ரஜினிகாந்த் அறிவித்த இரண்டு முக்கிய நிகழ்வுகள்- பேஸ்புக்கிற்கு போட்டியாக புதிய செயலி அறிமுகம் செய்யும் ரஜினி!

|

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனக்கு இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்று மக்களின் அன்பினாலும் ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு தனக்கு வழங்குகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தாதா சாகேப் பால்கே விருதானது மத்திய அரசினால் இந்திய திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். இந்த விருதானது அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பலருக்கும் தமிழ் திரையுலகை சேர்ந்த சிவாஜி, கே.பாலசந்தர் ஆகியோருக்கும் இந்த விரது வழங்கப்பட்டுள்ளது. தாதா சாகேப் பால்கே விருதினை தான் எதிர்பார்க்கவே இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இரண்டு முக்கிய நிகழ்வுகள்

இரண்டு முக்கிய நிகழ்வுகள்

நடிகர் ரஜினிகாந்த் இரண்டு முக்கிய நிகழ்வு என குறிப்பிட்டதில் ஒன்று தாதா சாகேப் பால்கே விருது ஆகும். இரண்டாவது நிகழ்வானது ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா விசாகன் அவருடைய சொந்த முயற்சியில் HOOTE என்கிற செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த இருக்கிறார். இதுகுறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகளை முழுமையாக பார்க்கலாம்.

HOOTE என்கிற செயலி

HOOTE என்கிற செயலி

இன்று இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடக்க இருப்பதாக குறிப்பிட்ட நடிகர் ரஜினிகாந்த், இரண்டாவது நிகழ்வாக அவர் மகள் சௌந்தர்யா விசாகன் அவருடைய சொந்த முயற்சியில் HOOTE என்கிற செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த இருப்பதாக குறிப்பிட்டார். HOOTE என்ற செயலி மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளை விஷயங்களை இனி அவர்களது குரல்கள் மூலமாகவே எந்த மொழியிலும் இந்த HOOTE ஆப் மூலமாக பதிவிடலாம்.

தனது குரலில் வெளியீடு

தனது குரலில் வெளியீடு

அதோடு ரஜினிகாந்த் இந்த HOOTE ஆப் செயலியை தனது குரலில் பதிவிட்டு தொடங்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் பதிவிட்ட இந்த HOOTE ஆப் குறித்த பதிவு சராசரியாக கடந்தவிட முடியாமல், உலக நாடுகளில் உள்ள பல பெரிய நிறுவனங்களின் கவனங்களை திசை திருப்பும் விதமாக இருக்கிறது. பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு மாற்றாகவே இந்த செயலி இருக்கும் எனவும் கருதப்படுகிறது.

சமூகவலைதளங்களில் மக்கள் கருத்துகள்

சமூகவலைதளங்களில் மக்கள் கருத்துகள்

எழுத்து வடிவை மட்டுமே பிரதானமாக இதுவரை சமூகவலைதளங்களில் மக்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளங்களில் அடுத்தக் கட்ட முன்னேற்றம் என்று பார்க்கையில் எழுத்த வடிவத்தில் டைப் செய்து நேரத்தை செலவிடுவதை விட எளிதாக குரல் வடிவிலேயே தகவலை பரிமாற பயனர்கள் விரும்புகின்றனர். இந்த HOOTE ஆப் ஆனது அவர்களுக்கு ஏற்ப அவர்களது மொழிகளிலேயே கருத்துகளை பரிமாற அனுமதிக்கிறது.

பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டா

சமூகவலைதளங்களில் இதுவரை பிரதானமாக இருப்பது பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டா போன்ற தளங்கள் ஆகும். இந்த தளங்கள் அனைத்தும் அயல்நாட்டு செயலிகளே ஆகும். உலகளவில் இரண்டாவது அளவிலான மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் போட்டிப்போட்டுக் கொண்டு வெளிநாட்டவர்கள் முதலீடு செய்து தங்களது நிறுவனங்களை நிறுவி வருகின்றனர். இந்த நிலையில் உலகளவில் இருக்கும் பயன்பாடுகளுடன் போட்டியிடும் வகையில் இருக்கும் இந்திய தயாரிப்புகள் என்பது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

மேட் இன் இந்தியா திட்டம்

மேட் இன் இந்தியா திட்டம்

மத்திய அரசு அறிவித்த மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு தயாரிப்புகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டம் தொழில் மறஅறும் வர்த்தக வளர்ச்சியை ஊக்கவிக்க அறிவிக்கப்பட்டது. அதன்படி பல்வேறு சாதனங்களும் பயன்பாடுகளும் இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை மாபெரும் உற்பத்தி மையமாக்கவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் பல பயன்பாடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே உலகளவில் உள்ள செயலிகளுடன் போட்டியிடும் வகையில் HOOTE என்ற ஆப் வெளியிடப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Rajinikanth Going to launch HOOTE APP with his voice: People can express the word through their voice

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X