ஐன்ஸ்டீன் சொன்னது உண்மையானது! இரண்டு கருந்துளைகள் ஒன்றிணைத்த வீடியோ ஆதாரம்!

|

விண்வெளியில் இதுவரை காணப்படாத ஒரு அறிய நிகழ்வு நடந்தேறியுள்ளது. இந்த நிகழ்வைக் கண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களே திகைத்துப் போய் உள்ளனர். பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளைகளைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரியும் தானே? அந்த கருந்துளைகளைப் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவலைத் தான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தற்பொழுது வெளியிட்டுள்ளனர். என்ன நிகழ்ந்தது கருந்துளை உள்ள பகுதியில் என்று பார்க்கலாம்.

விண்வெளியில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகள்

விண்வெளியில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகள்

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எப்பொழுது விண்வெளியில் ஏதேனும் புதிதாக அல்லது விசித்திரமாக ஏதும் நிகழ்வுகள் நடக்குமா என்று கண்காணித்துக்கொண்டே தான் இருக்கின்றனர். விண்வெளியில் நடக்கும் சில வினோதமான மற்றும் சுவாரசியமான நிகழ்வுகள் விண்வெளி பற்றிய புதிய புரிதலையும், புதிய வாயிலுக்கான சாத்தியக்கூற்றையும் அதிகரிக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் நம்புகின்றனர்.

கருந்துளை பற்றிய மர்ம முடிச்சுகள்

கருந்துளை பற்றிய மர்ம முடிச்சுகள்

இப்படி விசித்திரமான நிகழ்வுகளைத் தேடித் திரியும் ஆராய்ச்சியாளர்களுக்குக் கருந்துளைகள் இன்னும் பல விசித்திரமான மர்ம முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டே தான் இருக்கிறது. கருந்துளைகள் பற்றிய உண்மைகள் இன்னும் மர்மமாகவே உள்ளது, சரியாக எதுவும் இன்னும் விளக்கப்படவில்லை. ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விவரித்த கருந்துளை விளக்கங்கள் இப்பொழுது கொஞ்சம் கொன்ஜமாக உண்மை என்று நம்பும்படி அமைந்து வருகிறது.

Airtel அதிரடி! 1 வருட Disney+ Hotstar சந்தா இலவசம்; தினமும் 3 ஜிபி டேட்டா - விலை என்ன தெரியுமா?Airtel அதிரடி! 1 வருட Disney+ Hotstar சந்தா இலவசம்; தினமும் 3 ஜிபி டேட்டா - விலை என்ன தெரியுமா?

கருந்துளையின் முதல் புகைப்படம்

கருந்துளையின் முதல் புகைப்படம்

கடந்த 2019 ஆம் ஆண்டு கருந்துளையின் முதல் புகைப்படம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்டது. இதை உலகமே வியப்புடன் பார்த்தது, அதற்குப் பின் கருந்துளையை உன்னிப்பாகக் கவனித்து வந்த ஆராய்ச்சியாளர்கள், தற்பொழுது இன்னொரு சுவரைசியமான நிகழ்வைக் கருந்துளை பகுதியில் கண்டுள்ளனர். இதுவரை ஒரு கருந்துளை தான் உள்ளது என்று நினைத்தவர்களுக்கு இந்த செய்தி இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று இணையும் நிகழ்வு

கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று இணையும் நிகழ்வு

காரணம், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இரண்டு கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று இணைவதைக் கூர்ந்து கவனித்துள்ளனர். இத்தாலியில் உள்ள லேசர் இன்டெர்பிரோமீட்டர் கிராவிடஷனல்-வேவ் அப்சர்வேட்டரி (LIGO) அண்ட் விர்கோ இன்டெர்பிரோமீட்டர் இன் பைசா ஆராய்ச்சியாளர்கள் இந்த இரண்டு கருந்துளைகள் ஒன்றாக இணைவதைப் பதிவு செய்துள்ளனர்.

Google Photos 'சவுண்ட் இல்லா'மல் செய்து வரும் வேலை இதுதான்! இப்படி ஒரு அம்சமா?Google Photos 'சவுண்ட் இல்லா'மல் செய்து வரும் வேலை இதுதான்! இப்படி ஒரு அம்சமா?

அமெரிக்க இயற்பியல் சங்கத்தில் வெளியிடப்பட்ட தகவல்

அமெரிக்க இயற்பியல் சங்கத்தில் வெளியிடப்பட்ட தகவல்

கருந்துளை இணைப்பு பற்றிய செய்தி முதலில் ஏப்ரல் 18 அன்று அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் ஆன்லைன் கூட்டத்தில் பகிரப்பட்டுள்ளது.LIGO என்பது ஹான்போர்ட், வாஷிங்டன் மற்றும் லிவிங்ஸ்டன், லூசியானா அடிப்படையாகக் கொண்ட இரட்டை உணர்கருவியாகும், இது சேர்ந்து ஒற்றுமையாக ஒரு ஜோடியாகச் செயல்படுகிறது.

GW190412 நிகழ்வு என்றால் என்ன?

GW190412 நிகழ்வு என்றால் என்ன?

GW190412 என அடையாளம் காணப்பட்ட இந்த நிகழ்வு ஒரு வீடியோவிலும் ஆராய்ச்சியாளர்களால் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பான கண்டுபிடிப்புகள் மற்றும் தகவல்கள் அர்விக்ஸ் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Vodafone இப்படி ஒரு காரியத்தை தமிழ்நாட்டிற்கு செய்திருக்க கூடாது! இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்!Vodafone இப்படி ஒரு காரியத்தை தமிழ்நாட்டிற்கு செய்திருக்க கூடாது! இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்!

2.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடந்த நிகழ்வு

2.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடந்த நிகழ்வு

ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளில் பகிரப்பட்டுள்ள தகவல்களின்படி, GW190412 நிகழ்வு பூமியிலிருந்து சுமார் 1.9 முதல் 2.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடந்ததுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த இரண்டு கருந்துளைகளில் ஒரு கருந்துளை சுமார் 8 சூரிய வெகுஜனங்களின் எடை கொண்டது என்றும், அதேபோல் மற்றொரு கருந்துளை சுமார் 30 சூரிய வெகுஜனங்களின் எடை கொண்டவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருந்துளைகள் ஒன்றிணைந்த வீடியோ ஆதாரம்

கருந்துளைகள் ஒன்றிணைந்த இந்த அரிய நிகழ்வு, கருந்துளைகளின் இணைப்பு மற்றும் ஈர்ப்பு அலைகள் குறித்த ஆய்வுக்கு முற்றிலுமாக புதிய கதவுகளைத் திறந்துள்ளது என்று ஆராய்ச்சியளர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய கருந்துளை, பெரிய கருந்துளையைச் சுற்றி வந்து ஒன்றுடன் ஒன்று இணைவதை இந்த வீடியோ பதிவில் நீங்கள் தெளிவாகக் காணலாம்.

இனி கடல் உணவுகளை வாங்க பிரச்சனை இருக்காது.! தமிழக அரசின் மீன்கள் செயலி அறிமுகம்.!இனி கடல் உணவுகளை வாங்க பிரச்சனை இருக்காது.! தமிழக அரசின் மீன்கள் செயலி அறிமுகம்.!

ஐன்ஸ்டீன் கோட்பாட்டை ஆதரித்த கருந்துளை நிகழ்வு

ஐன்ஸ்டீன் கோட்பாட்டை ஆதரித்த கருந்துளை நிகழ்வு

இந்த சுவாரசியமான நிகழ்வு ஆராய்ச்சியாளர்களைத் திகைத்துப் போக வைத்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த அறிய நிகழ்வு ஐன்ஸ்டீனால் முன்மொழியப்பட்ட 'தியரி ஆஃப் ஜெனரல் ரிலேட்டிவிட்டி' கோட்பாட்டை ஆதரித்து, ஐன்ஸ்டீன் கூறிய தகவல்கள் உண்மை என்று மீண்டும் நிரூபித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Rare Phenomenon of Two Black Holes Merging Proves The Theory Of General Relativity Proposed By Einstein : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X