ஹே ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ.! உலகை வியப்பில் ஆழ்த்திய அரிய வகை 'பிங்க் டால்பின்.! காரணம் இதுதானா?

|

'கடல்' மனிதனால் இன்னும் முழுமையாக அடையாளம் காணப்படாத ஒரு மாபெரும் புதிர். பூமியில் உள்ள கடல்களில் இன்னும் மனிதனால் அடையாளம் காணப்படாத அல்லது கண்டுபிடிக்கப்படாத பல உயிரினங்கள் மற்றும் மர்மங்கள்மறைந்துள்ளன. இதேபோல், சமீபத்திய வளர்ச்சியில் பிங்க் டால்பின் இடம்பெறும் ஒரு டிரெண்டிங் வீடியோ கேமராவில் சிக்கியுள்ளது. இது வீடியோவை பார்த்த அனைவரையும் பிங்க் டால்பின்கள் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

மக்கள் இது வரை பார்த்திராத அரிய வகை டால்பின்

மக்கள் இது வரை பார்த்திராத அரிய வகை டால்பின்

மக்கள் இது வரை முன்பு பார்த்திராத தனித்துவமான டால்பினைக் காணும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மிக வேகமாக வைரல் ஆகி வருகிறது. வீடியோவை பார்த்த மக்கள் அனைவரும் இந்த பிங்க் டால்பினின் நிறம் எப்படி உருவானது என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். இன்னும் சில சமூக வலைத்தள பயனர்கள் அதற்கான உண்மை காரணத்தையும் பதிவில் கமெண்ட் செய்து விளக்கமளித்துள்ளனர். இன்னும் சிலர் வேடிக்கையான காரணத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இளஞ்சிவப்பு நிறத்தில் குதித்து விளையாடும் டால்பின்கள்

இளஞ்சிவப்பு நிறத்தில் குதித்து விளையாடும் டால்பின்கள்

சுசந்தா நந்தா என்ற ஐஎஃப்எஸ் (IFS) அதிகாரி தனது டிவிட்டர் கணக்கில் இந்த டால்பினின் ட்ரெண்டிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். மக்கள் இதுவரை கருப்பு அல்லது நீல நிற டால்பின்களை மட்டுமே பார்த்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இந்த வீடியோவில் உள்ள டால்பின் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. அதாவது இது முழுமையாக வேற எந்த நிறங்களும் இல்லாமல் பிங்க் நிறத்தில் இருக்கும் டால்பினின் வீடியோவை காட்டுகிறது. இது மற்ற டால்பின்களிலிருந்து வேறுபடுத்தி தனித்துவமானதாக இருக்கிறது.

பேரு சோனி., நியாபகம் இருக்கா?- அமோக அம்சத்துடன் சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் அறிமுகம்!பேரு சோனி., நியாபகம் இருக்கா?- அமோக அம்சத்துடன் சோனி எக்ஸ்பீரியா 10 III லைட் அறிமுகம்!

நட்பு குணத்துடன் மனிதர்களுடன் தொடர்பில் உள்ள கடல் உயிரினம் இதுதானா?

நட்பு குணத்துடன் மனிதர்களுடன் தொடர்பில் உள்ள கடல் உயிரினம் இதுதானா?

டால்பின்கள் கடல் உயிரினங்களில் நட்பான இயல்பு குணத்துடன் உயிர் வாழும் மனிதனுக்கு நெருக்கமான உயிராகப் பார்க்கப்படுகிறது. டால்பின்கள் விளையாட்டு குணம் கொண்ட ஒரு கடல் உயிராகும். மனிதர்களுடன் கடலில் தொடர்புகொள்வது, அவர்களுடன் விளையாடுவது போன்ற செயல்களைத் தொடர்ந்து டால்பின்கள் இயல்பாகவே செய்து வருகிறது. இந்த பிங்க் டால்பினும் கூட கடலில் ஒரு குட்டி டால்பினுடன் விளையாடுவதை வீடியோ பதிவு காண்பிக்கிறது.

பிங்க் டால்பின் நிறத்திற்கு என்ன காரணம்? வைரல் ஆகும் வீடியோ இதோ

இந்த வீடியோ வியட்நாமின் ஹாய் பாங் நகரத்தில் உள்ள டூ சோன் கடற்கரை பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவைப் சுமார் 74.1K பயனர்கள் பார்வையிட்டுள்ளனர். இதைப் பார்த்த பயனர்கள் இதற்கு முன்பு இப்படி ஒரு டால்பினை பார்த்ததில்லை என்று கூறியுள்ளனர். இது ஒரு மரபணு மாற்றமா அல்லது ஒருவித ஆல்கே எதிர்வினையால் உருவான இளஞ்சிவப்பு நிறமா? என்று பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உலகின் முதல் 'கடல் தேவதை' தாவரம்..யாரும் அறிந்திராத பிரமிக்க வைக்கும் உண்மை..இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உலகின் முதல் 'கடல் தேவதை' தாவரம்..யாரும் அறிந்திராத பிரமிக்க வைக்கும் உண்மை..

உண்மையில் இந்த டால்பினின் பிங்க் நிறத்திற்கு என்ன காரணம் தெரியுமா?

உண்மையில் இந்த டால்பினின் பிங்க் நிறத்திற்கு என்ன காரணம் தெரியுமா?

இந்த அரிய வகை பிங்க் நிற டால்பின்கள் அமேசான் நதியில் வாழும் இளஞ்சிவப்பு டால்பின் இனத்தைச் சேர்ந்தவை என்பதே உண்மை. இதன் இளஞ்சிவப்பு நிறம் கரடுமுரடான விளையாட்டுகள் மூலமாகவோ அல்லது டால்பின்கள் சண்டையிட்டு வெற்றி பெற்ற போது உருவான திசு வடு காரணமாக இருக்கலாம் என்று ஒரு பயனர் வீடியோவின் கமெண்டில் பதிவு செய்துள்ளார். ஆனால், உண்மை காரணமாக என்னவாக இருக்கும் என்று நாங்களும் கூகிள் செய்து பார்த்தோம்.

பிங்க் நிறத்திற்குப் பின்னணியில் உள்ள உண்மை

பிங்க் நிறத்திற்குப் பின்னணியில் உள்ள உண்மை

இவற்றின் நிறத்திற்குப் பின்னணியில் உள்ள காரணம் பற்றி அறிந்தபோது, இந்த டால்பின்களின் நடத்தை, உணவுப் பழக்கம் மற்றும் சூரிய ஒளியின் வெளிப்பாடு ஆகியவற்றால் தான் இவை இந்த விசித்திரமான பிங்க் நிறத்தைப் பெற்றிருக்க முடியும் என்று கூகிள் தகவல் தெரிவிக்கிறது. பிங்க் டால்பின்கள் போட்டோ (boto), பஃபோ (bufeo) அல்லது பிங்க் ரிவர் டால்பின் (pink river dolphin) என்று அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் அமேசான் நீர் பகுதியில் காணப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய சிக்கல்: இந்த 8 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்.. கூகிள் வெளியிட்ட அவசர அறிவிப்புஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய சிக்கல்: இந்த 8 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்.. கூகிள் வெளியிட்ட அவசர அறிவிப்பு

பூமியில் உயிர் வாழும் பிங்க் டால்பின்களின் எண்ணிக்கை இவ்வளவு குறைவா?

பூமியில் உயிர் வாழும் பிங்க் டால்பின்களின் எண்ணிக்கை இவ்வளவு குறைவா?

இது 2008 ஆம் ஆண்டில், இந்த இனங்களின் எண்ணிக்கை போக்குகள் மற்றும் அச்சுறுத்தல்களின் தாக்கம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, சர்வதேச பற்றாக்குறைக்கான சர்வதேச சங்கத்தால் (IUCN) தரவரிசைப்படுத்தப்பட்டது. சமீபத்திய தகவல் படி, இப்போது வரை வெறும் 6,00,000 டால்பின்கள் மட்டுமே பூமியில் உயிர் வாழ்கின்றன, இதில் வெறும் 2000 டால்பின்கள் மட்டுமே பிங்க் நிற டால்பின்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டால்பின் பற்றிய உங்களுடைய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Rare Pink Dolphins Spotted On The Video Will Leave You Mesmerised : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X