அரிய வால்மீன் நட்சத்திரம் பார்க்க ரெடியா? அடுத்த 20 நாட்களுக்கு இதை எப்போ பார்க்கலாம்?

|

சூரியனுக்கு மிக அருகில் சென்று வந்த மிக அரிதான நியோவைஸ் என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. பூமிக்கு மிக மிக நெருக்கமாக வந்து செல்லும் இந்த அரிய வால்நட்சத்திரத்தை இந்திய மக்கள் அடுத்த 20 நாட்களுக்குப் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி எங்கிருந்து பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

 நட்சத்திரம் தான் மிகவும் அதிக

கடந்த மார்ச் மாதம் சூரியனுக்கு மிக அருகில் சி/2020 எப்3 (C/2020 F3) என்ற வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு தற்பொழுது நியோவைஸ் (NEOWISE) என்று பெயரிட்டுள்ளனர். பூமியிலிருந்து 200 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த அரியவால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரங்களில், இந்த நியோவைஸ் நட்சத்திரம் தான் மிகவும் அதிக வெளிச்சம் கொண்ட வால் நட்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன் கிரகத்தைக் கடந்து

நியோவைஸ் வால் நட்சத்திரம் வைஸ் (WISE - Wide-field Infrared Survey Explorer) என்ற தொலைநோக்கி மூலம்
கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் தான் நியோவைஸ் என்று பெயரிடப்பட்டது. இந்த வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டபோது சூரியனுக்கு மிக அருகில் சென்றுகொண்டிருந்தது. தற்பொழுது, இந்த வால்நட்சத்திரம் புதன் கிரகத்தைக் கடந்து நாளை பூமிக்கு மிக அருகாமையில் வருகிறது. சூரியனைக் கடந்த பின் இதன் ஒளி அதிகமாகியுள்ளது.

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்!அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்!

வால்நட்சத்திரத்தில் அதிக

இந்த நியோவைஸ் வால்நட்சத்திரத்தில் அதிக அளவில் தூசிகள் மற்றும் துகள்கள் இருக்கிறது. இதனால், இந்த வால் நட்சத்திரம் சூரியனைக் கடந்த பொழுது, அதிலிருந்த தூசிகள் மற்றும் துகள்கள் தீப்பிடித்து இன்னும் கூடுதல் வெளிச்சத்துடன் பயணம் செய்து, புதன் கிரகத்தைக் கடந்து தற்பொழுது பூமி நோக்கி வருகிறது. இதன் நியூக்ளியஸ் வரை புகை சூழ்ந்த கடினமான பொருளால் சூழப்பட்டுள்ளது
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முழு நீட்டத்தையும் பார்க்க

புதன் கிரகத்தைக் கடக்கும் பொழுது கூடுதல் தூசி மற்றும் துகள்களை இந்த வால்நட்சத்திரம் தன்னுடன் இழுத்து வருகிறது. இந்த நியோவைஸ் வால் நட்சத்திரத்தின் அளவு சுமார் 3 மைல்கல் சுற்றளவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இதன் வால் பகுதி நீண்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெறும் கண்களால் இதன் முழு நீட்டத்தையும் பார்க்க இயலாது, பைனாகுலர் அவசியம்.

சத்தமின்றி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களின் பிரிமியம் திட்டங்களுக்கு தடை.! டிராய் அதிரடி.!சத்தமின்றி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களின் பிரிமியம் திட்டங்களுக்கு தடை.! டிராய் அதிரடி.!

பைனாகுலர் பயன்படுத்த வேண்டும் என்று கோளரங்கம் தலைவர்

ஜூலை 14ம் தேதி முதல் துவங்கி ஆகஸ்ட் மாதம் இறுதி வரை இந்த வால் நட்சத்திரத்தை இந்திய மக்கள் காண முடியும். பூமிக்கு மிக அருகில் வருவதால் மாலை நேரத்தில் வடக்கு வானில் இதை நீங்கள் எளிதாகப் பார்க்க முடியும். சில இடங்களில் வெறும் கண்களால் பார்க்க முடியும், இந்த வால்நட்சத்திரத்தில் முழு தோற்றத்தையும் பார்க்க மக்கள் பைனாகுலர் பயன்படுத்த வேண்டும் என்று கோளரங்கம் தலைவர் கூறியுள்ளார். இதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Rare Comet Neowise To Be Visible In India For Next 20 days Till August: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X