அரிய வகை நெருப்பு வளைய சூரிய கிரகணம்! நாளைக்கு எப்போ பார்க்கலாம்?

|

இந்த ஆண்டின் மிக முக்கியமான சூரிய கிரகணம், நாளை ஜூன் 21ம் தேதி நிகழ்கிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் இந்த அரிய வகை நெருப்பு வளையச் சூரிய கிரகணம் நாளை காலை முதல் துவங்கி நண்பகல் வரை நிகழ்கிறது, வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூரியகிரகணத்தின் சிறப்பு என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு மறைக்கிறது

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு மறைக்கிறது

பூமி தனது சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தனது சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றது. சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அவ்வப்போது சந்திக்கின்றன, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வைத் தான் நாம் சூரிய கிரகணம் என்று கூறுகிறோம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு மறைத்து அதன் நிழல் பூமியின் மேல் விழுகிறது.

எப்போது பார்க்கலாம்?

எப்போது பார்க்கலாம்?

கங்கண சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளையச் சூரிய கிரகணம் என்று அழைக்கப்படும் இந்த சூரிய கிரகணம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் காலை 09:15 முதல் நண்பகல் 02:30 மணி வரை தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த சூரிய கிரகணம் 34 சதவீதம் தெளிவாகத் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் 'அதிசயமான' மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இதுதான்! இது எங்கே இருக்கிறது தெரியுமா?பூமியின் 'அதிசயமான' மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இதுதான்! இது எங்கே இருக்கிறது தெரியுமா?

அரிய சூரிய கிரகணம்

அரிய சூரிய கிரகணம்

வட இந்திய மாநிலங்களான ஹரியானா, உத்தரகண்ட் மாநிலங்களில் இந்த சூரிய கிரகணத்தை மக்கள் முழுமையாகப் பார்வையிட முடியும், தென்னிந்திய மக்களுக்கு இந்த சூரிய கிரகணம் ஒரு பகுதியாக மட்டுமே தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய ஆப்ரிக்கா, சவூதி அரேபியா மற்றும் தெற்கு சீனா ஆகிய இடங்களிலும் இந்த அரிய சூரிய கிரகணத்தை மக்கள் பார்வையிட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

வெறும் கண்களால் மட்டும் பார்க்க வேண்டாம்

வெறும் கண்களால் மட்டும் பார்க்க வேண்டாம்

சூரிய கிரகணத்தைத் தெளிவாகக் காண எப்பொழுதும் சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கம் மக்களுக்காகத் திறக்கப்படும். ஆனால், இந்த ஆணு சென்னையில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடுவதால், பிறழ் கோளரங்கம் திறக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக மக்கள் தங்களின் வீட்டிலிருந்தே இந்த சூரிய கிரகணத்தைப் பார்வையிட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் கண்களால் மட்டும் பார்க்க வேண்டாம் என்பதை மறக்கவேண்டாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Rare Ring Of Fire Solar Eclipse Will Be Visible In India From Tomorrow Morning : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X