Jio, Airtel பிராட்பேண்ட் கதை முடிஞ்சது.. 30Mbps, 400 சேனல், 10 OTT.. வந்தது புது RailWire பிளான்!
ரெயில்டெல் (RailTel) வழங்கும் கம்யூனிட்டி அடிப்படையிலான பிராட்பேண்ட் இணைய சேவையான ரெயில்வயர் (RailWire) ஆனது ஃப்ரீடம் பிளான் (Freedom Plan) என்கிற புதிய சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஓடிடி (OTT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஓவர்-தி-டாப் கன்டென்ட்களுடன் கூடிய ஒரு ஹோம் இன்டர்நெட் பிளானாகும்.
ரெயில்வயர் அறிமுகம் செய்துள்ள புதிய ஃப்ரீடம் பிளானின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டமானது 30எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடை (30 Mbps Internet Speed) வகிக்கும். கூடவே 400 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் (400+ Live TV channels) மற்றும் 200 க்கும் மேற்பட்ட கேம்களை (200+ games) வழங்குகிறது.

ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை, இந்த ஃப்ரீடம் பிளான் ஆனது, மிகவும் சமீபத்தில் அறிமுகமான பிரசார் பாரதியின் (Prasar Bharati) ஓடிடி இயங்குதளமான வேவ்ஸ்-க்கான (WAVES) அணுகலை வழங்குகிறது. வேவ்ஸ் தவிர்த்து மேலும் 9 பிரீமியம் ஓடிடி தளங்களுக்கான (9 Premium OTT) அணுகல்களையும் வழங்குகிறது.
பிளேபாக்ஸ்டிவி (PlayboxTV) சேவையை ஓடிடி ஆக்ரகேட்டர் (OTT aggregator) ஆக இணைத்து, பிரசார் பாரதி நிறுவனத்தின் ஓடிடி பிளாட்ஃபார்ம் ஆன வேவ்ஸ்-ஐ தனது ஓடிடி நன்மையில் கீழ் சேர்த்த முதல் தொலைத்தொடர்பு ஆபரேட்டர் - ரெயில்வயர் ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நன்மைகள் எல்லாம் ஒருபக்கம் இருக்க ரெயில்வயர் அறிமுகம் செய்துள்ள ஃப்ரீடம் பிளானின் விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ரெயில்வயர் தளத்தில் கூட இந்த புதிய பிளான் இன்னும் சேர்க்கப்படவில்லை. அங்கே ஏற்கனவே உள்ள 50 எம்பிபிஎஸ், 100 எம்பிபிஎஸ், 125 எம்பிபிஎஸ், 150 எம்பிபிஎஸ், 200 எம்பிபிஎஸ், 250 எம்பிபிஎஸ் மற்றும் 300 எம்பிபிஎஸ் திட்டங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன.
50 எம்பிபிஎஸ் திட்டத்தின் விலை ரூ.599 ஆக இருப்பதால், புதிதாக அறிமுகமான 30 எம்பிபிஎஸ் ஃப்ரீடம் பிளான் ஆனது எப்படியும் ரூ.599-ஐ விட மலிவான விலை நிர்ணயத்தையே பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக உள்ள 100 எம்பிபிஎஸ் திட்டமானது ரூ.799 க்கும், கடைசியாக உள்ள 300 எம்பிபிஎஸ் திட்டம் ரூ.1,399 க்கும் அணுக கிடைக்கிறது.
பிரசார் பாரதியின் வேவ்ஸ் ஓடிடி தளத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை, இது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை நவீன ஸ்ட்ரீமிங்குடன் இணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும், இது சமகால நிகழ்ச்சிகளுடன் ராமாயணம், மகாபாரதம், சக்திமான் மற்றும் ஹம் லாக் போன்ற கிளாசிக் நிகழ்ச்சிகளின் கலவையை வழங்கும் என்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
பிரசார் பாரதியின் வேவ்ஸ் ஓடிடி தளத்தில் 12 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளின் கீழ் கன்டென்ட் அணுக கிடைக்கிறது. அவைகள் - தமிழ், இந்தி, ஆங்கிலம், பெங்காலி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் அஸ்ஸாமி ஆகிய மொழிகளும் அடங்கும்.
மேலும் வேவ்ஸ் ஓடிடி இயங்குதளமானது 10 வகையான இன்ஃபோடெயின்மென்ட் வகைகளையும் கொண்டுள்ளது மற்றும் வீடியோ ஆன் டிமாண்ட், இலவச கேமிங், ரேடியோ ஸ்ட்ரீமிங், லைவ் டிவி ஸ்ட்ரீமிங், 65 லைவ் சேனல்கள், வீடியோ மற்றும் கேமிங் கன்டென்ட்டிற்கான பல இன்-ஆப் ஒருங்கிணைப்புகளை வழங்குகிறது.
சுவாரசியமாக வேவ்ஸ் ஓடிடி தளமானது ஆன்லைன் ஷாப்பிங்கையும் கூட வழங்குகிறது. இது டிஜிட்டல் வர்த்தகத்திற்கான, ஓஎன்டிசி (ONDC) என்று சுருக்கமாக அழைக்கப்படமும் ஓப்பன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (Open Network for Digital Commerce) ஆதரவு கொண்ட இகாமர்ஸ் பிளாட்பாரம் வழியாக அணுக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications