தம்பி முதல்ல கோப பட்டாரு, அப்புறம் கண்டுபிடிச்சாரு..!

Posted By:

ஊரெல்லாம் ஒரே பனி மழை, எங்கயுமே கரண்ட் இல்ல, எந்த போன்லயும் சார்ஜ் இல்ல. இந்த மாதிரி ஒரு நிலைமையில நாம மிஞ்சி மிஞ்சி போனா என்ன செய்வோம், நாசமா போன இபி காரன் என்னதான் பண்றானோனு திட்டி தீர்ப்போம், இல்லனா எப்போடா கரண்ட் வரும்னு சாமிய வேண்டிப்போம், அப்படித்தானே..!

தம்பி முதல்ல கோப பட்டாரு, அப்புறம் கண்டுபிடிச்சாரு..!

உத்ரகாண்டை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவாரான ராஜேஷ் ஆதிக்கரி அப்படி செய்யவில்லை. முதலில் கொஞ்சம் கோப பட்டு விட்டு பின் பொறுமையாக உக்காந்து, எளிமையான கண்டுபிடிப்பை நிகழ்த்தினான்..!

டிராஃபிக் போலீசை கலாய்க்கலாம், ஆனா கலாய்க்க கூடாது..!

ஒரு வாட்டர் ப்ரூஃப் ஷூ ஒன்றை உருவாக்கி, அதனுள் ஸ்பிரிங் மற்றும் டைணமோவை பொருத்தி, நடக்கும் போது அதாவது கால்கள் உயர்த்தப்படும் போது, ஸ்பிரிங் தளரும். அதன் மூலம் டைணமோ சக்தியை சேமிக்கும்படி உருவாக்கியுள்ளான்..!

தம்பி முதல்ல கோப பட்டாரு, அப்புறம் கண்டுபிடிச்சாரு..!

அதாவது அந்த ஷூ வை போட்டுக்கொண்டு நடக்க நடக்க சார்ஜ் ஏறும்படி உருவாக்கியுள்ளான். ஷூ மூலம் சக்தி சேமித்து மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் இந்த தொழில்நுட்ப முறை இந்தியாவில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது, கோபம் இருக்குற இடத்துல தான் விஞ்ஞானமும் இருக்கும்..!

Read more about:
English summary
Rajesh Adhikari is a 12th class student, invents shoes to charge mobile.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot