இப்போது பிஎஸ்என்எல் பக்கம் மாற துவங்கியுள்ளனர். குறிப்பாக, ஆந்திர பிரதேசத்தில் 20 நாட்களுக்குள் மட்டும் சுமார் 1,00,000 புது வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து புது சிம் கார்டு வாங்கியுள்ளனர்.

இந்தியாவில் மட்டும் மொத்தமாக இந்த ஒரு மாத காலத்திற்குள் சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமான புது பயனர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக சேர்த்துள்ளது. இதற்கான காரணம், ஒரு புறம் தனியார் நிறுவனங்களின் விலை அதிகரிப்பு தான் என்று கூறினாலும், மறுபுறம் பிஎஸ்என்எல் நிறுவனம் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளை மக்கள் இப்போது நம்ப துவங்கியுள்ளனர்.

மக்களின் நம்பிக்கை மீண்டும் இப்போது பிஎஸ்என்எல் பக்கம் திரும்ப, ரதன் டாடா ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. சமீபத்தில் வெளியான அதிகாரப்பூர்வ தகவலின் படி, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி மற்றும் 5ஜி சேவையை நாடு முழுவதும் மிக வேகமாக விரிவுபடுத்த, ரதன் டாட்டாவுக்கு சொந்தமான டாட்டா குழுமம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி மற்றும் 5ஜி சேவைக்கு டாடா நிறுவனம் உதவி:

இந்த புதிய கூட்டு பங்காண்மை ரூ.15,000 கோடி ஒப்புதலுடன் கையெழுத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 6 மாத காலத்திற்குள் முக்கிய நகரங்கள் முதல் முக்கிய கிராமப்புறங்கள் வரை எல்லா இடங்களிலும் அதன் 4ஜி சேவையை மக்களுக்கு வழங்க துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட 3 மாதங்களுக்கு பிறகு 5ஜி சேவை கிடைக்கும்.

பிஎஸ்என்எல் புதிதாக நிறுவும் பல 4ஜி டவர்களில் இருந்து 5ஜி சேவையையும் மக்கள் பெறுவார்கள் என்று பிஎஸ்என்எல் கூறியுள்ளது. இந்தியாவில் அதிவேக 5ஜி நெட்வொர்க்கை எங்களால் மட்டுமே கொடுக்க முடியும் என்று ஓவராக ஆடிக்கொண்டிருந்த அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்கு ஆப்பு வைக்கும் விதமாக ரதன் டாடாவின் பிஎஸ்என்எல் கூட்டு அமைந்துள்ளது. பிஎஸ்என்எல் 4ஜி மற்றும் 5ஜி சேவையை துவங்கிவிட்டால், ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்களின் நிலைமை மோசமாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ratan Tata Signed 15000 Crore Partnership With BSNL To Bring 4G and 5G In India Ambani Jio In Drawback
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X