சியோமி நிறுவனத்தில் பங்குகளை வாங்கினார் ரத்தன் டாடா

Written By:

உலகின் மிகவும் பிரபலமான தொழில் அதிபரான ரத்தன் டாடா வளர்ந்து வரும் சீன நிறுவனமான சியோமியில் வெளியிடப்படாத தொகையை முதலீடு செய்துள்ளார்.

'திருவாளர் டாடா அவர்களை எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதால் பெருமை கொள்கிறோம், மேலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு டாடா அவர்கள் கூறும் அறிவுரைகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம்' என சியோமி நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மானு ஜெயின் தெரிவித்துள்ளார்.

சியோமி நிறுவனத்தில் பங்குகளை வாங்கினார் ரத்தன் டாடா

டாடா அவர்கள் இந்திய நிறுவனங்களான ஸ்னாப்டீல், அர்பன் லேடர், ப்ளூஸ்டோன், கார் தேகோ மற்றும் பேடிஎம் போன்றவைகளிலும் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா போன்றே இந்தியாவும் எங்களுக்கு முக்கியமான சந்தை ஆகும், அடுத்த மூன்று முதல் ஐந்தாண்டுகளில் இந்தியாவில் சியோமி நிறுவனத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவதே எங்களது இலக்கு என்று சியோமி நிறுவனத்தின் தலைவர் மற்றும் இணை நிறுவனர் பின் லின் தெரிவித்தார்.

 

English summary
Ratan Tata acquires a stake in Xiaomi
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot