70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் 'லியோனார்ட்' வால் நட்சத்திரம்.. வெறும் கண்ணிலேயே பார்க்கலாமா?

|

பூமிக்குரியவர்களே இந்த செய்தி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய அருமையான செய்தி, பிரபஞ்சத்தின் அழகை ரசிக்கக் கிடைக்கும் வாய்ப்பாகக் கூட இதை நாம் பார்க்கலாம். நம் பூமியின் வழியில் இப்போது ஒரு வாழ் நட்சத்திரம் வருகிறது. இந்த காஸ்மிக் பொருள், இந்த ஆண்டு மட்டுமே காணக்கூடிய வாய்ப்பாக அமைகிறது. இந்த வால்மீனின் வரவிருக்கும் வருகையானது சுமார் 70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியுடன் அதன் முதல் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துகிறது. பூமி மக்கள் இதை வெறும் கண்களால் பார்க்க முடியும்.

70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்

70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்

மவுண்ட் லெமன் ஆய்வகத்தில் அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரிகோரி ஜே. லியோனார்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வால் நட்சத்திரத்திற்கு சி/2021 ஏ1 லியோனார்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரம் எப்போது பூமிக்கு மிக அருகில் வருகிறது, இதை மக்கள் எந்த திசை வானில் பார்வையிடலாம், எந்த நேரத்தில் இதை மக்கள் தெளிவாக வெறும் கண்களில் பார்க்கலாம் என்பது போன்ற அனைத்து தகவலையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த அரிய வால் நட்சத்திரத்தை மக்கள் எப்போது பார்க்கலாம்? யாரெல்லாம் பார்க்கலாம்?

இந்த அரிய வால் நட்சத்திரத்தை மக்கள் எப்போது பார்க்கலாம்? யாரெல்லாம் பார்க்கலாம்?

தற்போதைய கணிப்புகளின் படி, இந்த வால் நட்சத்திரம் டிசம்பர் மாதத்தில் பூமியைக் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் உள்ள பல இடங்களில் இந்த வால் நட்சத்திரத்தை மக்கள் வெறும் கண்களில் காணலாம். ஆனால், டெல்லி வாசிகளுக்கு இந்த வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது. டெல்லியில் உள்ள மாசுபாடு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் ஒரு நட்சத்திரத்தைக் கூட பார்க்க இயலாது. பூமியில் உள்ள மற்ற மக்கள் அனைவரும் இந்த விஷயத்தில் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் தான்.

பூமி போல் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை 'காந்தப்புலம்' உருவாக்கும் திட்டம்.. இது எப்படி சாத்தியம்?பூமி போல் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை 'காந்தப்புலம்' உருவாக்கும் திட்டம்.. இது எப்படி சாத்தியம்?

எந்த தேதியில் என்ன நேரத்தில் இந்த வால் நட்சத்திரத்தைப் பார்க்கலாம்?

எந்த தேதியில் என்ன நேரத்தில் இந்த வால் நட்சத்திரத்தைப் பார்க்கலாம்?

காரணம், உங்கள் வாழ்வில் ஒரு முறை மட்டுமே இந்த வால் நட்சத்திரத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கப் போகிறது. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, அநேகமாக இந்த வால் நட்சத்திரம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 16 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் தெளிவான வால் நட்சத்திரம் மக்களின் கண்ணுக்கும் நன்றாகத் தெரியும். உச்சக்கட்டத் தெரிவு வரும் டிசம்பர் 13 ஆம் தேதி அன்று நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த திசை வானில் இந்த வால் நட்சத்திரம் தெளிவாகத் தெரியும்?

எந்த திசை வானில் இந்த வால் நட்சத்திரம் தெளிவாகத் தெரியும்?

நீங்கள் வடக்கு அரைக்கோளத்தில் இருந்தால், தெற்குப் பகுதியில் உள்ள மேல் வானில் இந்த வால் நட்சத்திரத்தை நீங்கள் காண்பீர்கள். பூமியில் வாழும் மனிதர்களுக்கு வால் நட்சத்திரத்தின் அரிதான தோற்றம் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையின் காரணமாகும். பூமியில் இப்போது உயிருடன் இருக்கும் எவருக்கும் அடுத்து இந்த அரிய வால் நட்சத்திரத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அது உள் சூரிய மண்டலத்தில் நுழைந்தவுடன், சூரியனின் ஈர்ப்பு அதை மீண்டும் ஆழமான விண்வெளியில் கொண்டு சென்று பறக்கவிட்டுவிடும்.

ரோபோக்கள் இனப்பெருக்கம் செய்யாதுனு யார் சொன்னா? அதுல தான் ரோபோக்கள் ஸ்பெஷல்லே.. விஞ்ஞானிகள் சாதனை.!ரோபோக்கள் இனப்பெருக்கம் செய்யாதுனு யார் சொன்னா? அதுல தான் ரோபோக்கள் ஸ்பெஷல்லே.. விஞ்ஞானிகள் சாதனை.!

வால் நட்சத்திரத்தின் பிரகாசம் அதிகமாகி வருகிறதா? என்ன காரணம்?

வால் நட்சத்திரத்தின் பிரகாசம் அதிகமாகி வருகிறதா? என்ன காரணம்?

அங்கு அது நீண்ட காலம் பயணத்தில் இருக்கும். இங்கு நீண்ட காலம் என்பது சில பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. வால் நட்சத்திரம் பூமி நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதன் பயணம் நீடிக்க - நீடிக்க இதன் பிரகாசம் அதிகமாகி வருகிறது. ஸ்கை அட் நைட் உடனான உரையாடலில், வால்மீன் ஆர்வலர் ஜோஸ் ஜே. சாம்போ கூறுகையில், அக்டோபரில் ஓரிரு வாரங்களில் வால்மீனின் பிரகாசம் "வியத்தகு" அதிகரிப்பைக் கண்டதாகக் கூறியுள்ளார். இது மிகவும் வேகமான வேகத்தில் உள் அமைப்பை நோக்கி வீசுவதைக் குறிக்கிறது.

இந்த வால் நட்சத்திரத்தால் பூமி ஏதேனும் ஆபத்து இருக்கிறதா?

இந்த வால் நட்சத்திரத்தால் பூமி ஏதேனும் ஆபத்து இருக்கிறதா?

அதிர்ஷ்டவசமாக, வால்மீன் நமது கிரகத்திற்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பூமியைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒரு வேலை இது நேராக பூமியை நோக்கி வந்திருந்தாள் என்னவாகியிருக்கும் என்று யோசித்தால், நிச்சயமாக நம்மால் அதிக அளவில் எதுவுமே செய்ய முடிந்திருக்காது என்பது தான் உண்மை. நிச்சயமாக அப்படியான சூழலில் பூமி ஆபத்தை மட்டுமே சந்தித்திருக்கும். இப்படியான சிக்கல்களை எதிர்கொள்ள நாசா இப்போது புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

கயிறுடன் கட்டி போடப்பட்ட 1000 ஆண்டு பழமையான மம்மி.. என்ன காரணம்? இந்த மம்மி யாராக இருக்கும்?கயிறுடன் கட்டி போடப்பட்ட 1000 ஆண்டு பழமையான மம்மி.. என்ன காரணம்? இந்த மம்மி யாராக இருக்கும்?

நாசாவின் சிறுகோள் அளிக்கும் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

நாசாவின் சிறுகோள் அளிக்கும் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

பூமி நோக்கி வரும் பெரிய சிறுகோள் மற்றும் ஆபத்தான விண்கற்களைத் திசை திருப்பவும், அவற்றை செயற்கைக்கோள் மூலம் தாக்குதல் நடத்தி அழிக்கவும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வால் நட்சத்திரம் பூமியைக் கடந்து பறக்கும் போது அதை நீங்கள் கவனிக்க மறக்காதீர்கள். உங்கள் காலெண்டர்களில் வால் நட்சத்திரம் தெரியும் நாட்களைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த வாரம் நிகழும் கிரகணம் எப்போது நிகழ்கிறது?

இந்த வாரம் நிகழும் கிரகணம் எப்போது நிகழ்கிறது?

வால் நட்சத்திரத்தைப் பார்வையிட்ட பின்னர், கீழே உள்ளக் கருத்துகளில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த வாரம் நிகழும் கிரகணம் பற்றியும் அறிந்துகொள்ள எங்கள் பக்கத்தில் இருக்கும் பதிவுகளைப் பார்வையிடுங்கள். தொழில்நுட்பம், விண்வெளி, அறிவியல் மற்றும் பூமி தொடர்பான சுவாரசியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனலை பார்வையிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Rare Leonard Comet Is Heading Earths Way After 70000 Years : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X